அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Kanags சிNo edit summary |
||
வரிசை 1:
{{Other uses|அ (பக்கவழி நெறிப்படுத்தல்)}}
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''அ''' (
[[படிமம்:
== "அ"- ஒலிக்கும் கால அளவு ==
தமிழ்
தமிழில் உள்ள [[சுட்டெழுத்து]]கள் மூன்றில் இதுவும் ஒன்று. இது [[சேய்மைச் சுட்டு|சேய்மைச் சுட்டைக்]] குறிக்கப் பயன்படுகின்றது<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42">இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் '''அ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''அ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. அதாவது சொல்லில் உள்ள 'அ' எழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது) '''அ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறத்தே நிற்கும்.<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42" /> அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
வரிசை 68:
|}
=== சொல்லின் முதலில் ===
தனி '''அ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''அ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள ற, ன ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், க, ஞ, ச, ங, த, ந, ப, ம, வ, ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது<ref>இளவரசு, சோம., 2009. பக். 55</ref>. இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, ஞ, ச, ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.
=== சொல்லின் இறுதியில் ===
அகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. ஆனால் எல்லா மெய்களோடும் சேர்ந்து அகரம் சொல்லுக்கு இறுதியில் வரும். எடுத்துக்காட்டாக: பல, சில என்பன. [[உயிரளபெடை|உயிரளபெடைகளில்]] சொல்லுக்கு இறுதியில் '''அ''' இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி அகரமாக நிற்பதில்லை.
=== சொல்லின் இடையில் ===
அகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 57</ref>.
| |||