காசிமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
imported>Sukanthi "{{Infobox settlement |name = காசிமேடு</br>Kasimedu |native_name = |native_name_lang = தமிழ் |other_name = காசிமாநகர் |settlement_type = புறநகர்ப் பகுதி |image_skyline = |image_alt = |image_caption = |nickname = |image_map = |map_alt = |map_caption = |pushpin_ma..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:55, 2 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
காசிமேடு Kasimedu காசிமாநகர் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 13°07′30.4″N 80°17′43.8″E / 13.125111°N 80.295500°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஏற்றம் | 31 m (102 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
| மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
| இணையதளம் | https://chennaicorporation.gov.in |
காசிமேடு (Kasimedu) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் உணவு மீன்கள் விற்பனையாகும் இடங்களில் காசிமேடு பிரபலமானது.[1] குறைந்த விலை மற்றும் விதவிதமான மீன்களின் வரத்து இதற்கான காரணம். ஏலம் விடப்படும் மீன்களை வாங்க, மொத்த வியாபாரிகள், சில்லறை வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதிகமாக வந்து செல்லுகின்றனர்.[2] காசிமேடு, சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் இருநூறு டன் மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.[3] 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், காசிமேடு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.[4] சென்னையின் துறைமுகக் கட்டுமானங்கள் விளைவாக, காசிமேடு பகுதியில் கடல் அரிப்புகள் ஏற்படுகின்றன.[5] துறைமுகக் கட்டுமானங்கள் காரணமாக வடக்கு நோக்கி நகரும் நீரோட்டங்கள் தடுக்கப்படுவதால், நீரோட்டங்களின் திசை மாறி, பின் விளைவுகளால், காசிமேடு பகுதியில் சுற்றி கடல் அரிப்புகளை ஏற்படுத்துகின்றன.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசிமேடு ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 13°07'30.4"N 80°17'43.8"E (அதாவது, 13.125100°N 80.295500°E) ஆகும்.
காசிமேடு மீன் சந்தை
காசிமேட்டில் மீன் சந்தை ஒன்று உள்ளது. சென்னையின் மீன் சந்தைகளில் காசிமேடு மீன் சந்தை, கூட்டம் அதிகமாகக் காணப்படும் மீன் சந்தை. வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் விதவிதமான மீன்களின் வரத்து அதிகமாக காணப்படுவதுடன், விலை குறைவாகவும் விற்கப்படும்.[6]
காசிமேடு துறைமுகம்
காசிமேட்டில் மீன்பிடித் துறைமுகம் ஒன்று உள்ளது. சர்வதேச தரத்தில் இதை மேம்படுத்த, இந்திய அரசு ரூ.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.[7] காசிமேட்டில், துறைமுகம் சார்ந்த கல்விக்கான அரசு கல்வி நிறுவனமான 'மத்திய மீன்வளத்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையம்' ஒன்று உள்ளது.[8]
அருகிலுள்ள ஊர்கள்
திருவொற்றியூர், ராயபுரம், ஜார்ஜ் டவுன் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்கள். இங்கிருந்து மட்டுமன்றி, சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மக்கள், வெளியூர் வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக மீன்கள் கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் - Dinamalar Tamil News". Dinamalar. Retrieved 2022-11-19.
- ↑ "காசிமேட்டில் கார்த்திகை மாதத்திலும் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்" இம் மூலத்தில் இருந்து 2022-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221121043151/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=815888.
- ↑ "காசிமேடு - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2022-11-21.
- ↑ Senguttuvan, கோ செங்குட்டுவன் / Ko (2016-05-01). கூவம் - அடையாறு - பக்கிங்காம் : சென்னையின் நீர்வழித்தடங்கள் / Cooum - Adyar - Buckingham: Chennaiyin Neervazhithadangal. Kizhakku Pathippagam. ISBN 978-93-84149-80-2.
- ↑ அறக்கட்டளை, தமிழ் மரபு (2016-07-15). மின்தமிழ்மேடை - 6. தமிழ் மரபு அறக்கட்டளை.
- ↑ "காசிமேடு சந்தையில் குறைந்த மீன் விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! - முழு விலை பட்டியல் இதோ..!". News18 Tamil. 2022-10-23. Retrieved 2022-11-19.
- ↑ "காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்: எல்.முருகன் தகவல்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/886262-kasimedu-port-will-be-upgraded-to-international-standards-at-a-cost-of-rs-97-crore.html.
- ↑ அக் 22, பதிவு செய்த நாள்:; 2022. "காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.97 கோடி - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=3152242.