பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Agnel |
||
வரிசை 472:
== [[பணகுடி புனித சூசையப்பர் திருத்தலம்|புனித சூசையப்பர் திருத்தலம்]] ==
புனித சூசையப்பர் திருத்தலத்தில் வழிபடுவோர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவார்கள் இவர்கள் ஆர்.சி. கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவர்.
'''திருத்தலத்தின் வரலாறு:'''
இங்கு வாழ்ந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நாடார் மக்கள் ஆவார். பனையேறும் தொழில் செய்வதற்காக நாடார் கத்தோலிக்க மக்கள் சாத்தான் குளம் வடக்கன் குளம் கள்ளி குளம் ஆகிய ஊர்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்தனர். கிறிஸ்துவ மக்கள் அனைவரும் வசிப்பதற்காக சுவாமி கிரகோரி 1870-ம் ஆண்டு பணகுடியின் தென்பகுதியில் 5 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் அவர் ஒரு சிற்றாலயத்தை அமைத்தார்; அதனைப் புனித சூசையப்பருக்கு அர்ப்பணித்தார். நாடார் கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வந்த புனித சூசையப்பர் ஆலயம் 1892-ம் ஆண்டில் பெரிதாகக் கட்டப்பட்டது. பணகுடி ஆலயம் 1939-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தனிப்பங்கானது; இக்கோவிலின் முன் மண்டபத்தை சுவாமி சூசைநாதர் கட்டினார். 1947 – ல் பங்குதந்தை ரெம்ஜியுஸ் மஸியர் அவர்களால் தேக்குமரக் கொடிமரம் அகற்றப்பட்டு ஒற்றைக்கல்லில் ஆன கொடிமரம் நாட்டப்பட்டுள்ளது. இக்கொடிமரக்கலை நான்கு மாட்டுவண்டிகள் ஒன்றாக பூட்டி கொண்டுவரப்பட்டது. இப்படி கல்கொடிமரம் உலகத்திலேயே பணகுடியிலும், ஜெருசலேமிலும் உள்ளது. 1983-ல் திரு இருதய சகோதரர்களால் ஒரு ஆலயம் கட்டப்பட்டது; அதன்பிறகு அது 1988-ம் ஆண்டு பள்ளிகூடமாக மாற்றப்பட்டது; முதல் தடவையாக அரசு தேர்வு எழுதினார்கள். இச்சமயத்தில் ஆரோக்கிய பீட்டர் பங்கு குருவாக இருந்தார் அப்போது தான் இந்த பள்ளியின் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான ஏழை மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். பணகுடி சூசையப்பர் திருத்தலத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள வோளாங்கண்ணி மாதா கெபி 1990 – ல் பங்குத்தந்தை பன்னீர் செல்வம் அவர்கள் அமைத்தார். 1995-ம் ஆண்டு ஆலய கோபுரத்தின் மேல் சுவாமி தேவசகாயம் என்பவரால் திரு இருதய இயேசுவின் உருவம் அமைக்கப்பட்டது.
| |||