கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement | name = கும்பகோணம் (குடந்தை) | official_name = | other_name = குடந்தை, கும்பேஸ்வரம் | settlement_type = மாநகராட்சி | image_skyline = Town Hall Kumbakonam.jpg | image_alt = | image_caption = கும்பகோணம் டவுன் ஹால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 82:
"கும்பகோணம்" என்ற பெயர், ஆங்கிலத்தில் "பாட்ஸ் கார்னர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name="catholicp710">{{cite book|page=710|title=The Catholic encyclopedia: an international work of reference on the constitution, doctrine, discipline, and history of the Catholic church, Volume 8|first=Charles George|last=Herbermann|author2=Edward Aloysius Pace |author3=Condé Bénoist Pallen |author4=Thomas Joseph Shahan |author5=John Joseph Wynne |publisher=The Catholic Encyclopedia Inc.|year=1934}}</ref> [[பொது ஊழி|பொ.ஊ.]] 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும், இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.<ref name="km"/>
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு [[தலபுராணங்கள்]] இயற்றப்பட்டுள்ளன. அவை:
வரிசை 94:
கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.<ref>புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 2004 சிறப்பு மலர்</ref>
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது.<ref name="kk">குடந்தையும் குடமூக்கும், மகாமகம் 1992 சிறப்பு மலர்</ref>
பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
வரிசை 103:
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி}}
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.<ref name="kk"/> [[நாயன்மார்|நாயன்மார்களில்]] ஒருவரான [[திருநாவுக்கரசர்]] தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
{{cquote| பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங் <br>
வரிசை 110:
கோவ ணத்துடை யான்குடமூக்கிலே}}
[[கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்|கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின்]] முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது.<ref>குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்</ref>
| |||