பட்டிண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
No edit summary |
||
வரிசை 33:
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டிண்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 285,813 ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 151,782 மற்றும் 134,031 ஆகும். பட்டிண்டா நகரத்தின் 1000 ஆண்களுக்கு 868 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 211,318 ஆகும். இதில் 118,888 ஆண்களும், 92,430 பெண்களும் உள்ளடங்குவர். நகரத்தின் சாராசரி கல்வியறிவு விகிதம் 82.84% வீதம் ஆகும். இதில் ஆண் மற்றும் பெண் கல்வியறிவு விகிதங்கள் முறையே 87.86% மற்றும் 77.16% ஆகும். இந்நகரின் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,713 ஆகும். இதில் 16,472 சிறுவர்களும், 14,241 சிறுமிகளும் அடங்குகின்றனர். 1000 சிறுவர்களுக்கு 865 சிறுமிகள் என்ற சிறுவர் பாலின விகிதம் காணப்படுகின்றது.<ref>{{Cite web|url=http://www.census2011.co.in/census/city/16-bathinda.html|title=Bathinda City Population Census 2011-2019 {{!}} Punjab|website=www.census2011.co.in|access-date=2019-12-26}}</ref>
பட்டிண்டா நகரில் 62.61% வீதமான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். சீக்கிய மதம் 35.04% மக்காளால் பின்பற்றப்படும் இரண்டாவது பிரபலமான மதமாகும். சிறுபான்மையினராக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் வசிக்கின்றனர். நகரத்தில் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும், பட்டிண்டா மாவட்டத்தில் 70.89% வீதமான சீக்கியர்கள் வாழ்கின்றனர். <ref>{{Cite web|url=http://www.census2011.co.in/census/district/599-bathinda.html|title=Bathinda District Population Census 2011-2019, Punjab literacy sex ratio and density|website=www.census2011.co.in|access-date=2019-12-26}}</ref>
வரிசை 43:
==பிரபலமான இடங்கள்==
உள்நாட்டில் இரசியா சுல்தானா கோட்டை என்றும் அழைக்கப்படும் கிலா முபாரக் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் பழமையான கோட்டைகளில் ஒன்றாகும். டெல்லியின் முதல் பேரரசி இரசியா சுல்தானா இக்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
தம்தாமா சாஹிப் நகரின் தென்கிழக்கில் 28 கி.மீ தொலைவில் உள்ள தல்வண்டி சபோவில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா ஆகும். சீக்கிய வேதமான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் இறுதி பதிப்பை பத்தாவது சீக்கிய குரு தயாரித்த இடமாக அறியப்படுகிறது.
மைசர் கானா ஒரு புகழ்பெற்ற இந்து கோவிலாகும். இது ஜ்வாலா ஜி என்ற இந்து தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நகரின் தென்கிழக்கில் 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிடும் இரு பெரிய விழாக்களுக்காக அறியப்படுகின்றது.
| |||