அப்பல்லோ 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
No edit summary
 
வரிசை 32:
சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.
 
=== உசாத்துணைகள் ===
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/அப்பல்லோ_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது