நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Thiagalingam No edit summary |
||
வரிசை 47:
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. [[குல. சபாநாதன்]] "இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன"<ref>[[குல. சபாநாதன்]], ''நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் தேர்த் திருப்பணிச் சபை மலர்'', [[1957]]</ref> எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
''நாகதீப'', ''மணிபல்லவம்'' ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக ''நயினாதீவு''டன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ''நாகதீவு'' (நகதிவ) எனும் பெயர் [[யாழ்ப்பாணக் குடாநாடு]] முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் விளங்குகின்றது. ஆகவே, "நாகதீப" அல்லது "நாகதீபம்" என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும்.
''நாகதிவயின'' என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக [[கி.பி.]] 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ''நம்பொத்த'' என்ற சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது ''நயினார்தீவு'' அல்லது ''நாகநயினார்தீவு'' அல்லது ''நாகதீவு'' என்ற தமிழ்ப் பெயரின் சிங்கள வடிவமே என்பதற்கு ''நம்பொத்த'' குறிப்பிடும் ஏனைய தீவுகளுக்கான சிங்களப் பெயர்களே சான்றாகும். அவை வருமாறு:
வரிசை 62:
"மணிபல்லவம்" என்ற பெயரும் "நாகதீபம்" என்ற பெயரைப் போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக வழங்கப்பட்டது என்பது நல்லூர் [[சுவாமி ஞானப்பிரகாசர்]], முதலியார் [[சி. இராசநாயகம்]] ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும். போல் பீரிஸ், பரணவிதான போன்ற சிங்கள தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளனர்.
இலங்கை வரலாற்று நூலான [[தீபவம்சம்]], [[மகாவம்சம்]] மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான [[மணிமேகலை]] போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன,
வரிசை 74:
இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே; யாழ்.குடாநாடுதான் நாகதீபம் என்றால், அதுவே மணிபல்லவமுமாகும்’ என்று மேற்கூறிய அறிஞர் பெருமக்கள் முடிவுகட்டியுள்ளதுபோன்று தோற்றுகின்றது. மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடும் ‘மணிபல்லவம்’ நயினாதீவாக இருக்கக்கூடும் என்ற கருத இடமுண்டு, ஆனால் ‘நாகதீபம்’ என்ற பெயர் பண்டைய நாட்களில் நாகர் அரசாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை அல்லது இராச்சியத்தைக் குறிக்க வழங்கப்பட்டதே அல்லாது, எமது ஊரைப் போன்ற ஒரு சிறிய ஊரைக் குறிக்க வழங்கப்படவில்லை. இது குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டையும் அயல் தீவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இன்றைய வடமாகாணம் முழுவதையும் மேற்குக் கரையில் கல்யாணி (களனி) ஆறு வரையான பகுதிகளையும்கூட ‘நாகதீபம்’ உள்ளடக்கியிருந்தது என்ற கருத்தும் உண்டு. ஆகவே, ‘நாகதீபம்’ என்பது ஒரு இராச்சியத்தின் பெயர் நயினாதீவைப் போன்ற ஒரு சிறிய தீவை அல்லது ஊரைக் குறித்த பெயரல்ல. ஆனால், மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே முப்பது ‘யோசனை’ தூரத்தில் அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறும் விவரங்கள் நயினாதீவுக்குப் பொருந்துவனவாக உள்ளன. ‘புத்தர் இங்கு வந்தார். போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது வேறு விடயம். அதுபற்றி சிங்கள வரலாற்றுத் துறை அறிஞர்களிடையேகூடக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ் நாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியிருந்தனர். இந்தத் தீவு ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அக்காலத்திலும் திகழ்ந்திருந்தது. ஆகவே, ‘மணிமேகலை’க் காப்பியம் எழுந்த சங்கமருவிய காலத்தில் - அதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் - நயினார்தீவு, ‘மணிபல்லவம்’ என்றும் அழைக்கப்பட்டது என்றும், இது நாக அரசர்களால் ஆட்சிசெய்யப்பட்ட நாகதீவு (நாகதீபம்) என்ற இராச்சியத்துக்கு உட்பட்டிருந்தது என்றும் கொள்வது தவறன்று. சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.
மாரிக் காலத்து நள்ளிருளில் யாம வேளையில் வழிப்போக்கர் சிலர் ஆபுத்திரனிடம் வயிறுகாய் பெரும்பசி வாட்டுகிறது என்றனர். பிச்சை வாங்கிய உணவை, முடியாதவர்களுக்குத் தந்தபின் எஞ்சிய உணவை உண்டுவந்த அவன், செய்வது அறியாமல் மனம் நொந்துகொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த கோயிலின் தெய்வம் ''சிந்தாதேவி'' அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவன் கையில் கொடுத்த்து. அதில் உள்ள உணவு அள்ள அள்ள வளர்ந்துகொண்டே இருக்கும். அதனை அவன் தேவியைத் தொழுது வாங்கிக்கொண்டான். வழிப்போக்கர்களின் பசியைப் போக்கினான். பின்னர் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி பசியைப் போக்கிக்கொண்டிருந்தான்.
வரிசை 87:
வரலாற்றுத்துறை அறிஞர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர் இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்:
வரிசை 100:
இச்சிறுதீவு, நாகதீவு (சிங்களத்தில் ‘நாகதிவயின’), நயினாதீவு (அல்லது நயினார் தீவு) என்ற பெயர்களாலும், டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது (Haorlem) ‘ஹார்லெம்’ எனவும் அழைக்கப்பட்டதென்பது ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது. ‘ஹார்லெம்’ என்பது ஒல்லாந்தில் தலைநகர் ‘அம்ஸ்ரடாமு’க்கு அருகில் உள்ள சிறிய நகரின் பெயர். ஒல்லாந்தர் அமெரிக்காவில் குடியேறியபோது, தற்போதைய நியயோர்க் நகருக்கு அண்மையில் ஒரு குடியிருப்பை நிறுவி, அதற்கும் ‘ஹார்லெம்’ என்றே பெயரிட்டனர். நயினாதீவு தற்போது ‘ஹார்லெம்’ என்று அழைக்கப்படுவதில்லை.
{{Main|நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)}}
விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும் அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட, ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம், தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும், இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர். இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானியாகவிருந்தது.”
வரிசை 108:
== நயினாதீவு வரலாறு - பகுதி 2 : கிபி 1001 முதல் இன்று வரை ==
{{Refimprove}}
பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அவ்வேளை இங்கு வந்து திருப்பணி வேலைகளைச் செய்த சோழதேசத்துச் சிற்பிகளும் பிராமணக் குடிகளும் மற்றும் கோவில் பணிக்கு அவசியப்பட்ட ஊழியர்களும் தமது குடும்பங்களுடன் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டிருக்கலாம். இவ்வாறு தமிழகத்து மக்கள் வந்து தங்கும் முறை தொடர்ந்ததாலோ என்னவோ இவ்வாறு பிறநாட்டவர் வந்து தாம் இறங்கும் துறைமுகங்களுக்கு அண்மையில் வசிக்க விழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பிற நாட்டார் (பரதேசிகள்) “ஊராத்துறையில் வந்து இருக்க வேணுமென்றும்..” “புதுத் துறைகளில் வந்தாலித் துறையிலே சந்திக்க வேணுமென்றும்…” முதலாம் பராக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1153-1186) நயினாதீவில் நிறுவப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக நயினாதீவு இருந்தமையால் தமிழகத்தவர் அல்லாத பிறநாட்டவர் சிலரும் தனிப்பட்ட காரணங்களின் பொருட்டு இத்தீவில் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திருத்தலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.
வரிசை 115:
முதலில் நாகர்களும், பின்பு இங்குள்ள நயினார் கோவிலைச் சீரமைப்பதற்கும், வழிபாடுகளைக் குறைவற நடத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளின் முன்பு நயினாதீவுக்கு வெளியிலிருந்து குறிப்பாக சோழநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பிகள், பிராமணர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தவர், உறவினர், வேலையாட்களும், தொடர்ந்து வந்து சங்கு குளித்தலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களும் ஆகிய இவர்களுள் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என இத்தீவின் குடித்தொகை மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது.
1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. “கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி [[நல்லூர்க் கந்தசுவாமி கோவில்|நல்லூர்க் கந்தசாமி கோயிலை]] இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று.
