கச்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
No edit summary |
||
வரிசை 27:
'[[வையாபாடல்]]', '[[கைலாயமாலை]]' முதலான [[தமிழ்]] [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்கள்]], யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தமிழ்க் குடிகளில் ஒரு பிரிவினர் தென்மராட்சிப் பிராந்தியத்திலுள்ள கச்சாய், [[முகமாலை]], கோகிலாக்கண்டி முதலிய இடங்களில் குடியேற்றப்பட்டதாகவும் அவ்விடங்களை நிர்வகிக்க [[அதிகாரிகள்]] நியமிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன<ref name="kesari"/>.
[[File:பாதிரி குளம்.JPG|thumb|கச்சாய் கோட்டை வரலாற்றில் கூறப்பட்டு இருக்கும் ஒல்லாந்தர் காலத்தில் காணபட்ட பாதிரி குளம் மற்றும் கிணறும் இன்று பாழடைந்து காணப்படுகின்றன.]]
வரிசை 34:
அதே [[சமயம்]] கச்சாயில் தற்போதும் ஒரு பகுதியாக உள்ள கோட்டையடி<ref>{{Cite web |url=http://nermai-endrum.blogspot.de/2010/12/01.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-12-18 |archive-date=2012-12-18 |archive-url=https://archive.today/20121218004940/nermai-endrum.blogspot.de/2010/12/01.html |url-status=dead }}</ref> என்ற இடத்திற்கு இன்னுமொரு [[வரலாறு|வரலாறும்]] உண்டு. அதாவது ஒல்லாந்தருக்கும் பூதத்தம்பிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பூதத்தம்பி தோல்வி அடைந்தபோது அவனை சிறைப்பிடித்த ஒல்லாந்தர் அவனைக் கச்சாய் கடல் கரையில் கொண்டு போய் வெட்டும் போது அவன் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டான் என்றும், அதன் பிறகு பூதத்தம்பியின் ராணியை வசீகரித்து தன் ராணியாக்கிக்கொண்ட ஒல்லாந்த அரசன் ராணியை [[யாழ்ப்பாணக் கோட்டை]]க்குக் கொண்டு சென்றதாகவும், அதன் பின் தம் மதமான கிறிஸ்த்தவ மத பாதிரிமார்களுக்கு ஒல்லாந்த அரசன் கச்சாயிலிருந்த கோட்டையை வழங்கினான் என்றும், அதில் இருந்த [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] பாதிரியார் அந்த ராணி நீராடிய அதே குளத்தில் நீராடியதாகவும், அதனால் அந்த குளத்துக்கு பாதிரி குளம் என்றுபெயர் வந்ததாகவும், ஒரு வரலாறு தற்போதும் பேச்சு வழக்கில் உள்ளது. இங்கே குறிப்பிட்டுள்ள இந்த கோட்டை இப்போது அழிந்திருந்தாலும், இதன் எச்சங்கள் இப்போதும் கானபடுகின்றன. அதில் பாதிரி குளம், மற்றும் கிணறு, மண்ணால் கட்டபட்ட அந்த கோட்டை இப்போது மண்மேடாக காட்சி அளிக்கிறது. இருக்கும் இடம்: கொடிகாமம் கச்சாய் வீதி மற்றும் சாவகச்சேரி கச்சாய் வீதி இணையும் கச்சாய் சந்தியில் இருந்து சாவகச்சேரி போகும் பக்கமாக 500 மீ தூரத்தில் காணப்படுகின்றன.
[[File:ஈழப் போர்.jpg|thumb|ஈழப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு வீடு]]
[[ஈழப்போர்|ஈழப்போரினால்]] உயிர்ச் சேதங்கள் பெரிய அளவில் இல்லையெனினும், கச்சாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை பொறுத்த வகையிலும், மனம் சார் வகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற் தொழிலை நம்பி இருந்த மக்கள் பல ஆண்டுகளாக கடல் தொழில் செய்ய முடியாமையும், மற்றும் விவசாயிகள் தங்கள் அன்றாட [[வேளாண்மை]]த் தொழில்களை செய்ய முடியாமல் இருந்ததே இதற்கான காரணங்கள். அதேவேளை ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரான [[சார்ல்ஸ் அன்டனி]] ([[சீலன்]]) இந்த ஊரின் அல்லாரை எல்லைப்பகுதியில் 1983 இலங்கை இராணுவத்துடனான சண்டையில் இறந்தார். கச்சாய் ஊரில் இருந்து பல [[போராளி|போராளிகளும்]] ஈழப்போராட்டத்தில் இறந்துள்ளார்கள்.
