எம். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"{{Infobox person | name = எம். சரோஜா | image = | alt = | caption = | birth_name = | birth_date = <!-- {{Birth date and age|YYYY|MM|DD}} or {{Birth-date and age|Month DD, YYYY}} --> | birth_place = மயிலாடுதுறை | death_date = {{death date|2012|4|2}} | death_place = சென்னை, இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:34, 22 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

எம். சரோஜா
பிறப்புமயிலாடுதுறை
இறப்பு(2012-04-02)ஏப்ரல் 2, 2012
சென்னை, இந்தியா இந்தியா
தேசியம் இந்தியர்
பணிநடிகை, நகைச்சுவையாளர்
வாழ்க்கைத்
துணை
கே. ஏ. தங்கவேலு
பிள்ளைகள்சுமதி

எம். சரோஜா (M. Saroja)(பிறப்பு: 1933. இறப்பு: ஏப்ரல் 2, 2012) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத்துறை

தன்னுடைய 14ஆம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், பூலோக ரம்பை , அரசிளங்குமரி, வண்ணக்கிளி, தேன் நிலவு, திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.[1][2]

இல்வாழ்க்கை

நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958ஆம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார்.[1][2]

மரணம்

சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா ஏப்ரல் 2, 2012 அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்.[1][2]

விருதுகள்

சரோஜா தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.[1] 2002ஆம் ஆண்டு தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதான சிவாஜி கணேசன் விருதினைப் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Actress M Saroja passes away". Tamilomovie.com. Archived from the original on 2012-04-05. Retrieved 2012-04-13.
  2. 2.0 2.1 2.2 "Veteran actress M Saroja passes away". Times of AP. 2 April 2012. http://timesofap.com/cinema/veteran-actress-m-saroja-passes-away/. பார்த்த நாள்: 6 April 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._சரோஜா&oldid=105267" இலிருந்து மீள்விக்கப்பட்டது