கோ. கேசவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சி AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 29:
== பணிகள் ==
கல்வியை நிறைவு செய்தபின் [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்தில்]] உள்ள பொதுத் துறையில் மொழிபெயர்ப்பாளராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் [[அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளி அரசினர் கலைக் கல்லூரி]], புதுக்கோட்டை அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
[[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]], [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்]] ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார்.
{| class="wikitable"
|+
வரிசை 186:
|}
பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், பிரித்தானிய மார்க்சிய ஆய்வாளர் [[ஜார்ஜ் தாம்சன்|ஜார்ஜ் தாம்சனின்]] The Human Essence: The sources of science and art (1974) என்ற நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், [[மாரிஸ் கார்ன்ஃபோர்த்|மாரிஸ் கார்ன்போர்த்தின்]] லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் மக்கள் பண்பாடு, [[மனஓசை (இதழ்)|மனஓசை]], புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், [[பனிமலர் (இதழ்)|''பனிமலர்'']] ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார்.
கேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய [[இயங்கியல் பொருள்முதல்வாதம்|இயங்கியல் பொருள்முதல்வாத]] வழிப்பட்டது.
வரிசை 201:
"அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை.
[[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக]] பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்|தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின்]] நடுவராகவும் செயல்பட்டார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31113-2016-07-01-02-15-19?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29 | title=‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன் | publisher=கீற்று | date=2016 சூன் | accessdate=22 சூலை 2016 | author=பி.தயாளன்}}</ref>
| |||