குடியுரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →'ஸ்டோயிக்'குக்கும் பொது அறங்காவலருக்கும் இடையிலாட வழக்கு: clean up, replaced: முக்கிய பங்கு using AWB |
No edit summary |
||
வரிசை 66:
இதன் அடிப்படையில் நோட்டிபாம் சார்பில் லீச்சென்ஸ்டீன் வழக்கு தொடர முடியாது என்பதையும் உறுதிபட உரைத்தது.
ஏதேனும் சில காரணங்களால் சிலர் குடியுரிமையை இழக்கக் கூடும். சிலர் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியும்.
ஒரு நாடு போரில் தோல்வியடையக் கூடும் அல்லது மற்றொரு நாட்டில் கைப்பற்றப்படக் கூடும். இதில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் வெற்றியடைந்த நாட்டின் அல்லது தேசத்தை கைப்பற்றிய நாட்டின் குடிமக்களாகிவிடுவார்கள்.
ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உடைமையாகக் கூடும். இணைப்பின் வாயிலாக இது நிகழக் கூடும். இவ்வாறு நேர்ந்தால் எந்த நாட்டோடு குறிப்பிட்ட தேசம் சேருகிறதோ அந்த நாட்டின் குடியுரிமையை சேருகின்ற நாட்டு மக்கள் பெறுவார்கள்.
வரிசை 79:
== தேசிய குடியுரிமை இழப்பு ==
சில நாட்டின் விதிமுறைகள், விடுவிப்பு காரணமாக தேசியக் குடியுரிமை இழப்பு நேரும் என்ற வரையறை செய்துள்ளன. இது தொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் அவை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் குடியுரிமையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
சிலர் அரசின் முன் அனுமதியின்றி வேறு நாட்டில் வேலை தேடிக் கொண்டால், சம்பந்தப்பட்ட அரசு குடிமகனின் குடியுரிமையை பறித்துவிடும். இதன் வாயிலாக குடியுரிமை இழப்பு ஏற்படும்.
சொந்தநாட்டை விட்டு விட்டு வெளிநாட்டில் நீண்ட காலம் தொடர்ந்து வசித்தால், குடியுரிமை இழப்பு ஏற்படும். சில நாடுகளில் இப்படிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.
ஒரு நபர் தானாகவே முன்வந்து குடியுரிமையை துறக்கலாம். வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்ற பிறகு பூர்வீக நாட்டின் குடியுரிமையை சிலர் துறந்துவிடுகிறார்கள். இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது என சில நாடுகளில் விதிகள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாட்டின் குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில நாடுகளில் 'குடியுரிமை பதலி' நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் குடியுரிமையை கைவிட்டு விட்டு மற்றொரு நாட்டின் குடியுரிமையை ஏற்பது குடியுரிமை பதலி ஆகும்.
வரிசை 111:
சில வேளைகளில் சிலர் எந்த நாட்டின் குடியுரிமையும் அற்று தவிக்கின்ற அவலநிலை ஏற்படுகிறது. சர்வதேச சட்டப்படி இது கொழுந்துவிட்டு எரியும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒருவர் சர்வதேச சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எதையும் அனுபவிக்கமுடியாது.
1919-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மன் பிரஜைகளின் சொத்தை கைப்பற்ற நட்பு நாடுகளுக்கு முழு உரிமை கிடைத்தது. இதன்படி 'ஸ்டோயிக்' என்பவரின் உடைமைக்களும் பறிமுதல் செய்யப்பட்டடன. இதையடுத்து அவர் ஒரு வழக்கு தொடுத்தார். நான் ஜெர்மன் பிரஜை கிடையாது. எனவே வெர்சைல்ஸ் உடன்படிக்கை எனக்கு பொருந்தாது என்று தனது வழக்கில் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடுக்கப்பட்ட போது ஸ்டோயிக் ஜெர்மனியில் தான் வசித்து வந்தார். அவர் 1872-ம் ஆண்டு பிரஷ்யாவில் பிறந்தார். 1895-ம் ஆண்டு பிரஷ்ய குடியுரிமையிலிருந்து அவர் விடுபட்டார். இந்த விடுபடல் ஜெர்மன் சட்டப்படியானதாகும். அவர் ஜெர்மன் குடியுரிமை கோரி ஒரு போதும் விண்ணப்பிக்கவில்லை. 1896-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பெல்ஜியத்தை விட்டு வெளியேறினார். பின்னர் இங்கிலாந்துக்கு சென்றார். இங்கிலாந்தையே தனது நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டார். ஆனால் இங்கிலாந்தில் இயல்பார்ந்த குடியுரிமையை அவர் பெறவில்லை.
வரிசை 119:
இதே விதிமுறை ஓப்பன்ஹிமுக்கும் - கேட்டமோலுக்கும் எதிரான வழக்கிலும் பின்பற்றப்பட்டது. 1930-ம் வருட ஹேக் உடன்படிக்கையின் 2-வது ஷரத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத மக்கள் கடலில் கொடியற்று அலைந்து திரியும் கப்பல்களைப் போன்றவர்கள் என்று ஓப்பன்ஹிம் குறிப்பிடுள்ளார்.
எந்த நாட்டின் குடியுரிமையும் அற்ற நிலையைத் தணிப்பது தொடர்பான உடன்படிக்கை 1961. இந்த உடன்படிக்கை 1975-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி அமலுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்பபடி 36 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஏற்பளிப்பு நல்கியுள்ளன. இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த 36 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை.
வரிசை 133:
# ஏழாவது ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நீங்கலாக, ஒருவர் தனது குடியுரிமையை பொதுவாக இழப்பது கிடையாது. குடியுரிமை இழப்பிலிருந்து மக்களை காக்க வேண்டிய கடமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு உண்டு.
ஒரு நாட்டின் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்கு தீர்வுகாண கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
| |||