பிரபஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 42:
 
== தனி வாழ்க்கை ==
[[File:Prabanjan_2.jpeg|thumb|பிரபஞ்சன் உடன் அமரர் ச. பொன்னுத்துரை மற்றும் இ. தியாகலிங்கம்]]
பிரபஞ்சன் ஜூலை 5, 1970-ல் பிரமிளா ராணியை மணந்தார். கௌதம், கௌரிசங்கர், சதீஷ்குமார் என மூன்று மகன்கள்.
முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து புதுவை 'மாலை முரசு’வில் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். இதழாளராக குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார்.
 
சென்னையில் அரசு சார்பில் இதழாளர்களுக்காக அளிக்கப்பட்ட பீட்டர்ஸ் காலனி இல்லத்தில் பிரபஞ்சன் பெரும்பாலும் வாழ்ந்தார். குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்தது.
 
== இறுதிக்காலம் ==
தன் மனைவி மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு மு.வேடியப்பன், [[பவா செல்லதுரை]], [[எஸ். ராமகிருஷ்ணன்]] ஆகியோரின் முன்னெடுப்பில் 'எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு ஏப்ரல் 29, 2017 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அவருக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார்.
"https://tamilar.wiki/w/பிரபஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது