ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "thumb|[[மோனா லிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற கலைநயமிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 12:
பல்வேறு வகையான வண்ணப்பூச்சுகள் ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வண்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாகுத்தன்மை, கரைதிறன், வண்ணப்பூச்சின் இயல்புகள் போன்றவற்றுடன் உலரும் நேரம் ஆகிய கூறுகள் கணக்கிடப்படுகின்றன.
[[File:Honoré Daumier 008.jpg|thumb|left|Honoré Daumier (1808–79), ''ஓவியர்'' சட்டத்தில் இருக்கும் எண்ணெயில் தூரிகையினால் ஏற்படும் பார்வைக்குத் தெரியும் வரிகள் உள்ளன]] எண்ணெய் ஓவியம் என்பது [[நிறமி]]களைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதை எண்ணெய் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகும். இவ்வகை எண்ணெய்களை தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) அல்லது அதிலிருந்து பெறப்படும் சாம்பிராணி (frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து ''நெய்வனங்கள்'' (varnishes) தயாரிக்கப்படுகின்றன. அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் பயன்படும் பொருளாகும். பயன்படுத்தப்படும் எண்ணெயை பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.
வரிசை 19:
அதன் பிறகு முக்கியத்துவம் உணரப்பட்டது
[[படிமம்:Pastelkrijt.jpg|200px|thumb|right|இடது|வண்ணக்கோல்]]
வண்ணக்கோல் என்பது வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகமாகும்.
எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.வண்ணக்கோல் பூச்சுகளின் விளைவு வேறு எந்தவொரு ஓவிய செயல்முறையையும் விட இயற்கையான உலர்ந்த நிறமிகளுடன் நெருக்கமாக ஒத்து இருக்கிறது<ref>Mayer, Ralph. The Artist's Handbook of Materials and Techniques. Viking Adult; 5th revised and updated edition, 1991. {{ISBN|0-670-83701-6}}</ref>.
[[File:Jungle Arc.jpg|thumb|left|Ray Burggraf என்பவரால், 1998 இல், மரத்தில் செய்யப்பட்ட காட்டு வளைவு (''Jungle Arc'') என அழைக்கப்பட்ட வண்ணக்கூழ்ம ஓவியம்]]
செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய [[வண்ணம்|வண்ண]] நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு [[தண்ணீர்]] , இந்தச் செயற்கை வண்ணக் கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பைப் பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட ''அக்ரலிக்'' ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.
வரிசை 30:
[[File:Joseph Mallord William Turner 017.jpg|right|thumb|200px|<small>J.M.W.Turner என்பவரால், 1802 இல், நீர்வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட, இயற்கை நிலப்படம் ஒன்றைக் காட்டும் வண்ண ஓவியம்</small> - <small>நீர்வர்ண ஓவியம்</small>]]
[[நீர் வர்ணம்]] என்பது நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாகும். மிகவும் பாரம்பரியமாக நீர் வர்ண ஓவியங்கள் காகிதங்களில் தீட்டப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் ஓலை, மரப்பட்டை காதிதங்கள், தோல்கள், செயற்கைத் துணிகள் போன்ற பொருட்களும் நீர் வர்ண ஓவியம் வரையப் பயன்படுத்தப்படுகின்றன.கிழக்காசியாவில் நீர் வண்ண ஓவியங்களைத் தூரிகை ஓவியங்கள் அல்லது உருட்டோவியங்கள் என்றும் கூறுகின்றனர். [[சீனா|சீன]], [[கொரியா|கொரிய]] மற்றும் [[சப்பான்]] நாடுகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிற நீர் வண்ண ஓவியங்கள் மிகப்பெரும் செல்வாக்கோடு இன்றும் திகழ்கின்றன. இந்தியா, எத்தியோப்பியா நாடுகளிலும் இவ்வகை ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன.