வரிசை 42:
கச்சாய் ஆனது கச்சாய் தெற்கு, கச்சாய் வடக்கு என இரு பிரிவுகளையுடையது. கச்சாயில் (2012) கிட்டத்தட்ட 673 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன, ஒரு மூன்று ஆண்டுகளுக்கு (2009) முன்பு 540 குடும்பமாக இருந்தது.
கச்சாயில் [[யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு]] கட்டமைப்பை ஒத்த சமூகக் கட்டமைப்பு உள்ளது. அவற்றில் பின்வருமாறு: [[கோவியர்]], [[சான்றார்]], [[நளவர்]], [[முக்கியர்]], [[வெள்ளாளர்]]/([[வேளாளர்]]) ஆகிய [[சாதி|சாதிய]] அடையாளங்கள் இங்கு உள்ளன. அதே வேளை கோவில், பாடசாலை, விளையாட்டு போன்ற பொது இடங்களில் இவர்களுக்கிடையில் வேற்றுமை இல்லை.
வரிசை 50:
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த [[மக்கள்|மக்களின்]] பண்பாடு [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தை]]ப் போல்தான். இருந்தாலும் கச்சாய்க் [[கிராமம்|கிராமத்து]] மக்கள் [[நகரம்|நகர்]]ப்புற மக்களை விடச் சற்று வேறுபட்டவர்கள். இந்தக் கிராமத்தில் [[ஆண்]]களும், [[பெண்]]களும் வேலை செய்தாலும், பெண்கள் சிறு கைத்தொழில் சார் தொழில்களே பொதுவாகச் செய்கின்றனர். உறவு முறைகளில் [[திருமணம்]] செய்வதும் இங்கு அதிகமாக காணலாம். கச்சாய் ஊரில் நூறு வருடத்துக்கு உட்பட்ட காலங்களில் [[காரைநகர்]], [[கோயிலாக்கண்டி]], [[நவாலி]], [[மண்டைதீவு]], [[பூநகரி]], [[மீசாலை]], போன்ற பிற பிரதேசத்து மக்கள் குடியேறி வாழ்கிறார்கள்.
கச்சாய் ஊரைச் சேர்ந்தவர்கள் வேறு [[சாதி]]/[[மதம்]] இனத்தவருடனான திருமணங்கள் இங்கு அரிதாகவே உள்ளன, ஒரு நபர் திருமணம் செய்வதற்கு முன் தனது பெற்றோருடனேயே வாழ்கிறார், [[திருமணம்]] முடிந்த அன்றைய நாளில் இருந்து தனிக் குடித்தன வாழ்வில் இறங்குகிறார்கள். இந்த ஊரின் [[கோடை]] காலத்தில் அதி சிறப்பு உணவாக [[யாழ்ப்பாணத்து கூழ்]] பெரும்பாலும் அனைத்து குடும்பங்களிலும் தயாரிக்கப்படும்.
வரிசை 58:
[[File:கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை.jpg|thumb|யாழ் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை]]
{{முதன்மை|கச்சாய் தமிழ் கலவன் பாடசாலை}}
வரிசை 67:
கச்சாய் ஊரைப் பொறுத்த வரையில் பொருளாதாரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணங்கள் உள்ளூர் உற்பத்தியாக [[மரக்கறி]] வகைகள் இந்த ஊரில் அதிகளவு காணப்படுவதும், [[மீன்பிடித்தல்|மீன்பிடித்]] தொழில் இங்கு அதிகளவாக நடைபெறுவதும் அதற்கான காரணங்களாகும். கச்சாய் கடல் நீரேரியில் பிடிக்கப்படும் [[இறால்]], [[நண்டு]] என்பன வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை அடுத்து இந்த ஊரைச் சேர்ந்த பல தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்வதனால் அவர்களின் பொருளாதார உதவியும் இந்தக் கிராமத்துக்கு அதிகளவில் கிடைக்கின்றன. பொதுவாக நடுத்தர மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்று சொல்லலாம்.(2012)
கச்சாயின் புலம் பெயர் தமிழர்கள் பல மேற்கத்தேய நாடுகளில் வாழ்கின்றனர். அவை பின் வருமாறு: [[டென்மார்க்]], [[சுவீடன்]], [[யேர்மனி]], [[நெதர்லாந்து]], [[பிரான்ஸ்]], [[பிரித்தானியா]], [[சுவிஸ்]], [[இத்தாலி]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]], மற்றும் [[அரபு நாடு]] போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களின் பொருளாதார உதவி இந்த கிராமத்துக்கு பெருமளவில் கிடக்கின்றன என்பது இங்கு குறிப்பிட தக்கது.
வரிசை 75:
[[File:நீர்வளம்.jpg|thumb|கச்சாய் நீர்வளம், இது ஒரு கேணி]]
இந்த பிரதேசத்தின் [[நிலம்]] [[நீர்]] மட்டத்தில் இருந்து பத்து, பதினைந்து, அடிகளே உயரமானது, அதனால் இந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் நீர் வளத்துக்குக் குறைவில்லை என்றுதான் சொல்ல முடியும், அதே வேளை இக் கிராமத்திலும், இந்த ஊரைச் சுற்றியுள்ள அயல் ஊர்களிலும் பல குளங்கள் உள்ளனவும் இதுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும், நீர் வளம் என்பது இந்த ஊரைப் பொறுத்த வரையில் அளவுக்கு அதிகமாகவே உள்ளன என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் நீருக்காக ஒரு [[கிணறு]] கட்டி இருப்பார்கள் அதன் மூலம் தங்கள் நீரின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். இவ் ஊரின் குடிநீரிலோ அல்லது குளத்து நீரிலோ [[உவர்]] தன்மை இல்லை என்பது குறிப்பிட தக்கது. இங்கு வாழும் வேளான்மை/விவசாயம் செய்பவர்கள் [[கிணறு]], [[கேணி]], [[குளம்]] போன்றவற்றில் இருந்து தங்கள் [[நீர்]] தேவையை பெறுகின்றனர்.
[[File:இயற்கை வளம்.jpg|thumb|கச்சாயின் இயற்கை வளம் மற்றும் குருமணல்]]
வரிசை 85:
இந்த கிராமத்து மண் குருமணல் போல் இருப்பதால் பயிரிடப்படும் பயிர்களுக்கு அதிக அளவான தண்ணீர் பாய்ச்சவேண்டி உள்ளது. [[நீர்]] வளம் இங்கு தாராளமாக கிடைப்பதனால் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அதே வேளை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளுக்கு வீடு கட்டுவதற்கான [[மணல்]] இந்த கிராமத்தில் இருந்துதான் சென்றடைகின்றன.
[[File:கச்சாய் குளம்.jpg|thumb|கச்சாய் குளம் மற்றும் வயல்வெளி]]
வரிசை 108:
இந்த ஊரில் [[மா]], [[பலா]], [[தென்னை]], [[பனை]], [[வேம்பு]], [[நாவல்]],[[முருங்கை]] போன்ற [[மரம்|மரங்கள்]] அதிகமாகக் காணப்படுகின்றன. [[2012]] ஆம் ஆண்டுப் பகுதியில் இது சிறு [[வணிகம்|வணிக]] மையமாகவும் உருவெடுத்துள்ளது. அதாவது சிறிய பலசரக்கு கடைகள், வீடு கட்டுமான கடை, சாப்பாட்டுக்கடை, மில், மது பான உற்பத்தி, சிறிய [[கைத்தொழில்]] என்பன போன்றவை இக்கிராமத்தில் இப்போது காணப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளிலும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
இந்த கிராமத்தில் விவசாயம் மூன்று விதமானவை அதில் ஒன்றான மரக்கறி வகைகளைக் [[கோடைகாலம்|கோடைகாலத்திலும்]], [[மாரிகாலம்|மாரி காலத்திலும்]] பயிரிடுவார்கள். அதே வேளை வயல் நிலங்களில் மாரிகாலத்தில் [[நெல்|நெற்]] பயிரும், கோடைகாலத்தில் [[பயறு]], [[உழுந்து]], [[கடலை]] வகை [[பயிர்]] போன்ற [[தானியம்|தானிய]] வகைத் [[தாவரம்|தாவரங்களை]] பயிரிடுவார்கள். மற்றும் மரக்கன்று வகைகளும் இந்த கிராமத்தில் [[பயிர்ச்செய்கை|பயிரிடப்படுகின்றன]].
வரிசை 116:
இங்கு பயிரிடப்படும் மரக் கன்று வகைகளில் பின்வருன அடங்கும்: [[மா]], [[பலா]], [[மாதுளை]], [[கொய்யா]], [[தோடை]], [[எலுமிச்சை]], [[பப்பாளி|பப்பாசி]], [[வாழை]], [[தென்னை]], [[பனை]], [[பூ]] மரங்கள்.
