கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 10:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே எழும் உடன்பாட்டின் காரணமாக உருவாக்கப்படுவதுதான் கூட்டாண்மை ஆகும். இந்தியாவில் இந்த உடன்பாடு பேச்சளவிலோ அல்லது எழுத்து வடிவத்திலோ இருக்கலாம். கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவத்தில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறுகளைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை பற்றிய விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் கூட்டாண்மை ஒப்பாவணத்தில் அடங்கியிருக்க வேண்டும்.
 
===கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்===
கீழ்கண்ட செய்திகள் ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் (agreement) வழக்கமாக காணப்படும்.
*நிறுவனத்தின் பெயர்
வரிசை 31:
 
==உரிமைகளும், பொறுப்புகளும்==
===கூட்டாளிகளின் உரிமைகள்===
*ஒவ்வொரு கூட்டாளிக்கும், [[தொழில்|தொழிலை]] நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.
வரிசை 40:
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.
 
===கூட்டாளிகளின் பொறுப்புகள்===
*ஒவ்வொரு கூட்டாளியும், நிறுவனத்தின் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் வரையுறா பொறுப்பேற்கவேண்டும்.
*கூட்டாண்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி, தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
வரிசை 49:
 
==நன்மைகளும், குறைபாடுகளும்==
===கூட்டாண்மையின் நன்மைகள்===
#'''அமைத்தல் எளிது''': கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிறுமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.
#'''பதிவு கட்டாயமில்லை''': கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்குட்பட்டது.
வரிசை 58:
#'''எளிதான கலைப்பு''': கூட்டாளிகளின் [[நொடிப்பு நிலை]], புத்தி நலமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேரிடும். [[சட்டம்|சட்ட]]ப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.
 
===கூட்டாண்மையின் குறைபாடுகள்===
#'''வரையறாப் பொறுப்பு''' : கூட்டாளிகளின் பொறுப்பு வரையுறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப்பொறுப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. ஒரு கூட்டாளி செய்யும் தவறுக்கு, மற்ற கூட்டாளிகளும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது.
#'''குறைவான நிதி வளங்கள்''': கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வழங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மை அமைப்பு பொருந்தாது.
"https://tamilar.wiki/w/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது