|
==வரலாறு==
செஞ்சி கோட்டையை கட்டியவர் மாமன்னர் ஆனந்த கோனார் என்பவர் ஆவார் ஆனந்த கோனார். 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர்.இவரை தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். அனந்த கோனார் ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ண கோனார் மேலும் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர்
===கோனார் ஆட்சி===
செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த ஆனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
====காடவர்கோன் தொடர்பான சான்றுகள்====
வரலாற்றறிஞர் திரு [[க. அ. நீலகண்ட சாத்திரி]] அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் ''விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான்'' எனக் குறிப்பிடுகிறார்.<ref name="ChozhargalNeelakandaChaatthiri">[http://www.worldofcoins.eu/forum/upload/quantgeek/%5BUniversity%20of%20Madras,%20Sastri%5D%20The%20Cholas%20-%20Volume%201.pdf சோழர்கள், க. அ. நீலகண்ட சாத்திரி] - Vikkramasolan-ula mentions the Kadava who rode a rutting elephant and was Lord of the Senjiyar of the Strong Embattled Fortress. This is perhaps the earliest mention of the Fortress of Gingee, பக்கம் 347 & 362</ref> [[விக்கிரம சோழன் உலா]]வில்,
கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச்
செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்
- '''([[விக்கிரம சோழன் உலா]] - கண்ணி 79 & 80)'''
'''பொருள்''' : காவல் கொண்ட மதிலையுடைய சிவந்த பொன்னாலாகிய மேடைகள் நெருங்கிய கோட்டை சுற்றிய செஞ்சியர்கோனாகிய தூணிற் கட்டப்படுஞ் செருக்குடைய யானையைக்கொண்ட காடவன் என்பவனும்.
என்றுள்ளது. செஞ்சிக்கோட்டையைப் பற்றி கிடைக்கும் இந்தச் சான்றே மிகப் பழமையான சான்றாகும் என்பதாக அவர் தெரிவிக்கிறார்.
[[ஒட்டக்கூத்தர்]], [[விக்கிரம சோழன்]] காலத்திலும் தொடர்ந்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், அவன் மகன் [[இரண்டாம் இராஜராஜ சோழன்]] காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். [[சேந்தமங்கலம்|சேந்தமங்கலத்தைத்]] தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காடவன் [[கோப்பெருஞ்சிங்கன்]], சோழ மன்னன் [[மூன்றாம் ராஜராஜன்|மூன்றாம் ராஜராஜனை]] சிறை பிடித்த செய்தி [[வயலூர் கல்வெட்டு|வயலூர் கல்வெட்டின்]] மூலம் நமக்கு தெரியவருகிறது.<ref name="VayaloorKalvettu">[https://archive.org/stream/epigraphiaindica014351mbp/epigraphiaindica014351mbp_djvu.txt Epigraphia Indica, Vol-XXIII, Page No.180-181]</ref> [[மூன்றாம் ராஜராஜன்|மூன்றாம் ராஜராஜனை]] [[செஞ்சி]]யை அடுத்த [[அன்னமங்கலம்]] எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்ததற்கு ஆதாரமாக அக்குகையில் காணப்படும் சிற்பமும் அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் உறுதிபடுத்துகின்றன. 13<sup>ஆம்</sup> நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.{{cn}} அதன் பிறகு விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், கர்நாடக நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது.
====ஆனந்த கோன் தொடர்பான சான்றுகள்====
# ஆனந்த கோன்<ref>{{cite book | url=https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&rlz=1C1VFKB_enIN616IN616&ion=1&espv=2&ie=UTF-8#q=gingee+fort+ananda+kon&tbs=bkv:a,sbd:1&tbm=bks | title=செஞ்சியின் வரலாறு | publisher=? பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்) | author=Chidambaram S. Srinivasachari | year=1943 (2003) | isbn=? (9381343411, 9789381343418)}}</ref> கி.பி. 1190-1240{{cn}}
# கிருஷ்ணா கோன் 1240-1270
|