கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழ் இலக்கியங்களிலும், தத்துவங்களிலும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 31:
மேலும், "நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்", அது "எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது" என்கிறார்.
 
=== பேச்சு தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை ===
பேச்சு தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வேறுபாடு உண்டு. பேச்சு தமிழ் பாமரர் தன்மை ("low status") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை ("high status") உடையதாகவும், கருதுவோரும் உளர். கட்டுரைக்கு என்றும் கருத்துச் செறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்கப்பட்ட (edited), ஒழுங்கமைக்கப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சு தமிழ் போல எழுத வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இல்லை. இருப்பினும், பேச்சு தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகப்படுத்தல் மூலம் அதன் எளிமையையும், பேச்சு தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரைப் பெற்றுக் கொள்ளும்.
 
=== நாட்டுப்புற தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை ===
தமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்குப் பலமும், பலவீனமும். ஒவ்வொரு பிரதேசத் தமிழர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களைப் (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களைக் குழப்பி விடுகின்றது. இலக்கிய நயத்திற்காகக் கதைகளிலோ, கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையைப் பயன்படுத்தினாலும், தகவல்களைத் தரும் கட்டுரைகளில் சீரிய கட்டுரைத் தமிழ் நடையைப் பயன்படுத்துவதே பன்முகத் தமிழரும் புரிந்து கொள்ள உதவும்.
 
"https://tamilar.wiki/w/கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது