செயலை மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Info-farmer சி removed Category:தாவரங்கள்; added Category:மரங்கள் using HotCat |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
சங்ககாலத்தில் குறிஞ்சிநிலத்தில் வளர்ந்த மரங்களில் ஒன்று '''செயலை மரம்'''. இது செந்நிறத் தளிர்களைக் கொண்டது. ஆண்கள் இதன் தளிர்களைத் தலையிலும், காதுகளிலும் அணிந்துகொண்டனர். மார்பில் மாலையாகக் கட்டிப் போட்டுக்கொண்டனர். மகளிர் தழையாடை பின்னி இடையில் அணிந்துகொண்டனர். செயலை மரங்களில் ஊசல் கட்டி ஆடினர். பூவாகப் பறித்துக் குவித்து விளையாடினர். காமன் கணையாகப் பயன்படுத்தும் ஐந்து மலர்களில் ஒன்று இந்தச் செயலை. இந்தச் செய்திகளைச் சங்கப்பாடல்கள் நெரிவிக்கின்றன.
:செயலைத் தழை நெருப்பு நிறம் கொண்டது. <ref>அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் (அகநானூறு 188)</ref> காட்டுச் செயலையின் தளிர் பவள நிறம் கொண்டதாக இருக்கும். <ref>அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர் புந்தலை மந்தி வன்பறழ் ஆரும் (ஐங்குறுதூறு 273)</ref> சிவந்த நிறம் கொண்டிருப்பதால் இந்த மரத் தளிர்களுக்குச் 'செயலை' என்று பெயர். <ref>சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் (மலைபடுகடாம் 160)</ref> இது மகளிர் கால் கைகளில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போல் செந்நிறம் கொண்டிருக்கும். <ref>நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை (அகநானூறு 68)</ref> செயலைத் தளிர் போன்று இருந்த தலைவியின் மேனிநிறம் பசலை பாய்ந்து இருந்தது. <ref>மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலை அம் தளிர் அன்ன, என் மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே (நற்றிணை 244)</ref> செயலைத் தளிர் போன்று இருந்த தலையின் மேனிநிறம் பசலை பாய்ந்து மாறிவிட்டதாம். <ref>செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்; (கலித்தொகை 15)</ref> <ref>செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப் பயலை பழங்கண் கொள (கார்நாற்பது 16)</ref>
:செயலை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவர். <ref>அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் (அகநானூறு 38)</ref> கார்காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று செயலை <ref>குறிஞ்சிப்பாட்டு 105</ref>
:ஆண்மகன் செயலை மாலையை மார்பில் அணிந்திருந்தான். <ref>சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் நல் தார் மார்பன், (நற்றிணை 376 7)</ref> ஆண்கள் தலையில் அணியும் பூக்களில் ஒன்று செயலை. <ref>சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி - இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணால் கடிந்தான் உளன். (திணைமாலை 2)</ref> முருகப்பெருமான் காதுகளில் செயலைத் தளிரை வைத்திருந்தான். <ref>செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன் (திருமுருகாற்றுப்படை 207)</ref>
:மகளிர் இடையில் தழையாடை உடுத்திக்கொண்டனர். <ref>ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல் (அகநானூறு 7)</ref> இக்காலத்தில் காதலுக்குப் பூச்செண்டு வழங்குவது போல அக்காலத்தில் 'செயலை'தழையால் செய்யப்பட்ட தழையாடையை வழங்கினர். <ref>நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். (ஐங்குறுதூறு 211)</ref> தழையாடை செய்யப் பறித்துப் பறித்துச் செயலை மரத்தில் இலை இல்லாமல் போகவே அருகில் இருந்த '''தரலை''' மரத்து இலைகளைத் தழையாடைக்குப் பறித்துக்கொண்டார்களாம். <ref>திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயல தரலை மாலை சூட்டி (குறுந்தொகை 214)</ref>
:திருமாலிருஞ்சோலை மலையின் மரக் கிளைகளில் செயலை மலர்ந்திருந்தனவாம். <ref>சினையெலாம் செயலை மலர (பரிபாடல் 15 31)</ref>. காமன் கணையின் ஐந்து மலர்களில் <ref>மயிலை, செயலை, மா, குவளை, தாமரை</ref> ஒன்று செயலை <ref>வெற்றிச்சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த மலர்வாய் அம்பின் (மணிமேகலை 24-38)</ref>
:இந்த மரத்தின் இனங்கள்
* [[நெட்டிலிங்கம்|நெட்டிலிங்க மரம்]]
* [[அசோக மரம்]]
{{Reflist}}
| |||