குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>D.Vijay Ananth
imported>~AntanO4task
சி no EV
வரிசை 46: வரிசை 46:
#விஸ்வநாதராவ் பூங்கா
#விஸ்வநாதராவ் பூங்கா
#கலைவாணர் அரங்கம்
#கலைவாணர் அரங்கம்

==படக்காட்சியகம்==
<gallery>
படிமம்:Folk Arts Museum, Courtallam.JPG|[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]]
படிமம்:Main Falls Arch, Courtallam.JPG|பேரருவி வளைவு
படிமம்:Children Park, Courtallam.JPG|சிறுவர் பூங்கா
படிமம்:Courtallam Township.JPG|குற்றாலம் பேரூராட்சி அலுவலகம்
படிமம்:கலைவானர் அரங்கம்.JPG|கலைவானர் அரங்கம்
படிமம்:Viswanatharao Park.JPG|விஸ்வநாதராவ் பூங்கா
</gallery>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

02:34, 9 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

குற்றாலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 2,368 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2368 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 41% ஆண்கள், 59% பெண்கள் ஆவார்கள். குற்றாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குற்றாலம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அமைவிடம்

குற்றாலம் மலை

குற்றாலம் தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்,திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலம் அருவிகள்

பேரருவி
ஐந்தருவி

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  1. குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
  2. சித்திர சபை
  3. தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
  4. சிறுவர் பூங்கா
  5. விஸ்வநாதராவ் பூங்கா
  6. கலைவாணர் அரங்கம்

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குற்றாலம்&oldid=128643" இலிருந்து மீள்விக்கப்பட்டது