|name =#வழிமாற்று [[அருணா ராய் ]]▼
{{Infobox person
| image = Aruna Roy (2019).jpg
|caption =
|birth_date = {{Birth date and age|1946|05|26}}
|birth_place = [[சென்னை]]
|death_date = <!-- {{Death date and age|YYYY|MM|DD|YYYY|MM|DD}} -->
|death_place =
|other_names =
|occupation = சமூக செயற்பாட்டாளர்
|nationality =
}}
'''அரூனா ரோய்''' (Aruna Roy, பிறப்பு 26 மே 1946) ஒர் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர். இவர் ''தொழிலாளர்கள் உழவர்கள் ஒற்றுமைப் பலம்'' (Mazdoor Kisan Shakti Sangathana) என்ற அமைப்பின் அமைப்பாளர். இவர் [[தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005|தகவல் அறியும் உரிமைக்கான]] இயக்கத்துக்காகவும் அறியப்படுகிறார்.<ref>''Blacked out: government secrecy in the information age'', by Alasdair Scott Roberts. Cambridge University Press, 2006.</ref> தேசியப் பரிந்துரை அவையின் உறுப்பினராகவும் விளங்கினார்.<ref name="hi">{{cite news|url=http://www.hindu.com/2005/06/04/stories/2005060404461200.htm|title=NAC reconstituted|date=Jun 04, 2005|work=The Hindu|access-date=செப்டம்பர் 8, 2011|archivedate=மார்ச் 1, 2006|archiveurl=https://web.archive.org/web/20060301014639/http://www.hindu.com/2005/06/04/stories/2005060404461200.htm|url-status=dead}}</ref>
2000ஆம் ஆண்டில் சமூகத் தலைமைத் திறனுக்காக [[மக்சேசே பரிசு|ரமன் மக்சேசே விருது]] பெற்றார்.<ref>{{Cite web |url=http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationRoyAru.htm |title=Ramon Magsaysay Award Citation |access-date=2011-09-08 |archive-date=2012-05-07 |archive-url=https://web.archive.org/web/20120507004705/http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationRoyAru.htm |url-status=dead }}</ref> 2010ஆம் ஆண்டு பொதுத்துறை நிர்வாகம்,கல்வி மற்றும் மேலாண்மையில் சீர்மைக்கான லால் பகதூர் சாத்திரி தேசிய விருதினைப் பெற்றார்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/article808021.ece Thehindu.com]</ref>
2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் [[அன்னா அசாரே]] நிகழ்த்திய [[ஜன் லோக்பால் மசோதா]]விற்கான போராட்டத்தின்போது அரசு நிலைக்கும் அன்னா குழுவினரின் நெகிழ்வற்ற நிலைக்கும் இடைப்பட்ட உரையாடி தீர்வு காணக்கூடிய நிலையை பரிந்துரைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்[<ref>[http://www.dnaindia.com/india/report_third-draft-of-lokpal-bill-by-aruna-roy-seeks-middle-path_1577967 Third draft of Lokpal bill by Aruna Roy seeks middle path] DNA ஆகத்து 21,2011</ref>.இதனால் தகவல் உரிமை சட்டப் போராட்டத்தில் இணைந்திருந்த [[அரவிந்த் கெஜ்ரிவால்|அரவிந்த் கெஜ்ரிவாலுடன்]] கருத்து வேற்றுமை கொண்டார்<ref>[http://www.firstpost.com/politics/kejriwal-blasts-mentor-aruna-roy-for-going-back-on-commitment-73938.html Kejriwal blasts mentor Aruna Roy for going back on commitment]</ref> .
== பிறப்பும் கல்வியும் ==
அருணா மே 26, 1946ஆம் ஆண்டு [[சென்னை]]யில் ஹேமா மற்றும் எலுபை துரைசாமி ஜெயராம் தம்பதிகளுக்குப் பிறந்தவர். இவரது பெற்றோர் [[தமிழ்]] [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தினராக இருந்தபோதும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தனர். தந்தை ஜெயராம் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அரசுப் பணி காரணமாக தில்லியில் வாழ்ந்தபோதும் அருணா சென்னையில் கத்தோலிக்க மடாலய பள்ளி ஒன்றில் படித்தார் பின்னர் கலாசேத்திராவில் இரண்டாண்டுகள் [[பரத நாட்டியம்]] மற்றும் [[கர்நாடக இசை]] பயின்றார். அதன் பின்னர் [[புதுச்சேரி]]யில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திலும் [[தில்லி]]யில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் கல்வி பயின்றுள்ளார்.<ref name=MagBio>{{cite web |url=http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyRoyAru.htm |title=Biography of Aruna Roy |last=Kalaw-Tirol |first=Kalaw |year=2000 |access-date=Aug 30, 2011 |work=[[Ramon Magsaysay Award]] |archive-date=செப்டம்பர் 2, 2011 |archive-url=https://web.archive.org/web/20110902152721/http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyRoyAru.htm |url-status=dead }}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:சமூக சேவகர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:ரமோன் மக்சேசே விருது பெற்றோர்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பெண் கல்வியாளர்கள்]]
|