இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''இலக்கியம்''' என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.<ref>வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). ''சரஸ்வதி களஞ்சியம்''. சென்னை: கலைஞன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 12:
தமிழ் இலக்கிய வரலாற்றில், அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில், தற்கால ரீதியில், ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று, அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழை]] வளர்க்க [[தமிழ்நாடு]] அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெரிதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம், இலக்கியத்துக்காக என்பதை விட, இலக்கியம், மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.
 
===வரலாறு===
 
முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல் வாயிலாக அறியமுடிகிறது.
வரிசை 30:
<ref name="இலக்கியக்கலை">{{cite book | title=இலக்கியக்கலை | publisher=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | location=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-600018 | pages=3}}</ref>
 
===பாவாணரின் கருத்து===
 
மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை, பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்; அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ், ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை.<ref>{{cite book | title=அரிஸ்டாடிலின் கவிதை இயல் | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.,சென்னை-14 | author=அ.அ.மணவாளன் | year=2001 | pages=19}}</ref>
வரிசை 45:
Literature என்னும் ஆங்கிலச் சொல், இலக்கியம் எனும் பொருளில் கி.பி. ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில்(1812)தான் வழக்கிற்கு வந்ததென்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்துரைக்கின்றது.<ref>{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=11}}</ref>
 
===வரையறை===
 
இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம், மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது; மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார்.
வரிசை 125:
பொதுவாக, இலக்கியம், வடிவ அமைதி, பொருள், வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைக் கொண்டு பல வகையாகப் பாகுபடுத்தப்படும். இலக்கியம் உணர்வை சார்ந்து அமைவது ஆகும்.
 
===அயல்நிலைப் பாகுபாடு===
 
இலக்கியத்தைத் தூய இலக்கியம், சார்பு இலக்கியம் என வகைப்படுத்துவர். இவற்றுள் தூய இலக்கியம் எனப்படுவது, இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக இடம் பெற்றுள்ள படைப்பிலக்கியமாகும். கற்பனைக்கோ,
கலையழகிற்கோ இடம் தராமல் கருத்துகளை அறிவுறுத்தும் இலக்கியம் சார்பு இலக்கியமாகும்.
 
===அனுபவ நிலைப் பாகுபாடு===
 
ஓர் இலக்கிய படைப்பானது, படைப்பாளனின் அனுபவத் தன்மை, செறிவு வகை, மனித உறவு, முயற்சித்திறன் ஆகியவற்றிற்கேற்ப படைக்கப்படுகிறது. இந்த அனுபவ நிலையையும் பொருளின் இயல்பையும் கருத்தில் கொண்டு இலக்கியம், ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்தப்படும்.
வரிசை 145:
நூல்கள், பஞ்சமரபு ,கூத்து நூல் போன்ற கலைவிளக்க நூல்கள் அடங்கும்.
 
===வடிவ அமைதிப் பாகுபாடு===
 
துறை,தாழிசை,விருத்தம் உள்ளிட்ட செய்யுள்கள், யாப்பிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் இதன் பாற்படும்.
வரிசை 173:
6) உருவ,உள்ளடக்க விகாரங்கள்.
 
===கலை இயைபு===
 
ஒரு கலைப்படைப்பில்,அதன் பகுதிகளுக்கும் அதன் முழுமைக்கும் இடையேயான இணைப்பே கலை இயைபு ஆகும்.
 
===கலைப்பின்னல்===
 
ஒரு கருத்தைக் கலைப்படைப்பாக மாற்றுவதற்கு கலைப்பின்னல் ஊடகமாக இருக்கிறது.
"https://tamilar.wiki/w/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது