வட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jenakarthik வட்டம் (தாலுகா)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Thiagalingam "'''வட்டம்''' அல்லது '''தாலுகா''' இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''வட்டம்''' அல்லது '''தாலுகா''' இந்தியாவின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்ட]] [[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த் துறையின்]] ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு '''வருவாய் வட்டம்''' எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], [[வருவாய் கிராமம்|வருவாய்க் கிராமங்களும்]] இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில [[மண்டல துணை வட்டாட்சியர்]]களும், [[வருவாய் ஆய்வாளர்]]களும், எழுத்தர்களும், [[கிராம நிர்வாக அலுவலர்]]களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் [[வட்டாட்சியர்]] அலுவலகம் எனப்படுகிறது.<ref>{{Cite dictionary |url=http://www.lexico.com/definition/tehsil |archive-url=https://web.archive.org/web/20200322190015/https://www.lexico.com/definition/tehsil |url-status=dead |archive-date=March 22, 2020 |title=tehsil |dictionary=[[Lexico]] UK English Dictionary |publisher=[[Oxford University Press]]}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=WJrDCgAAQBAJ&q=Why+did+tehsil+replace+pargana&pg=PA343|title=Spatial Diversity and Dynamics in Resources and Urban Development: Volume 1: Regional Resources|first1=Ashok K.|last1=Dutt|first2=Allen G.|last2=Noble|first3=Frank J.|last3=Costa|first4=Sudhir K.|last4=Thakur|first5=Rajiv|last5=Thakur|first6=Hari S.|last6=Sharma|date=15 October 2015|publisher=Springer|isbn=9789401797719|via=Google Books}}</ref><ref name="Balakrishnan2007">{{citation|author=Rajiv Balakrishnan|title=Participatory Pathways: People's Participation in Development Initiatives|url=https://books.google.com/books?id=Chvak7Vu9xYC&pg=PA65|year=2007|publisher=Pearson Education India|isbn=978-81-317-0034-1|pages=65–}}</ref>
==வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்==
* மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
* கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
* வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
* வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
* மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
== இதையும் பார்க்க==
[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு]]
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
| |||