கோட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
==காவல் நிலையம்==
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
==நூலகம்==
50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட மிகப் பழமையான நூலகம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை, பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
==நீர்நிலைகள்==
கோட்டூரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் ஆழியாறு, கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர்.
இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்கிறது.
==சந்தை==
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாளையம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 32 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.
"https://tamilar.wiki/w/கோட்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது