குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Saravananklt |
imported>Saravananklt |
||
வரிசை 20:
==குளித்தலை==
குளித்தலை (ஆங்கிலம்:Kulithalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
==பெயர்க்காரணம்==
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது.
==எல்லைகள்==
வடக்கில் முசிறி, கிழக்கில் [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டம், தெற்கில் (முறுக்கு புகழ்) மணப்பாறை, மேற்கில் [[கரூர்]] மாவட்டம் ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும்.
==தொழில்கள்==
காவிரித்தாயின் அரவணைப்பில் இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.
குளித்தலையின் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் பெட்டவாய்த்தலை என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத்தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில்தான் நெல் பிரசித்தம்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,152 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குளித்தலை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளித்தலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
| |||