பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Haripriyan4444
No edit summary
imported>Haripriyan4444
வரிசை 21:
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:Perundurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==வரலாறு==
[[கோச்செங்கட்சோழன்]] எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் தினம் சிலந்தி வலை பின்ன, யானை பிய்த்துப் போட, ஒரு நாள் கோபம் மிக அதிகம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்து வதைத்தது. வலியைத் தாங்க முடியாமல் யானை தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி அடித்து சிலந்தியைக் கொன்று விட்டு தானும் உயிர் துறந்தது.
 
சிலந்தி பின்னிய வலை மிகப் பெரிய சிவ சேவையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சோழகுலம் செழிக்க அரசனுக்கு மகனாகப் பிறக்கும் பெரும் பேற்றினை வழங்கினார், ஈசன். சோழ மன்னன் சுபதேவர்- அரசி கமலவதி மணிவயிற்றில் பிற்காலத்தில் 74 யானைப் புகா மாடக் கோயில்களைக் கட்டிய சிவநேசச் செல்வன் உதித்தான். பிள்ளைப் பேறு நடக்கவிருந்த சமயத்தில் ஜோதிட வல்லுநர் ஒருவர், ‘‘இன்னும் ஒரு மணி நேரம் கழித்து குழந்தை பிறந்தால் மூன்று உலகங்களையும் கட்டியாளப் போகும் சோழகுல விளக்காகத் திகழ்வான்’’ என்று கூறியதைக் கேட்ட கமலவதி தேவியார், ‘‘அப்படியானால் என் கால்களை மேலே தூக்கி, என்னைத் தலைகீழாகக் கட்டிப் போடுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிள்ளை பிறந்தது; ஆனால் தாய் இறந்தாள். இருவர் நிலையும் தலைகீழாக மாறியதால் பெரிய உயிர் பிரிய, சிறிய உயிரின் கண்களுக்கு ரத்தம் அதிகமாகப் பாய, செக்கச் சிவந்த கண்களுடன் பிறந்தது குழந்தை. அதனால் செங்கட்சோழன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
"https://tamilar.wiki/w/பெருந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது