மரப்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} '''மரப்பாலம்''' என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம். கிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி மக்கள்: clean up, replaced: முக்கிய காரணம் → முக்கியக் காரணம் using AWB
 
வரிசை 12: வரிசை 12:
==மக்கள்==
==மக்கள்==
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் எளிய முறையிலேயே நடத்துகிறார்கள். 1986 முதல் 2007 வரை [[ஈழப்போர்|ஈழப்போரால்]] பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள், தங்களுடைய வாழ்வாதரத்தை மீளக்கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமத்தில் இருந்து 1990க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணம், கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் எளிய முறையிலேயே நடத்துகிறார்கள். 1986 முதல் 2007 வரை [[ஈழப்போர்|ஈழப்போரால்]] பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள், தங்களுடைய வாழ்வாதரத்தை மீளக்கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமத்தில் இருந்து 1990க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புகள் இல்லாமையே இதற்கு முக்கியக் காரணம், கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிறார்கள்.


[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]

06:21, 3 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

மரப்பாலம் என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம். கிராமத்தின் நடுவே எ5, பிரதான வீதி ஊடறுக்கிறது. குளம், வயல், காடு, மலை என அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த ஒரு கிராமம். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமசேவையாளர் பிரிவு 185 சி. இது மரப்பாலம், சின்னபுல்லுமலை, ராஜபுரம், மாவழியாறு, முல்லுசேனை ஆகிய நான்கு சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும்.

கல்வி

மரப்பாலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலாம் தரம் தொடக்கம் ஐந்தாம் தரம் வரை இயங்குகிறது.

தொழில்

இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மையையே தமது பிரதான தொழிலாக செய்கிறார்கள். சிலர் கால்நடை வளர்ப்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். கிட்டதட்ட 800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பண்ணப்படுகிறது.

ஆலயம்

இங்குள்ள ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம். பிரதான வீதியின் அருகே புளியமர நிழலில் ஆரம்பத்தில் சிறிதாக இருந்த விநாயகப்பெருமானை ஊர்மக்கள் சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்தனர். பின்னர் 1871 ஆண்டு சிறிய குடியேற்ற கிராமமாக இருந்த இடம் நாளடைவில் அபிவிருத்தி அடையத் தொடங்கியது. 1992 ம் ஆண்டு ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா கிராம மக்களால் நடத்தப்படுகிறது. இது தவிர கேதாரகொளரி விரதம், கந்தர் சட்டி விரதம், கார்த்திகை விளக்கீடு என்பனவும் மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனுடய நிர்வாகமுறைமை இங்குள்ள மக்களால் தாங்களாகவே தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

மக்கள்

இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் எளிய முறையிலேயே நடத்துகிறார்கள். 1986 முதல் 2007 வரை ஈழப்போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள், தங்களுடைய வாழ்வாதரத்தை மீளக்கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமத்தில் இருந்து 1990க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புகள் இல்லாமையே இதற்கு முக்கியக் காரணம், கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிறார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=மரப்பாலம்&oldid=460589" இலிருந்து மீள்விக்கப்பட்டது