வேலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய வேலூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = வேலூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
வரிசை 279:
[[வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்|சலகண்டேச்சுரர் கோயில்]], இலட்சுமி தங்க கோவில், வாலாசா தன்வந்திரி கோயில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் ஆகிய கோயில்கள் வேலூரைச் சுற்றியுள்ளன. ஸ்ரீ லட்சுமி கோவில் தற்பொழுது மிகவும் புகழ்பெற்றுப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைக்கோடியில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் ஆன்மீகப் பூங்காவாக திகழ்கிறது. சக்தி அம்மா என்பவரின் தலைமையில் உள்ள நாராயணி பீடத்தில் இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கட்டிடக்கலையில் சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான தங்கக் கைவினைஞர்களால் நுண்ணிய கை வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இங்குதான் 300 கோடி ரூபாய் செலவில் சுமார் 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி கோவிலின் வெளிப்புறம் தங்கத்தகடுகள் மற்றும் தங்கத்தட்டுகளால் வேயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகருக்கு அருகிலுள்ள இரத்தினகிரியில் பாலமுருகனடிமை சாமிகளால் எழுப்பப்பட்டுள்ள முருகன் கோவில் இங்குள்ள மற்றொரு முக்கியமான இந்து மதமதக் கோவில் ஆகும். வேலூர் கோட்டையின் உள்ளே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செயிண்ட் ஜான் தேவாலயம் நகரில் அமைந்துள்ள தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் மிகப்பெரிய அரபிக்கல்லூரியை உள்ளடக்கிய பெரிய மசூதி நகரின் மையப்பகுதியில் உள்ளது.
 
== போக்குவரத்து = பேருந்து சேவைகள் ==
* சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன.
* [[பெங்களூர்]] – [[சென்னை]] சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 47எ (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 47]] வேலூர் வழியாகச் செல்கிறது. மேலும் [[மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை எண் 4]] [[ராணிப்பேட்டை]] – [[சென்னை]], [[மாநில நெடுஞ்சாலை 132 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 132 ( வேலூர் - ஆரணி)]] மற்றும் [[கடலூர்]] – [[திருவண்ணாமலை]]- [[சித்தூர்]] சாலைகளை இணைத்துச் செல்கிறது.
"https://tamilar.wiki/w/வேலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது