பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Haripriyan4444 No edit summary |
imported>Haripriyan4444 |
||
வரிசை 26:
சிவபக்தியில் சிறந்து விளங்கிய செங்கட்சோழன் பேராற்றலுடன் திகழ்ந்தான். சேரமான் கணைக்கால் இரும் பொறைக்கும் இவனுக்கும் இடையே பகை முற்றியது. முதலில் நடந்த போரில் கழுமலம் என்ற இடத்தில் சேரன், சோழனை வென்று சிறைபிடித்தான். இரண்டாவதாக பொன்கலூர் நாட்டுத் திருப்பூரிலும் பூந்துறை நாட்டு பெருந்துறையிலும் நடந்த போரில் பெருந்துறை கோட்டையில் சேரனை, சோழன் வென்று சிறைபிடித்து குடவாயில் கோட்டம் எனும் கும்பகோணத்தில் சிறை வைத்தான். சிறையில், சேரன் காவலாளியிடம் குடிக்க நீர் கேட்க, அவனை அலட்சியப்படுத்தும் வகையில், காவலன் வெகு நேரம் கழித்து கொண்டு வர, அதைக் குடிக்க மறுத்தான் சேரன். பிறகு தன் அவைப் புலவரும் உயிர்த் தோழனும் ஆன பொய்கையாருக்கு, நடந்த சம்பவத்தை பாடலாக எழுதி அனுப்பிவிட்டு ஒரு சொட்டு நீரோ, ஒரு பருக்கை உணவோகூட எடுத்துக் கொள்ளாமல், தன் உயிரை விட மானத்தைப் பெரிதாக எண்ணி, பட்டினி கிடந்து, சிறையில் நாட்களைக் கழித்தான்.
பல நாட்கள் கழித்து, தன்னை வந்தடைந்த அந்தப் பாடலைப் படித்த பொய்கையார், நண்பன் சேரனின் நிலையறிந்து துடித்துப் போனார். சேரன் இருக்கின்றானா, இறந்துவிட்டானா எனத் தெரியாத நிலைமையில் சோழனைச் சென்று சந்திக்க மேலும் சில நாட்கள் ஆகிவிட்டன. சோழனை வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் சேரனை விடுதலை செய்ய மாட்டான். கொலை பட்டினி இருக்கும் சேரன் மீது துளியும் ஈவு இரக்கம் காட்டாதவன், புலவர் சொல்லியா கேட்கப் போகின்றான் என்று தயங்கினார். ஆனால், புகழுக்கு மயங்காதோர் உண்டோ என்ற கருத்து மனதில் தோன்ற, திருப்பூர் மற்றும் பெருந்துறை போர்க்களத்தில் சோழனின் போர்த்திறத்தை வர்ணித்து
புலவர் பெருந்தகையால் பெருந்துறை கோட்டையில் நடந்த போர் தமிழக மாந்தர்களின் பெருந்தன்மையை மணக்க வைக்கின்றது. இன்றும் பெருந்துறை அந்த கோட்டையின் சுவடி மறையாமல் காத்து நிற்கின்றது. பேருந்து நிலையத்தைச் சுற்றி கோட்டை முனியப்பன் கோயில், கோட்டை பெருமாள் கோயில், கோட்டை அனுமந்தராயன் கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் என பல கோயில்கள் நிறைந்து, மறைந்து போன கோட்டையை மக்கள் மனதில் மறையாமல் நிலை நிறுத்தி வருகின்றன.
| |||