தொகைநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>JayarathinaAWB BOT →தமிழ் தொகைநூல்கள்: clean up, replaced: திருமுறை → திருமுறை using AWB |
imported>Sukanthi "பலரால் பாடப்பட்ட பாடல்களோ, நூல்களோ ஒரே தலைப்புப் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுப் தரப்படும்போது அவை '''தொகைநூல்கள்''' எனப்படுகின்றன. இத் தொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:09, 11 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
பலரால் பாடப்பட்ட பாடல்களோ, நூல்களோ ஒரே தலைப்புப் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுப் தரப்படும்போது அவை தொகைநூல்கள் எனப்படுகின்றன. இத் தொடரில் தொகை என்னும் சொல் 'கூட்டுத்தொகை', 'பெருக்குத்தொகை' என்பனவற்றில் கொள்ளப்படும் பொருள் பாங்கினது. இரண்டு சொற்கள் ஒரு சொல்லாகத் தொகுக்கப்பட்டிருக்கும் தொடரை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என்றெல்லாம் தொகைநிலைத் தொடராகக் குறிப்பிடுவது போன்றது இவ் வழக்கு. தொல்காப்பியம் தொகைச்சொல் [1], தொகைநிலை [2], தொகைமொழி [3], தொகைமொழிநிலை [4] என்னும் தொடர்களால் இதனைக் குறிப்பிடுகிறது. தொகை என்னும் சொல் திருக்குறளிலும் இப் பொருளில் கையாளப்பட்டுள்ளது. [5]
தமிழ் தொகைநூல்கள்
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- பதினெண் கீழ்க்கணக்கு
- ஐம்பெருங் காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள்
- திருமுறை
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- சைவ சித்தாந்த சாத்திரங்கள்