சூ. இன்னாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam " '''சூ. இன்னாசி''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 1:
'''சூ. இன்னாசி''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[பாளையங்கோட்டை]] [[தூய சவேரியார் கல்லூரி]]யில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவராகவும், [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராகவும், திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தமிழ்ப் பேராசிரியர், தலைசிறந்த ஆய்வறிஞர், இலக்கணவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகங்கள் சூ. இன்னாசிக்கு உண்டு. அகராதி, இலக்கணம், இலக்கியம், மொழியியல், திறனாய்வு, ஒப்பாய்வு போன்ற பல்துறைப் புலமை சான்ற இவர் எழுதிய ''“திருத்தொண்டர் காப்பியம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
== இலக்கிய வாழ்க்கை ==
சூ. இன்னாசி, கல்லூரி இதழ்களிலும், இலக்கிய ஆய்விதழ்களிலும் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். சென்னைப் பல்கலைக் கழகம் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். கிறித்தவத் தமிழ் இலக்கியம் தொடர்பான கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இலக்கணம், மொழியியல், அகராதி, மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், புதினம், சிறுகதை, இதழியல் என்று இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டார்.
சூ. இன்னாசி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நிகழ்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றினார். சிங்கப்பூர், மலேசியாவில் ‘சைவம்’ குறித்துச் சிறப்புரையாற்றினார்.
சூ. இன்னாசி எழுதிய ‘கவிதைச் செல்வம்’ என்ற கிறித்தவக் கலைக் களஞ்சிய நூலில், கிறிஸ்தவ இலக்கியங்களை அந்தாதி, [[அம்மானை]], ஆற்றுப்படை, உலா, கலம்பகம், காப்பியம், கீர்த்தனை, கும்மி, குறவஞ்சி, சதகம், சிந்து, தூது, தொகுப்பு, நாடகம், பதிகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், புலம்பல், மாலைகள், வண்ணம், வழிபாட்டுப் பாடல்கள், வாழ்வியல் விவிலியம் என வகைப்படுத்தி அகரவரிசைப்படி தொகுத்தார். நூல்களை எழுதியவர் பெயர், எழுதப்பட்ட ஆண்டு, வெளியிட்ட பதிப்பகம் போன்ற செய்திகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றன.
== கவிதைநூல்கள் ==
| |||