[[மாம்பழம்]], [[பலாப்பழம்]], [[வாழைப்பழம்]], [[மாதுளை]]ம்பழம், [[நாவல்]]பழம், [[தோடம்பழம்]], [[கொய்யா]]ப்பழம், [[பப்பாளி]]ப்பழம், [[வெள்ளரி]]ப்பழம்,(2012)
இந்த ஊரைச் சேர்ந்த மீனவர்களிடம் இப்போது (2012), 47 வெளி இயந்திர சிறிய படகுகள் மற்றும் நான்கு மர வள்ளங்கள் (08/2012) உள்ளன இந்த படகுகள் மூலம் கச்சாய் கடல் நீர் ஏரி பகுதிகளில்தான் பலர் சிறியமீன், [[நண்டு]], [[இறால்]] போன்றவற்றைப் பிடிக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டும் பாக்கு நீரிணைப் பகுதியில் பெரிய வகை மீன்களைப் பிடிக்கின்றனர். அந்த பெரிய மீன்கள் உடனடியாக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்த பிரதேசத்தில் பெயர் பெற்ற கடல் உணவாக நாச்சிக் [[குடா]] [[நீலக்கால் நண்டு]] பெயர் பெற்றது.
வரிசை 128:
[[கொய்]]மீன், [[திரளி]]மீன், [[கெளிறு]]மீன், [[மணலைமீன்]], [[கலவாய்]]மீன், [[பாலைமீன்]], [[ஒட்டி]]மீன், [[எறியாள்]]மீன் (உழுவை மீன்), [[காரல்]]மீன், [[இறால்]], [[நண்டு]]. போன்ற பலவகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும், இங்கு பிடிக்கப்படும் நண்டு, இறால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதேவேளை இந்த தொழிலை நம்பி 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. எது எவ்வாறு இருப்பினும் இங்கு உள்ள கடல் தொழிலாளிகளுக்கு போதிய வசதி எதுவும் அரசாங்கத்தலோ, வேறு வெளிநாட்டு நிறுவனங்களாலோ வழங்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.
[[File:Ollaip paddai.jpg|thumb|ஒலைப்பட்டை]]
வரிசை 138:
இந்த கிராமத்தில் வாழும் பெண்கள் பொதுவாக கைத்தொழிலே செய்கின்றனர். [[கிடுகு]](பன்னாங்கு), பின்னல், ஒலைப்பட்டை கொளுதல், [[கடகம்]], [[தொப்பி]], [[பாய்]], [[தமிழர் மூங்கில்வேலை]] கூடை இளைத்தல், [[பாக்கு]]ச்சீவல், [[கயிறு]] திரித்தல், [[பனாட்டு]] போடுதல், [[மீன்பிடி வலை]] பின்னுதல் போன்ற பல சிறு சிறு கைத்தொழில் புரிகின்றனர்.
கச்சாயில் வாழும் மக்கள் கூலி தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள், இம் மக்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்த வருமானத்தை கொண்டவர்களாகவும் உள்ளனர், இங்கு ஆண்களும் பெண்களும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். அவையாவன: நெல் வெட்டுதல், களை பிடுங்குதல், கட்டுமான பணிகளில், வீட்டு வேலைகள், மற்றும் வேளாண் தொழில்கள் போன்றவற்றை கூலித்தொழிலாக செய்து வருகின்றனர்.(2012)
வரிசை 156:
இந்த சிறிய கிராமத்தில் வாழுபவர்கள் பொதுவாக [[இந்து சமயம்|இந்து மதத்தைச்]] சார்ந்தவர்கள். தற்போது ஒரு சிலர் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ மதத்தில்]] இணைந்திருக்கிறார்கள்.
இந்த கிராமத்தின் விசேட நிகழ்வான கச்சாய் கண்ணகை அம்மன் கோவில் வைகாசிப் பொங்கல் (விசாகப் பொங்கல்),[[காவடி|காவடிகள்]]: [[பறவைக் காவடி]], [[செடில் காவடி]] [[பால்க்காவடி]], போன்றவையை இங்கு காணலாம். இங்கு காணப்படும் இந்துக் [[கோவில்]]கள்:[[File:பறவைக் காவடி.jpg|thumb|கச்சாய் கண்ணகை அம்மன் பறவைக் காவடி]]
| |||