கில்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB
 
No edit summary
 
வரிசை 14:
[[படிமம்:Shah-Husain-Hotak.jpg|thumb|கோடக் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர், சா உசேன் கோடக் (1725-1738).]]
 
=== இடைக்கால இசுலாமிய காலத்தில் கலஜ்கள் ===
கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டின் புவியியலாளர்கள் இபின் கோர்தாத்பே மற்றும் இசுதாக்ரி உட்பட இடைக்கால முஸ்லிம் அறிஞர்கள், [[நடு ஆசியா|நடு ஆசியாவில்]] இருந்து [[ஆமூ தாரியா|ஆமு தாரியாவைக்]] கடந்து இன்றைய ஆப்கானித்தானின் சில பகுதிகளில், குறிப்பாக [[கசுனி மாகாணம்|கசுனி]], [[கலாட்|கலாட்டியில்]] குடியேறிய ஆரம்பகால பழங்குடியினரில் கலஜ்களும் ஒருவர் என்று விவரித்தனர். குறிப்பாக கசுனி, [[கலாட்]] கில்ஜி (கலாட்டி கல்ஜி என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் சபுலிசுதான் பகுதிகளில் 10 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி புத்தகமான ''ஹுதுத் அல்-ஆலம்,'' கலஜ்களை கஜினி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் [[மேய்ச்சல் வாழ்க்கை முறை|ஆடு மேய்க்கும்]] [[நாடோடி|நாடோடிகள்]] என்று விவரிக்கிறது. அவர்கள் மேய்ச்சல் நிலங்களில் அலைந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 
=== கல்ஜி வம்சம் ===
கல்ஜி அல்லது கில்ஜி {{Efn|name=different_names}} வம்சம் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆட்சி செய்தது. 1290 மற்றும் 1320 க்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] பெரும் பகுதிகளின் தனது அதிகாரத்தை அது கொண்டிருந்தது.<ref name="gazet">[https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_403.gif Dynastic Chart] The Imperial Gazetteer of India, v. 2, ''p. 368.''</ref> [[ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி|ஜலாலுதீன் பைருசு கில்ஜியால்]] கில்ஜி வம்சம் இந்தியாவின் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த இரண்டாவது வம்சமாக நிறுவப்பட்டது. இது ஒரு புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்தது. இது துருக்கிய பிரபுக்களின் ஏகபோகத்திலிருந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட இந்திய-முஸ்லிம் பிரபுக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதைக் குறித்தது.<ref>{{Cite journal|last=Mohammad Aziz Ahmad|date=1939|title=The Foundation of Muslim Rule in India. (1206-1290 A.d.)|journal=Proceedings of the Indian History Congress|publisher=Indian History Congress|volume=3|pages=832–841|jstor=44252438}}</ref> அதன் ஆட்சி இன்றைய தென்னிந்தியாவில் வெற்றி பெறுவதற்கும் தொடர்ச்சியான [[மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள்|மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளை]] வெற்றிகரமாக தடுப்பதற்கும் அறியப்படுகிறது.
 
=== தைமூரின் தாக்குதல்கள் ===
1506 நடைபெற்ற கலாட் கில்ஜி போருக்கு ஒரு வருடம் கழித்து, [[தைமூர் வம்சம்|தைமூர்]] ஆட்சியாளர் [[பாபுர்]] கில்ஜி பஷ்தூன்களை நசுக்கும் நோக்கத்துடன் [[காபுல்|காபுலை]] விட்டு வெளியேறினார். வழியில், தைமூர் இராணுவம் சர்தே பந்த் என்னுமிடத்தில் முகமந்த் பஷ்தூன்களைக் கைப்பற்றியது. பின்னர் குவாஜா இசுமாயிலின் மலைகளில் கில்ஜி பஷ்தூன்களைத் தாக்கி கொன்று, "ஆப்கானிய தலைகளின் தூண்" என்று பாபர் தனது [[பாபர் நாமா|பாபர் நாமாவில்]] எழுதினார். தாக்குதலின் போது ஏராளமான ஆடுகளும் கைப்பற்றப்பட்டன. [[மான்|மான்களும்]] [[ஆசியக் காட்டுக் கழுதை|ஆசியக் காட்டுக் கழுதைகளும்]] அதிகம் இருந்த கதாவாசு சமவெளியில் அடுத்த நாள் வேட்டையாடிய பிறகு, பாபுர் காபூலுக்கு அணிவகுத்துச் சென்றார்.<ref>{{Cite book|last1=Verma|first1=Som Prakash|title=The Illustrated Baburnama|date=2016|publisher=Routledge|isbn=978-1317338635|edition=illustrated|url=https://books.google.com/books?id=ioGPCwAAQBAJ|page=24}}</ref><ref name="babur">{{Cite book|last1=Beveridge|first1=Annette Susannah|date=7 January 2014|title=The Bābur-nāma in English, Memoirs of Bābur|url=https://www.gutenberg.org/files/44608/44608-h/44608-h.htm|publisher=Project Gutenberg}}</ref>
 
=== கோடக் வம்சம் ===
ஏப்ரல் 1709 இல், கில்ஜிகளின் கோடக் பழங்குடியினரின் உறுப்பினராக இருந்த மிர்வைசு கோடக், [[சபாவித்து வம்சம்|சபாவித்துகளுக்கு]] எதிராக ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்தினார். மேலும், [[காந்தாரம்|காந்தகாரைத்]] தளமாகக் கொண்ட கோடக் வம்சத்தை நிறுவினார். அவரது மகன் மக்மூத் கோடக் 1722 இல் [[ஈரான்|ஈரானைக்]] கைப்பற்றினார். மேலும் ஈரானிய நகரமான [[இசுபகான்]] ஆறு ஆண்டுகள் வம்சத்தின் தலைநகராக இருந்தது. 1738 இல் அதன் கடைசி ஆட்சியாளரான உசேன் கோடக், காந்தகார் போரில் [[நாதிர் ஷா|நாதிர் சா அப்சரால்]] தோற்கடிக்கப்பட்டபோது வம்சம் முடிவுக்கு வந்தது.
 
=== ஆசாத் கான் ஆப்கான் ===
1747 இல் நாதர் சா அப்சரின் மரணத்திற்குப் பிறகு மேற்கு ஈரானில் நடந்த அதிகாரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆசாத் கான் ஆப்கானித்தான், கில்ஜிகளின் அந்தார் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் [[குர்து மக்கள்|குர்து]] மற்றும் துருக்கியத் தலைவர்களுடனான தொடர் கூட்டணி மற்றும் [[ஜார்ஜியர்கள்|ஜார்ஜிய]] ஆட்சியாளர் இரண்டாம் எரெக்லேவுடனான சமரசக் கொள்கையின் மூலம் - அவரது மகளை அவர் திருமணம் செய்து கொண்டார் - ஆசாத் 1752 மற்றும் 1757 க்கு இடையில் அதிகாரத்திற்கு உயர்ந்தார். வடமேற்கில் உள்ள [[ஊர்மியா]] நகரம் வரை அசர்பைசான் பகுதியின் ஒரு பகுதி உட்பட வடக்கு [[ஈரான்|பெர்சியா]], மற்றும் தென்மேற்கு [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தான்]] மற்றும் கிழக்கு [[குர்திசுத்தான்|குர்திஸ்தானின்]] சில பகுதிகளைக் கட்டுப்படுத்தினார்.<ref name="iranica">Perry, J. R. (1987), "Āzād Khan Afḡān", in: ''Encyclopædia Iranica'', Vol. III, Fasc. 2, pp. 173-174. [http://www.iranicaonline.org/articles/azad-khan-afgan-d Online] (Accessed February 20, 2012).</ref>
 
=== பிரித்தானிய படைகளுடன் மோதல் ===
[[முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்|முதல் ஆங்கிலேய-ஆப்கான் போரின்]] போது (1839-1842), பிரித்தானிய [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய நிறுவனத்திற்கு]] எதிரான ஆப்கானிய வெற்றியில் கில்ஜி பழங்குடியினர் முக்கியப் பங்கு வகித்தனர். 1842 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, காபூலில் இருந்து 16,000 வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய பிரித்தானிய இந்திய படைப்பிரிவு பின்வாங்கியபோது, கில்ஜி படை [[இந்து குஃசு]] மலைப்பகுதி வழியாக அவர்களைத் தாக்கியது. ஜனவரி 12 அன்று, பிரித்தன் படைப்பிரிவு காண்டமாக் அருகே ஒரு மலையை அடைந்தபோது, அவர்கள் கில்ஜி படையால் கொல்லப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டனர். இராணுவத்தில் பணியாற்றிய ஓர் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] உதவி மருத்துவரான [[வில்லியம் பிரைடன்]] என்ற ஒரே ஒரு பிரித்தானியர் மட்டுமே உயிர் பிழைத்தார்.<ref>Dalrymple, William Return of a King, London: Bloomsbury, 2012, pages 385.</ref> இந்த போர் கில்ஜிகளின் வாய்வழி வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் எதிரொலிக்கும் நிகழ்வாக மாறியது. இது பழங்குடியினரின் துணிச்சலைப் பற்றி தனது மக்களிடம் கூறுவதற்காக பிரைடனை வேண்டுமென்றே தப்பிக்க விடப்பட்டதாக விவரிக்கிறது.
 
=== பராக்சாய் காலம் ===
கில்ஜிக்கள் 1886 இல் ஆப்கானித்தானின் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதன் பிறகு அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பராக்சாய் எமிர் அப்துர் ரகுமான் கானால் வடக்கு ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref>[https://books.google.com/books?id=zz9_Ve29eL0C&dq=abdur+rahman+khan+ghilzai++exiled&pg=PA42 Title The Wars of Afghanistan: Messianic Terrorism, Tribal Conflicts, and the Failures of Great Powers] Peter Tomsen, PublicAffairs, 2011</ref>
 
நாடு கடத்தப்பட்டவர்களில் கரோட்டி கில்ஜி பழங்குடியினரின் தலைவரான சேர் கான் நசீர் 1930 களில் கட்டகான்-படக்சன் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி, அவர் இசுபின்சார் காட்டன் நிறுவனத்தை நிறுவினார். மேலும், [[குந்தூசு|குந்தூசை]] பணக்கார ஆப்கானிய நகரங்களில் ஒன்றாக மாற்ற உதவினார்.<ref>Wörmer, Nils (2012). "The Networks of Kunduz: A History of Conflict and Their Actors, from 1992 to 2001" (PDF). Stiftung Wissenschaft und Politik. Afghanistan Analysts Network. p. 8</ref><ref>Grötzbach, Erwin: Afghanistan, eine geographische Landeskunde, Darmstadt 1990, p. 263</ref> சேர் கான், [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]] எல்லையில் உள்ள [[பாஞ்ச் ஆறு|பாஞ்ச் ஆற்றின்]] மீது கீசல் காலா துறைமுகத்தையும் செயல்படுத்தினார். இது பின்னர் அவரது நினைவாக சேர்கான் பந்தர் என்று பெயரிடப்பட்டது.
 
=== நவீன காலம் ===
[[படிமம்:Mohammad_Najibullah_1986.jpg|thumb| கில்ஜி பழங்குடியினத்தைச் சேர்ந்த [[முகமது நஜிபுல்லா]] 1987 முதல் 1992 வரை ஆப்கானித்தானின் அதிபராக இருந்தார்.]]
[[படிமம்:160712-D-SK590-361_(28233988146).jpg|வலது|thumb|2014 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த [[அசரஃப் கனி அகமத்சய்]] கில்ஜி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.]]
"https://tamilar.wiki/w/கில்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது