விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 84:
16 ஆம் நூற்றாண்டில் விருதுநகர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகவே பலகாலம் இருந்துள்ளது. இவர்களின் வீழ்ச்சிக்குப் பின் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] பிரதிநிதிகளான [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்களின் நிர்வாகத்தின்]] கீழ் இருந்தது.<ref>{{Cite book |last=V.|first=Vriddhagirisan|page=115|authorlink= |title=Nayaks of Tanjore |year=1995 |origyear=1942 |publisher=Asian Educational Services |location=New Delhi |isbn=81-206-0996-4|ref=harv}}</ref> விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது. 1736 இல் இவர்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் [[சந்தா சாகிப்]] (1740 – 1754), [[ஆற்காடு நவாப்]] மற்றும் [[மருதநாயகம்|முகம்மது யூசுப்கான்]] (1725 – 1764), ஆகியோர் பலமுறை தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.<ref>{{cite book|last=Harman|first=William. P|title=The sacred marriage of a Hindu goddess|year=1992|publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-0810-2|pages=30–36|url=https://books.google.com/books?id=F_siW9T3ev4C&pg=PA36|ref=harv}}</ref> 1801இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின்]] வசம் இப்பிரதேசம் வந்தபின் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியானது. அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தபின், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.<ref>{{Citation |last=Markovits|first=Claude |authorlink= |title=A History of Modern India, 1480–1950|year=2004 |publisher=Wimbledon Publishing Company|page=253 |location=London |isbn=1-84331-152-6|url=https://books.google.com/books?id=uzOmy2y0Zh4C&pg=PA253&lpg=PA253|ref=harv}}</ref>
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அனைத்து சாதிகளும், குறிப்பாக [[மறவர்]]களுக்கும், [[நாடார்]]களுக்கும் இடையிலான பரஸ்பர மோதலாகவே இருந்தது.<ref name="Nadars">{{cite book | title=The Nadars of Tamil Nadu| url=https://books.google.com/?id=KZ9mqiLgkdEC&pg=PA97&dq=virudhupatti#v=onepage&q=virudhupatti&f=false|edition=| first=Robert|last= Hardgrave| page=118| publisher=University of California Press| year=1969|isbn=}}</ref> ஐரோப்பிய மிசனரிகளின் செல்வாக்கின் கீழ் [[இந்து]] மதத்திலிருந்து, [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்திற்கு]] மத மாற்றங்களில், நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.<ref>{{cite news|url=http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=TS18990801.2.67|title=Current Topics|date=1 August 1899|work=Star|location= Christchurch, New Zealand|page=4|accessdate=2009-11-08}}</ref> இந்து மதத்தில் இருந்த சில நாடார்கள், மறவர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் நாடார்கள் சாதி அடிப்படையில், தாழ்ந்தவர்களாக கருதப்பட்டதால் கோயில்களுக்குள் நுழைய மறுக்கப்பட்டனர். இரு சமூகங்களுக்கிடையேயான பரஸ்பர மோதல் 1899 ஆம் ஆண்டில், இப்பகுதியில் உச்சத்தை எட்டியது, இது [[சிவகாசி கலவரம் 1899|சிவகாசி கலவரத்திற்கு]] வழிவகுத்தது. இந்த கலவரத்தில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர், 800 வீடுகள் மற்றும் நகரத்தின் மையத்தில் உள்ள பெரிய தேர் (பண்டிகைகளின் போது கோயிலால் பயன்படுத்தப்பட்டது) கலவரத்தின் போது எரிக்கப்பட்டன. பின்னர் 1899 சூலை நடுப்பகுதியில் இராணுவ தலையீட்டிற்கு பின்னர், கலகங்கள் முடிவுக்கு வந்தன.<ref>{{cite book|title=Ritualizing on the Boundaries: Continuity And Innovation in the Tamil Diaspora|url=https://books.google.com/?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|pages=89–90|last= Clothey|first=Fred W.|publisher=University of South California|year=2006|isbn=9781570036477|access-date=2019-11-25|archivedate=2017-11-08|archiveurl=https://web.archive.org/web/20171108170959/https://books.google.com/books?id=uRxAOJWnyEwC&pg=PA89&dq=sivakasi+riots&hl=en&sa=X&ei=EyzoUP7JIoGQ8wSI3IDQCQ&ved=0CD0Q6AEwAQ#v=onepage&q=sivakasi%20riots&f=false}}</ref><ref>{{cite book|title=Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India|url=https://books.google.com/?id=HzlkWtM9IJYC&pg=PA299&dq=sivakasi+riots#v=onepage&q=sivakasi%20riots&f=false|last= Kent|first=Eliza F.|publisher=Oxford University Press|year=2004|page=299|isbn=0-19-516507-1|location=New York}}</ref>
 
இந்நகரத்தின் பெயர் 1875 இல் ''விருதுப்பட்டி'' என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு ''விருதுநகர்'' என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் [[குலசேகரபட்டினம்]], [[தூத்துக்குடி]], [[வைப்பார் ஊராட்சி|வைப்பார்]] மற்றும் [[தேவிபட்டினம்]] துறைமுகங்கள் வழியாக விருதுநகரில் இருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
"https://tamilar.wiki/w/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது