ஆள்கூறுகள்: 9°24′35″N 78°21′51″E / 9.409700°N 78.364300°E / 9.409700; 78.364300

கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்குச் செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref>
'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]],[[கமுதி வட்டம்|வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்குச் செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref>


கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. கமுதி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. கமுதி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

15:32, 24 செப்டெம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

கமுதி
கமுதி
இருப்பிடம்: கமுதி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°24′35″N 78°21′51″E / 9.409700°N 78.364300°E / 9.409700; 78.364300
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் கமுதி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,754 (2011)

2,893/km2 (7,493/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.10 சதுர கிலோமீட்டர்கள் (1.97 sq mi)

64 மீட்டர்கள் (210 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kamuthi


கமுதி (ஆங்கிலம்:Kamuthi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம்,வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்குச் செயல்பட்டு வருகிறது.[4][5]

கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கி.மீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. கமுதி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கட் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,379 வீடுகளும், 14,754 மக்கள்தொகையும் கொண்டது.[6]

இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது, முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

கமுதி சந்தை

செவ்வாய்க் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.

கல்விக்கூடங்கள்

கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கௌரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ள பள்ளிகள் ஆகும். கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.

ஆலயங்கள்

கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலீம் மக்கள், இந்து சேர்த்து வழிபடக் கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்குக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜூன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டுத் திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டுக் கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயைப் போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.

பிரசித்தி பெற்ற விழாக்கள்

வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மீக விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் மேலும் முத்தாலங்குளம் கிராமத்தில் உப்பிடாதி அம்மன் புரட்டாசி திருவிழா மேலவீட்டார் வகைராக்கள் தலைமையில் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது

விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை

நீர் நிலைகள்

கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன.

மேலும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Kamuthi: The world's largest solar power project
  5. Kamuthi Solar Power Project
  6. கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. கமுதி பேரூராட்சியின் இணையதளம்
"https://tamilar.wiki/w/index.php?title=கமுதி&oldid=196776" இலிருந்து மீள்விக்கப்பட்டது