வரிசை 121:
இக்காலத்தில் (கி.பி. 1620–1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது. நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் எங்குமே பெயரளவுக்காகுதல் கத்தோலிக்க சமயம் பரவியது. இக்காலம் நயினாதீவில் எத்தகைய சமய மாற்றம் ஏற்பட்டது என்பது திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில ஊரவர்கள் சிலர் அச்சமயம் ஏற்பட்ட சமய நெருக்கடியைத் தவிர்க்க முடியாதவராக விரும்பியோ விரும்பாமலோ மதம் மாறியுள்ளனர். கி.பி. 1788 இல் நாகம்மாள் வழிபாட்டை சிறிய அளவில் மீள ஆரம்பித்து வைத்தவர் என நம்பப்படும் திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரின் மகன் திரு.கதிரித்தம்பி, கிறீஸ்தவராக மதம் மாறித் தனது பெயரையும் ‘பிரான்சீஸ்க்கு கதிரித்தம்பி’ என்று மாற்றிக்கொண்டார். இவரது விசுவாசத்தை மெச்சி, ஒல்லாந்த அரசினர் இவருக்கு ‘நொத்தாரிஸ்’ உத்தியோகமும், கிராம வரி அறவிடும் அதிகாரமும் கொடுத்தனர். இவர் நயினாதீவில் மேரி மாதா கோவில் ஒன்றையும் அமைத்தாரென்றும், அக்கோவிலுக்கு வேண்டிய மணியையும், உதவியாள் ஒருவரையும் ஒல்லாந்த அதிகாரிகள் வழங்கியதாகவும் ஐதீகம். இவர் நொத்தாரிசாக பணியாற்றியபோது, ‘பிரான்சீக்கு கதிரித்தம்பி’ என்று தனது ஒப்பத்தை இட்ட காணி உறுதிகள் யாழ்ப்பாணம் காணிக் கந்தோரில் உள்ளன என்று திரு.க.சண்முகநாதபிள்ளை தனது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் திரு.சண்முகநாதபிள்ளை "பிரான்சீஸ்கு என்பது அவருடைய பெயர் அல்ல, அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்” என்று கூறியிருப்பது விந்தையாகவுள்ளது. திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரையும் அவரது மகன் திரு.கதிரித்தம்பியையும் மேல் உயர்த்திக் காட்டும் ஆர்வக் கோளாறினால் அன்பர் திரு.சண்முகநாதபிள்ளை தனது நூலின் 41, 42, 43 ஆம் பக்கங்களில் குறித்துள்ள பின்வரும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டுமேயானால், திரு.இராமலிங்கர் இராமச்சந்திரர் 165 ஆண்டுகளுக்கு மேல் (குறைந்தபட்சமாக கி.பி.1624 தொடக்கம் கி.பி. 1788 வரை) உயிர் வாழ்ந்த ஒருவராயிருந்திருக்க வேண்டும்:
வரிசை 132:
ஆகவே, திரு.இராமச்சந்திரர் கதிரித்தம்பி ஒல்லாந்தர் காலத்தில் நொத்தாரிஸ், மற்றும் கிராம வரிவசூலிப்பவர் ஆகிய பதவிகளைப் பெறுவதற்காக கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்று இருக்கலாமென்றும், ஒரு மேரிமாதா கோவிலையும்கூட அவர் நிறுவி நிருவகித்து இருக்கலாமெனவும் கருதுவதற்கு ஆதாரங்களுண்டு. ஒல்லாந்தர் தமது சமயத்தை யாழ்ப்பாண இராச்சியத்தில் வசித்த சாதாரண பொது சனங்கள் மத்தியிலேகூட வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள் என்று முதலியார் திரு.செ.இராசநாயகம் கூறுகிறார். “தொடக்கத்தில் சமய விருத்தியைப்பற்றிக் கடுமையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலம் செல்லச் செல்ல அதன் விருத்தியில் நாட்டம் வைத்தவராய் சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்றாக நீக்கி கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போகவேண்டுமென்றும், பிள்ளைகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்குப் போய் கிறீஸ்தவ சமய பாடங்கள் கற்க வேண்டுமென்றும் கட்டளை இட்டனர்” என்பது முதலியார் கூற்று. சாதாரண பொது சனங்களையே இவ்விதம் நெருக்கிக் கிறீஸ்தவராகத் தூண்டிய ஒல்லாந்தர், நொத்தாரிஸ் மற்றும் கிராம வரி வசூலிப்பவர் பதவிகளை ஒரு சைவ சமயத்தவருக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதன்று. நயினாதீவில் ஒரு கிறீஸ்தவ வழிபாட்டுத் தலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆங்கில மொழிக் கல்வியையும் கிறீஸ்தவ சமயப் பிரசாரகர்களே முதன்முதலில் நயினாதீவில் தொடக்கிவைத்தனர்.
அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள். அதிகமான திருமணத் தொடர்புகள் பக்கத்தேயுள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணிசமான தொகையினரான புங்குடுதீவு மக்கள் நயினாதீவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புங்குடுதீவில் வசித்த மாதுங்கர் என்பவரின் மகன் சரவணமுத்து நயினாதீவில் உடையாராக நியமிக்கப்பட்டார். இவர் நயினாதீவில் திருமணம்செய்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியதன் பின்பு அவரது உறவினர் பலரும் நயினாதீவில் திருமணஞ்செய்து அங்கு சென்று குடியேறி வாழத் தலைப்பட்டனர். இவ்வாறே நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர். நயினை நாகம்மாள் தேவியின்மீது தீவுப்பகுதி மக்கள் கொண்ட பற்றும், பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம்.
[[படிமம்:NainathivuNahaVihara.JPG|right|thumb|180px|நயினாதீவு நாக விகாரை]]
1939 இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார். மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர் கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
வரிசை 145:
வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் முதலில் நாகவழிபாட்டுடன் சங்கமித்த பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பௌத்தர்கள் ஆகினர். பின், கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சைவம் தழைக்க அவர்களும் சைவசமயத்தைச் சார்ந்தனர். ஆயினும், எக்காலத்தும் நாகவழிபாட்டை மறந்தாரல்லர். நயினாதீவிலுள்ள நாகம்மாள் கோவில் கருவறைக்குள் இன்றும் நிலைத்திருக்கும் ஐந்தலை நாகத்தின் தொன்மை வாய்ந்த சிலா வடிவம் இதனை நிருபிப்பதாக உள்ளது. தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே. பௌத்த சமய வழிபாடோ, இந்து சமய வழிபாடோ அல்ல.
பிரித்தானியர் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, தமிழ் ஈழத்தின் ஏனைய சிற்றூர்களை விடவும் அதிக அளவில் சிங்களப் பேரினவாதப்பிடி நயினாதீவை இறுக்கத்தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தமிழர்களின் சாத்வீகமான போராட்டத்தை அடக்க இனக்கலவரத்தை ஏவிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த இனக்கலவரத்தின் காரணமாக தமிழ் இனத்திற்கு நேர்ந்த உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் எழுதப்புறப்பட்டால் முடிவின்றி நீளும். கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும், உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும், பலர் கொல்லப்பட்டதாலும் தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களவர் எவருமே கொல்லப்படவில்லை. இந்த வேளையில், நயினாதீவில் இருந்த புத்தபிக்கு 1958.05.29இல் காரைநகர் கடற்படைமுகாமில் சென்று தஞ்சமடைந்ததன்பின்பு, நயினாதீவிலுள்ள பௌத்த விகாரை 1958 யூன் மாத முற்பகுதியில் தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூன் 10 ஆம் நாள் பகல் ஒரு மணி அளவில் பொலிசாரும் கடற்படையினரும் நயினாதீவுக்கு வந்திறங்கி, ஏழு ஊரவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றதுடன் பல வீடுகளையும், கடைகளையும் எரித்து அழித்தனர். அத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலையும் அவர்கள் எரித்துச் சேதப்படுத்தினர். கோவிலைச் சூழவிருந்த மடங்கள் யாவும் எரித்து முற்றாக அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஏழுபேரும் காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மாலை சுமார் 7.30 மணிவரை அங்கு வைத்து பொலிசாராலும், கடற்படையினராலும் அடித்து நொருக்கப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் அங்கும் பொலிசாராலும், கடற்படையினராலும் நடுச்சாமம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
| |||