ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 97:
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஆற்காடு சுற்றியுள்ள [[இராணிப்பேட்டை]] நகரம் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும்.
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
* ஆற்காடு நகரம் [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] 1959 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
* 1973 ஆம் ஆண்டு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]]வும் மாற்றப்பட்டது.
* 1998 ஆம் ஆண்டு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. 30 வார்டுகளுக்கும் ஒவ்வொரு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
== கல்வி ==
| |||