[[File:Sigiriya, Wolkenmädchen 3.jpg|thumb|left|சிகிரியா சுவரோவியங்கள் - சுதை ஓவியம்]]
[[File:Ajanta dancing girl now and then.jpg|thumb|right|<small>19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்<ref>Detail from this [http://collections.vam.ac.uk/item/O115444/copy-of-painting-inside-the-oil-painting-gill-robert/ painting in the V&A]</ref> - சுதை ஓவியம்</small>]]
ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் [[சுதை ஓவியம்]] எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் [[சுவர்]]கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. [[இலங்கை]]யில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள [[சிகிரியா]] குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://sigiriyatourism.com/ | title=Sigiriya | accessdate=10 சூன் 2017}}</ref> அதேபோல் [[இந்தியா]]வில் உள்ள [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளும்]] இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.khanacademy.org/humanities/art-asia/south-asia/buddhist-art2/a/the-caves-of-ajanta | title=The Caves of Ajanta | publisher=Khan Academy | accessdate=10 சூன் 2017}}</ref>
[[File:Landscapes of the Four Seasons.jpg|thumb|left|Sesshū Tōyō வால் 1486 இல் உருவாக்கப்பட்ட, நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களையும்]] காட்டக்கூடிய மை ஓவியம்]]
சில [[நிறமி]]கள் ([[:en:pigment]]) மற்றும் [[சாயம்|சாயங்கள்]] போன்றவற்றாலான [[திரவம்]] கொண்டு ஒரு [[படிமம்]], எழுத்துவடிவம், [[வடிவமைப்பு]] என்பவற்றைத் தீட்டலே மை ஓவியம் எனப்படுகிறது. இவை [[எழுதுகோல்]], [[தூரிகை]], இறகு எழுதுகோல் போன்றவை கொண்டு செய்யப்படலாம். மையானது நிறமி, சாயம், [[பிசின்]], [[உராய்வுநீக்கி]] (Lubricant), இரு திரவ/திரவ அல்லது [[திண்மம்|திண்ம]]/திரவ பதார்த்தங்களுக்கிடையில் [[மேற்பரப்பு இழுவிசை]]யைக் குறைக்கும் பரப்பியங்கி ([[:en:Surfactant]]), [[உடனொளிர்தல்]] போன்ற பல்வேறு வகைப் பதார்த்தங்களைக் கொண்ட சிக்கலான [[கரைப்பான்|கரைப்பானை]]க் கொண்டிருக்கும். இவை மையின் காவியாகத் தொழிற்படுவதுடன், மைக்குரிய அளவான பதம், நிறம், அசைவுத்தன்மை, தடிமன், மற்றும் உலர்கையில் அதற்குரிய சரியான தோற்றம் என்பவற்றைக் கொடுக்க உதவும்.
[[File:Encaustic-Angel-.jpg|thumb|left|Martina Loos என்பவரால் 2009 இல் செய்யப்பட்ட சூடான மெழுகு ஓவியம்]]
நிறமிகள் கலக்கப்பட்ட சூடாக்கப்பட்ட [[தேனீ]] மெழுகு பயன்படுத்தப்படும். ஒரு பசைபோலத் தயாரிக்கப்பட்டு, மரம், கன்வஸ் துணி போன்ற பொருட்களில் ஓவியம் தீட்டப்படும். தேனீ மெழுகு தவிர்ந்த வேறுசில பிசின் அல்லது மெழுகு போன்ற பதார்த்தங்களும் பயன்படுத்தப்படும். [[ஆளி (செடி)]] விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்ற பதார்த்தமும் இங்கு பயன்படுத்தப்படும். விசேட தூரிகைகள், உலோகக் கருவிகள் இங்கு ஓவியத்தைச் சரியாக்கப் பயன்படுத்தப்படும்.
== ஓவிய வகைகள் ==
[[படிமம்:Nice body art.jpg|thumb|right|150px|<small>வண்ணத்துப்பூச்சி ஓவியத்தினை மார்பில் வரைந்திருக்கும் இளம்பெண்மணி - உடல் ஓவியம்</small>]]
வரி 58 ⟶ 55:
இந்த வகையான உடல் ஓவியங்கள், தற்காலிமான பச்சைக்குத்துதலுடனும், மருதாணியைப் பயன்படுத்துவதுடனும் ஒப்பிடப்படுகின்றன.
கேலிச் சித்திரங்கள் என்பவை, அரசியல் நிகழ்வு, சமயம், சமூகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கருத்துகளை நகைச்சுவையாக விளக்கும் ஓவியங்களாகும். இவை பெரும்பாலும் எளிய கோட்டோவியமாக வரையப்பெறுகின்றன. கருத்துப் படங்களைப் போன்ற தீர்க்கமான கருத்துகளை விளக்கியும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் வரையப்பெறுகின்றன.
காபி பொடியைக் கொண்டு வரையப்படும் நவீன ஓவிய வகையைச் சார்ந்த ஓவியமாகும். இந்த ஓவியங்கள் காபி பொடியை தண்ணீர்கள் கலந்து வரையப்படுகின்றன. இவ்வாறு வரைந்த ஓவியங்களில் மீது வார்னிஸ் அடித்து பாதுகாகப்படுகின்றன.
அனைத்துவகையான துணிகளைக் கொண்டு துணி ஓவியம் வரையப்பெறுகிறது. இவ்வகை ஓவியத்தில் ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவையும் இணைத்து அழகு சேர்க்கப்படுகிறது.
கண்ணாடியில் வரைவதற்கேற்ற எழுதுபொருளினால் ஓவியத்தின் கோட்டோவியத்தினை வரைந்தபிறகு வண்ணம் சேர்த்து தயாரிக்கப்படுகின்ற ஓவியமாகும். தற்போது, முப்பரிமாண ஓவியங்களும் மூன்று கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பெறுகின்றன. இவ்வகையான முப்பரிமாண ஓவியங்களில் தொலைவிலுள்ள பொருள்கள் முன்புற கண்ணாடியிலும், நடுவில் உள்ள பொருள்கள் நடுக்கண்ணாடியிலும், மீதக் காட்சிகள் முதல் கண்ணாடியிலும் வரையப்படுகின்றன.
[[படிமம்:Kakadu-painting-hero.jpg|thumb|200px|ஒரு வேடுவன் அல்லது போர்வீரன்.]]
வரி 83 ⟶ 80:
== சமயங்களில் ஓவியம் ==
{{main|இந்துக்களின் ஓவியக் கலை மரபு}}
| |||