இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
 
No edit summary
 
வரிசை 44:
இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
===தொன்மம்===
சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.
 
=== முன்னோர்களின் நினைவாக நடுகல் ===
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. {{ஆதாரம் தேவை}} சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் {{ஆதாரம் தேவை}}
 
வரிசை 59:
மற்றோரு கருத்தின்படி இலிங்கம் என்பது பழங்காலத்தில் வெறும் நடுவில் உள்ள தூணை மட்டுமே உடையதாக இருந்தது என்றும் ஆவுடையார் வடிவம் பின்னாட்களில் அபிஷேக நீர் வடிதலுக்காகத் தோன்றிய அமைப்பு என்றும் கூறுவர்.
 
===மூன்று பாகங்கள்===
 
இலிங்க வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
"https://tamilar.wiki/w/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது