பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Haripriyan4444
imported>Haripriyan4444
வரிசை 24:
சங்க காலத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆனைமலைப் பகுதியை ஆட்சி புரிந்த நன்ன்னை வென்ற வாகைப் பெருந்துறை இவ்வூரேயாகும். அதனை “இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செரு” என்று கல்லாடனார் அகநானூற்றுப் பாடலில் (199) குறிப்பிட்டுள்ளார்.
பெருந்துறையில் சோரீசுவரர், வேதநாயகி, பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், செல்லாண்டியம்மன் கோயில்கள் உள்ளன. பிற்காலக் கல்வெட்டு, பழம்பெரும் கோயிலொன்றுக்குக் கோட்டை முனியப்பன் கோயில் என்று கூறுகிறது. இங்கு முன்பு இருந்த மண் கோட்டையில் சில பகுதிகள் உள்ளன. இக்கோயிலில் சிலப்பதிகாரத்தில் வருணிக்கப் பெறும் “வேல் கோட்டம்” போன்ற அமைப்பில் ஒரு கோயில் ஒன்றுள்ளது.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் பெருந்துறை வைப்புத் தலமாகக் குறிக்கப்பெற்றுள்ளது. இவ்வூரின் தெற்கே தொல்பொருள்களைத் தன்னகத்தே கொண்ட பழங்கால ஊரிருக்கை நத்தம் ஒன்றுள்ளது. பெருந்துறையின் வடபால் உள்ள கருமாண்டி செல்லிபாலையத்தில் பெருங்கற்கால சின்னங்களும் [[முதுமக்கள்தாழிமுதுமக்கள் தாழி]] களும் அகப்படுகின்றன.
ஈரோடு உள்ளிட்ட பகுதிகட்டு கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி. 1860 வரை பெருந்துறையே வட்டத்தலை நகராகத்திகழ்ந்ததாக அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு விளங்கியது. வட்டத் தலைநகர் கி.பி. 1860-ல் ஈரோட்டுக்கு மாற்றப்பெற்றது. பெரியார் மாவட்டம் ஏற்பட்டபின் பெருந்துறை வட்டம் அமைந்துள்ளது.
இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மிகப் பெரிய வாரச்சந்தை கூடுகிறது. சந்தைக்கு விற்கப் கால்நடைகள் மிகுதியாக வருகின்றன.
"https://tamilar.wiki/w/பெருந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது