ஆப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3840699 by Selvasivagurunathan m (talk) உடையது
 
"{{Taxobox | name = குமளி | image = Red Apple.jpg | image_width = 200px | image_length = 190px | image_caption = சீமையிலந்தம்பழம் | regnum = நிலைத்திணை | divisio = பூக்கும் நிலைத்திணை | classis = இருவித்திலைத் தாவரம்|இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 77:
ஆப்பிளின் சுவையும், மணமும் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் [[வாஷிங்டன்]] மாநிலம் "ரெட் டெலிசியஸ்" என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்துப் புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விடக் குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.
 
== ஆப்பிள் வளர்ப்பு - கலப்பின விருத்தி ==
=== கலப்பின விருத்தி ===
பெரும்பாலான பழ மரங்களைப் போல, ஆப்பிள் மரங்களும் [[ஒட்டுமுறை|ஒட்டுப் போடுவதன்]] மூலம் [[இனவிருத்தி]] செய்யப்படுகின்றன. ஆப்பிள் கன்றுகள், தம் தாய் மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். பல புதிய ஆப்பிள் வகைகள் தானாக ஏற்படும் மாற்றங்களாலோ, செயற்கையான கலப்பு மூலமோ கன்று வடிவிலேயே தோன்றுகின்றன. ஓர் ஆப்பிள் இரகத்தின் பெயரில் ''சீட்லிங்'' (''seedling''), ''பிப்பின்'' (''pippin''), ''கெர்னெல்'' (''kernel'') போன்ற சொற்கள் இருப்பின், அது கன்று மூலம் உருவானது என அறியலாம். சில இரகங்கள் முளை மொட்டு மூலமும் உருவாகின்றன. இயற்கையாக ஏற்படும் மரபணு மாற்றம் மூலம் சில கிளை மொட்டுக்கள் விரும்பத்தகுந்த குணங்களைக் கொண்டிருக்கும். சில நேரங்களில், இவை தாய் மரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
 
சில [[கலப்பினவியலாளர்]]கள் ஆப்பிள்களைக் கடின ஆப்பிள் வகைகளுடன் கலப்பு்ச் செய்து சற்றே கடினமான ஆப்பிள்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் எக்செல்சியர் ஆராய்ச்சி மையத்தில், பல கடின வகை ஆப்பிள் இரகங்கள் உருவாக்கப்பட்டு மின்னசோட்டா, விஸ்கான்சின் மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஹரால்சன், வெல்த்தி, ஹனி கோல்ட், ஹனிகிரிஸ்ப் ஆகியவை இங்கு உருவாக்கப்பட்டவை. ஹனிகிரிஸ்ப், மின்னசோட்டா மக்களால் பெரிதும் விரும்பப் பட்டதால் ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டு இவ்வகைக் கன்றுகளைப் பயிரிட்டது இன்று வரை கேட்டறியாததாகும்.
 
=== தோட்டம் அமைத்தல் ===
ஆப்பிள் தோட்டங்கள் இரண்டு அல்லது மூன்று வருடக்கன்றுகளை நடுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இக்கன்றுகள் இவற்றுக்கான நாற்றங்கால்களில் ஒட்டு மூலமோ, கிளைமொட்டு மூலமோ உருவாக்கப்படுகின்றன. முதலில் [[விதை]] மூலமோ அல்லது [[திசு]] வளர்ப்பு மூலமோ, ஓர் ஆப்பிள் கன்று உருவாக்கப்பட்டு ஒரு வருடம் வளர்க்கப்படுகிறது. பின்னர், இதன் மேற்பாகம் வெட்டப்பட்டு, வேறொரு கன்றின் மேற்பாகம் ஒட்டப்படுகிறது. சில நாட்களில் இரு பாகங்களும் இணைந்து மரக்கன்றாகின்றன.
 
வரி 90 ⟶ 89:
மரக்கன்று நடப்பட்டு 3–5 (மத்திய குள்ள இரகங்கள்) அல்லது 4–10 (சாதாரண இரகங்கள்) ஆண்டுகள் கழித்து, அதிக அளவிலான பழங்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் சரியான முறையில் கிளைகளையும், கிளைமொட்டுக்களையும் கழித்து விடுதல் மிக அவசியமாகும். அப்போது தான், பழங்களைத் தாங்கக்கூடிய உறுதியான கிளைகள் உருவாகும்.
 
=== வளர்க்கும் பகுதிகள் ===
குளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது. வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாப்பும், வசந்த காலத்தின் போது [[உறைபனி]] இல்லாத இடமாகவும் இருத்தலும் அவசியம். மேலும் நல்ல [[வடிகால்]] வசதி தேவைப்படுவதால், நிலத்தை நன்கு [[உழவு|உழுது]] [[வேர்]]கள் நீர் நிறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
=== மகரந்தச் சேர்க்கை ===
[[படிமம்:appletree bloom l.jpg|left|thumb|280px|ஆப்பிள் மரப்பூக்கள்]]
 
வரி 106 ⟶ 105:
பெரிய நீர்நிலைகளின் அருகே தோட்டம் அமைப்பதன் மூலம் வசந்தகால வெப்பம் சிறிது குறைக்கப்படுவதால், பூப்பது சற்றுத் தள்ளிப்போடப்படுகிறது. இது வசந்தகால உறைபனியிலிருந்து பூக்களைக் காப்பாற்ற உதவுகின்றது. அமெரிக்காவில், மிச்சிகன் ஏரியின் கிழக்குக்கரை, ஓண்டோரியோ ஏரியின் தெற்குக்கரை மற்றும் பல சிறிய ஏரிகளைச் சுற்றிலும் அதிக அளவில் ஆப்பிள் வளர்க்கப்பட இதுவே காரணமாகும். வீட்டில் மரம் வளர்ப்போர், வசந்தகால வெயில் படாத இடங்களில் தோட்டம் அமைப்பதன் மூலம், பூப்பதைத் தள்ளிப்போடலாம். பூமியின் வடகோளத்தில் வடக்குப் பார்த்த சரிவுகளிலும், தென்கோளத்தில் தெற்குப்பார்த்த சரிவுகளிலும் ஆப்பிள் நடுவது பூப்பதை தள்ளிப்போட உதவுவதால் உறைபனியிலிருந்து காக்க உதவும்.
 
=== வெட்டி விடுதல் ===
ஆப்பிள் மரங்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன. ஒரு விளைச்சலின் போது சரியான அளவு கிளைகளையோ பழங்களையோ கழித்துவிடாவிட்டால், அடுத்த விளைபருவத்தில் பூப்பது குறைந்து விடும். சரியான அளவில் கழித்து விடுதல், ஒவ்வொரு பருவமும், சீரான விளைச்சல் பெற உதவும்.
 
[[படிமம்:Apple orchard.jpg|right|thumb|ஆப்பிள் பழத்தோட்டம்]]
 
=== அழிவுப்பூச்சிகளும் நோய்களும் ===
ஆப்பிள் மரங்கள் பலவிதமான [[பூஞ்சை]] அல்லது [[கோலுரு நுண்ணுயிர்]]களால் (''bacteria'') விளையும் நோய்களாலும், அழிக்கும் பூச்சிகளாலும் பாதிக்கப்படுகின்றன. எல்லாப் பழத்தோட்டங்களிலும், பூச்சி மருந்துகள் மூலம் இவை கட்டுப்படுத்தப் படுகின்றன. ஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு, தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்படி, பூச்சிமருந்துகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு, இயற்கையான எதிரிகள் மூலம், அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 
வரி 120 ⟶ 119:
ஆப்பிள் பழங்களை, இயற்கை விவசாய முறையில் விளைவிப்பது மிகக் கடினம். இருப்பினும் சில தோட்டங்களில் நோய்-எதிர்ப்பு ஆற்றல் கொண்ட இரகங்களைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளனர். இயற்கை விவசாய முறையில், அண்மைய எடுத்துக்காட்டு, பீங்கான் போன்ற கயோலின் களியை (''kaolin clay'') மெல்லிதாய்ப் படரும்படி ஆப்பிள் பழங்களின் மேல் தெளிப்பது. இது, பூச்சித்தாக்குதல்களிலிருந்தும், வெயிலால் உண்டாகும் அழுகலிலிருந்தும் பழங்களைப் பாதுகாக்கிறது.
 
=== அறுவடை ===
முற்றிய மரங்களில் ஆண்டுக்குச் சுமார் 100–200 [[கிலோகிராம்]] ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறையக் காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50–100 கிலோகிராம் காய்க்கும்.
 
"https://tamilar.wiki/w/ஆப்பிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது