எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும்: clean up, replaced: இறப்புக்கள் → இறப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 48:
ஆனால் எல்லாளன் [[ஈழம்|ஈழவூரின்]] உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.<ref>{{cite book |title=Ancient Ceylon |url=https://archive.org/details/in.ernet.dli.2015.69695 |last= Parker |first= Henry |year= 1909|publisher= London: Luzac and Co.|location= |isbn= |pages= }}</ref> அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] [[அநுராதபுரம்|அநுராதபுரத்திற்கு]] வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் தொடக்கத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.<ref>Parker.H, Ancient Ceylon. London : 1909</ref> எனினும் இது குறித்துத் தெளிவான முடிவு எடுப்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
 
=== வரலாறு ===
பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் (பொ.ஊ.மு. 247) பொ.ஊ.மு. 1 ஆம் நூற்றாண்டிற்கும் (பொ.ஊ.மு. 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால [[அனுராதபுர பேரரசு|அனுராதபுர]] அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.<ref>Geiger,W., The Mahawamsa – Introduction, Colombo 1950. Page XXXVII</ref> இதில் 44 ஆண்டுகள் எல்லாளனுக்கும் 22 ஆண்டுகள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல பாகங்களில் கூறும் [[மகாவம்சம்]] தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூற முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட [[துட்டகைமுனு|துட்டகாமினியின்]] 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் [[மகாவம்சம்]], 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே [[பாளி]] இலக்கியங்களில் [[தமிழ்]] மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.<ref>புஸ்பரட்ணம், ப., [[இலங்கை]]யில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் - 5.</ref>
 
=== எல்லாளன் பற்றி மகாவம்சம் ===
[[File:சோழ இளவரசனால் தேரேற்றி கன்று கொல்லப்படுதலை சித்தரிக்கும் ஓவியம்.jpg|thumb|சோழ இளவரசனால் தேரேற்றி கன்று கொல்லப்படுதல். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]], [[லேபட்சி|இலேபாட்சி]] [[வீரபத்திரன் கோவில்]] விதான ஓவியம்.]]
[[File:தேரேற்றி கன்று கொல்லப்பட்டதால் துயருற்ற பசு சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்.jpg|thumb|கன்று கொல்லப்பட்டதால் துயருற்ற பசு சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்.]]
வரிசை 65:
எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக வவிகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் [[மகாவம்சம்]] நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.
 
=== விகாரைமகாதேவியும் எல்லாளனும் ===
கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>{{cite book |title=[[மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்]]|last= குணராசா|first= க. |year= 2003|publisher= கமலா பதிப்பகம்|location=யாழ்ப்பாணம் |isbn= |pages=86 }}</ref> பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும்<ref>மகாவம்சம் 25: 48 – 49</ref>, அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள்.<ref>மகாவம்சம் 25: 8 – 9</ref> இதை [[மகாவம்சம்]] போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது<ref>{{cite web|url=http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/#footnote_9_1768|title=The Victory of Duttha Gamani – king Dutthagamani and Elara|work=mahavamsa.org}}</ref>.
 
வரிசை 74:
இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.
 
=== துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும் ===
[[படிமம்:Dakkhinatupa.jpg|thumb|right|எல்லாளனின் சமாதியென நம்பப்படும் தக்கின தாது கோபுரம், [[அனுராதபுரம்]].]]
காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக<ref name="History grade 10 by Kumudini dias">History grade 10 by Kumudini dias</ref> உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.
வரிசை 83:
'''மனுநீதிச் சோழன்''' அல்லது '''மனுநீதி கண்ட சோழன்''' என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு [[சோழர்|சோழ]] மன்னன் எனக்கருதப்படுபவன். இவரும் எல்லாளனும் ஒன்று எனவும் வெவ்வேறானவர்கள் எனவும் கருதப்படுகிறது.
 
=== இலக்கியக் குறிப்புகள் ===
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் [[கண்ணகி]] குறிப்பிடுவதாகச் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வருகிறது<ref>சிலப்பதிகாரம், வழக்குரை காதை 53-55</ref>. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புகள் வருகின்றன<ref>சிலப்பதிகாரம், கட்டுரை காதை 58</ref>. பதினெண் கீழ்க்கணக்கு நூலான [[பழமொழி நானூறு]] என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது<ref>பழமொழி நானூறு, அரசியல்பு, பாடல் 242.</ref>. சோழர் காலத்து நூலான [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலேயே]] மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. '''மனு''' [[திருவாரூர்|திருவாரூரில்]] இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னன். அவன் மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து பசுவுக்கு நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான்.<ref>பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 – 50</ref> இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த [[இராசராசசோழன் உலா]], [[விக்கிரம சோழன் உலா]], [[குலோத்துங்க சோழன் உலா]] என்பவற்றிலும் இக்கதை வருகிறது.
 
முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது.<ref>indianfolklorist.com இன் [http://indianfolklorist.com/index.php?option=com_content&view=article&id=17&Itemid=16 இந்தப்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} பக்கத்தில் இருந்து</ref> [[சென்னை உயர்நீதி மன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
 
=== கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள் ===
==== கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் ====
கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மனுநீதிச்சோழன் வாழ்ந்தது உண்மையே என்று குறிப்பிடுகின்றார்.<ref>{{cite web|url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=3594|title=மனுநீதிச் சோழன் கதை உண்மையா?|date=16 March 2011|publisher=}}</ref>
 
==== கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா ====
கல்வெட்டறிஞர் [[கா. ம. வேங்கடராமையா]] தமது ஆய்வுப்பேழை எனும் நூலில் மனுசரிதக் கல்லெழுத்து முழுமையையும் அதன் தகவல்களையும் தருகின்றார். இதில் மனு திருவாரூரில் இருந்து அரசாண்டவர் என்றும் மனுவின் மந்திரி பெயர் இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன் என்றும் மனுவின் மகன் பிரியவிருத்தன் என்றும் திருவாரூர் கல்வெட்டுத் தகவல்களைத் தெரிவிக்கின்றார்.
 
==== புலவர் வே.மகாதேவன் ====
"சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், மனுவின் வரலாற்றைக்கூறிய சேக்கிழார் அதிலுள்ள பிற தகவல்களைச் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். அமைச்சர் பதவியிலிருந்தவரான சேக்கிழார் தகவல்களை மிகுந்து தேர்ந்தே கூறினார் என்பதை அடிப்படையாகக் கொள்கிறார். திருவாரூர் மனுசரிதக் கல்வெட்டு அறக்கொடை பற்றிய சாசனம். இதன் ஆரம்ப வரிகள் "பூலோக ராஜ்யம் செய்கிற சூர்ய புத்ரன் எனும் மனு தன் புத்ரன் ஏறி வருகிற தேரில்.."என்பது. சூர்யபுத்ரன் மனு எனும் தொடக்கக் கருத்தில் கருத்து வேறுபாடு கொண்ட சேக்கிழார் கல்வெட்டின் பிற செய்திகளையும் தவிர்த்துவிட்டார் என்று கருதுகிறார்.<ref name="surabi">அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61</ref>
 
"https://tamilar.wiki/w/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது