சமையலறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|250px|ஒரு சமையலறை '''சமையலறை''' (ஆக்குபறை) (Kitchen) என்பது உணவு தயாரிக்கும் இடமாகும். பொதுவாக சமைப்பதற்கான அடுப்பு, சமையற் பாத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி சமையலறை வேறுபாடுகள்: clean up, replaced: அமைப்புக்களில் → அமைப்புகளில் using AWB
 
வரிசை 9:
 
== சமையலறை வேறுபாடுகள் ==
சமையலறைகள் பல்வேறு அமைப்புக்களை உடையனவாகக் காணப்படுகின்றன. பல்வேறு பண்பாட்டுக் குழுவினரிடையே காணப்படும் சமையலறைகள் அமைப்புக்களில்அமைப்புகளில் வேறுபட்டவையாக உள்ளன. பிற கட்டிடக் கூறுகளைப் போலவே சமையலறையும் புதிய கண்டு பிடிப்புக்கள், தேவைகள், பிற பண்பாடுகளுடனான தொடர்பு போன்ற காரணிகளால் மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது.
 
=== தமிழர் சமையலறை ===
[[படிமம்:The rural stove,smoky,pollution,TamilNadu-230.jpeg|thumb|மண் அடுப்பு/<br />குப்பைக் கூலங்களை எரிக்கும் அடுப்பு]]
தமிழர் உட்படப் பெரும்பாலான கீழை தேசப் பண்பாடுகளில் நிலத்தில் இருந்தே சமையல் செய்வது வழக்கமாக இருந்தது. இதற்கு ஒப்ப மரபு வழித் தமிழர் சமையலறைகளில் [[அடுப்பு]], சமையலுடன் தொடர்புள்ள பிற சாதனங்கள் போன்றவை நிலத்திலிருந்து சமைப்பதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டன. நில மட்டத்தில் அமைக்கப்பட்ட அடுப்புகள், [[அரிவாள்மணை]], [[துருவுபலகை]] போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். இத்தகைய சமையலறைகளில், அடுப்புகள் உரிமையாளரின் நிதி நிலையைப் பொறுத்துப் பல வகையாக அமையக்கூடும். மிக எளிமையான சமையலறைகளில், அறையின் ஒரு மூலையில் மூன்று கற்களை அடுக்கி அடுப்பாகப் பயன்படுத்துவர். [[களிமண்]]ணால் செய்து சுடப்பட்ட அடுப்புகள் [[குயவர்]]களால் செய்யப்பட்டு விற்கப்பட்டன. இவற்றை இலங்கையில் "சூட்டடுப்பு" என்பர். சில சமையலறைகளில் இவை அப்படியே நிலத்தில் வைத்துச் சமையல் செய்வதற்குப் பயன்படுத்தப்படும். சில சமையலறைகளில் ஒன்று அல்லது இரண்டு அடுப்புக்களை நிலத்தில் வைத்து அவற்றைச் சூழ மண்ணினால் மேடை போல அமைத்திருப்பர். இதை இலங்கை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] "அடுப்புப் புகடு" என அழைப்பர்.
"https://tamilar.wiki/w/சமையலறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது