இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 56:
== நற்செய்திகளின்படி வாழ்க்கைச் சுருக்கம் ==
{{Gospel Jesus|expanded=all}}
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு [[நற்செய்தி]] நூல்கள் ஆகும். இவை கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ளன. அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[யூதர்|யூத]] இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்தார்]] என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது.
வரிசை 89:
# இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற [[நற்செய்தி நூல்கள்]] எதற்காக எழுதப்பட்டன என்பதை [[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியாளர்]] தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" <sup>(யோவான் 20:31)</sup>.
[[படிமம்:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|200px|left|<center>போதனை வழங்கும் ஆண்டவராக இயேசுவைக் காட்டும் உருவப்படம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தென்சு.</center>]]
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் <small>(காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38)</small>. மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது <small>(யோவான் 19:25-27)</small>.
வரிசை 101:
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
[[படிமம்:Gerard van Honthorst — Adoration of the Shepherds.jpg|thumbnail|250px|left|<center>இடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர். ஓவியர்: கெரார்டு ஃபான் ஃகோன்ட்கோர்ஸ்ட். ஓலாந்து. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.</center>]]
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" <sup>(லூக்கா 1:28)</sup> என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" <sup>லூக்கா 1:26-31)</sup> என்றுரைத்தார். இந்நிகழ்வு ''கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு'' அல்லது ''மங்கள வார்த்தையுரைப்பு'' (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.
வரிசை 111:
இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது <small>(காண்க: லூக்கா 2:41-52)</small>. இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: [[இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு]])
[[படிமம்:Ary Scheffer - The Temptation of Christ (1854).jpg|thumbnail|250px|right|<center>இயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).</center>]]
வரிசை 125:
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் <small>(காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11)</small>.
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே [[மகனாகிய கடவுள்|கடவுளின் மகன்]] என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
வரிசை 144:
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை ''[[மெசியா]], [[மானிட மகன்]], [[ஆண்டவர்]], [[இறைவாக்கினர்]], [[திரித்துவம்#இறைமகன்|இறைமகன்]]'' என்னும் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பல பெயர்களால்]] அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது ''[[மானிட மகன்]]'' என்னும் பெயரையே கையாளுகின்றார்.
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி [[இறையாட்சி]] அல்லது [[விண்ணரசு]] என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு ''இறையாட்சி'' என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது [[இயேசுவின் உவமைகள்|உவமைகள்]] வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது <small>(காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14)</small>.
வரிசை 158:
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் [[திருத்தூதர்]]களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: ''விதைப்பவர் உவமை'' - <small>மத்தேயு 13:1-9</small>; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - <small>மத்தேயு 13:18-24</small>) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட [[இசுரேல்]]) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு [[யோர்தான்]]) என்பனவாகும்.
{{Main|மலைப்பொழிவு}}
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|left|thumb|250px|இயேசு ''மலைப்பொழிவு'' ஆற்றுகிறார்.]]
வரிசை 182:
<br />12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
{{Main|இயேசுவின் உவமைகள்}}
இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது [[இயேசுவின் உவமைகள்|உவமைகள்]] வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:
வரிசை 195:
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
* "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" <sup>(மத்தேயு 11:28)</sup>.
வரிசை 206:
* "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" <sup>(லூக்கா 23:34)</sup>.
இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் ''பரிசேயர்'', ''சதுசேயர்'', ''மறைநூல் அறிஞர்'', ''தீவிரவாதிகள்'' என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.
வரிசை 216:
[[படிமம்:First century Iudaea province.gif|thumbnail|250px|left|<center>இயேசுவின் நாள்களில் யூதேயா மற்றும் கலிலேயா</center>]]
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" <sup>(மத்தேயு 11:19)</sup> என்று இழித்துரைத்தார்கள்.
வரிசை 222:
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" <sup>(மத்தேயு 9:11)</sup> என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்<sup> (மத்தேயு 9:12-13)</sup>.
{{Main|இயேசுவின் சாவு}}
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
வரிசை 275:
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது <small>(காண்க: லூக்கா 23:50-53)</small>. அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் <small>(காண்க: மாற்கு 15:42-46)</small>. அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது <small>(காண்க: மத்தேயு 27:60)</small>. இயேசுவை அடக்கம் செய்ததில் [[நிக்கதேம்]] என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்"<sup>(யோவான் 19:39)</sup>.
வரிசை 281:
இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் <small>(காண்க: யோவான் 19:42)</small>. கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் <small>(காண்க: மத்தேயு 27:60)</small>. இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்}}
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசு உயிர்பெற்றெழுதல்'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]
வரிசை 309:
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு [[இயேசுவின் விண்ணேற்றம்]] நிகழ்ந்தது.
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு உயிர்பெற்றெழுந்ததும்]] அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
வரிசை 321:
== வரலாற்றுப் பார்வை ==
'''1) [[ஜொசிஃபஸ்|பிளாவியுசு யோசேஃபசு]] (Flavius Josephus)''': இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய '''யூத மரபு வரலாறு (Jewish Antiquities)''' என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் [[திருமுழுக்கு யோவான்|திருமுழுக்கு வழங்கிய யோவான்]] பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:
வரிசை 364:
தன்னைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சீடர்கள் தவிர்த்து, பொதுவாக அக்கால யூதர்களால் இயேசு மீட்பர் (மெசியா) அல்லர் என நிராகரிக்கப்பட்டார். அதுவே இன்றும் பெரும் அளவிலான யூதர்களால் பின்பற்றப்படுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள், [[கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்]], சீர்திருத்தவாதிகள் மற்றும் பிறரால் பல நூற்றாண்டுகளாக இயேசுவைப்பற்றி பரவலாய் எழுதப்பட்டுள்ளது. கிறித்தவப் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இயேசு பற்றிய தங்களின் விவரங்களை வரையறுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மனாக்கியர், [[ஞானக் கொள்கை]]யினர், இசுலாமியர், பகாய் மற்றும் ஏனையோர் தங்கள் சமயத்தில் இயேசுவுக்கு முக்கிய இடத்தினை வழங்கியுள்ளனர்.<ref>{{cite encyclopedia|editor-last=Bockmuehl |editor-first= Markus N. A. |title=The quest for the real Jesus |first=Francis |last= Watson|year=2001|encyclopedia= Cambridge companion to Jesus|publisher= Cambridge University Press |url=http://books.google.com/books?id=vSehrtQpcYcC&pg=PA156#v=onepage&q&f=false |isbn=978-0-521-79678-1|pages=156–157}}</ref><ref>{{cite book|title=The historical Christ and the Jesus of faith|url=https://archive.org/details/historicalchrist0000evan|first= C. Stephen|last= Evans |year=1996|publisher= Oxford University Press| isbn= 978-0-19-152042-6 |page= v}}</ref><ref>{{cite book|title=The Blackwell Companion to Jesus|last= Delbert|first= Burkett|year= 2010| isbn= 978-1-4443-5175-0 |page= 1 |publisher=John Wiley & Sons}}</ref>
யூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது திருத்துவத்தின் பகுதி என்பதை மறுக்கிறது.<ref>{{cite web|last=Kessler|first=Ed|title=Jesus the Jew|url=http://www.bbc.co.uk/thepassion/articles/jesus_the_jew.shtml |publisher=BBC |accessdate=June 18, 2013}}</ref> இது இயேசு மெசியா அல்ல என்னும் கருத்தைக் கொண்டு, அவர் மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது.<ref>{{cite book |first=Asher |last=Norman |title= Twenty-six reasons why Jews don't believe in Jesus |url=http://books.google.com/books?id=tx5qrKz6dRMC&pg=PA59#v=onepage&q&f=false |publisher= Feldheim Publishers |year=2007 |isbn=978-0-9771937-0-7 |pages=59–70}}</ref> யூத பாரம்பரியத்தின்படி, மலாக்கியாவிற்குப் பின் எந்த இறைவாக்கினரும் இல்லை.<ref>{{cite web |last= Simmons |first= Shraga |url= http://www.aish.com/jewishissues/jewishsociety/Why_Jews_Dont_Believe_In_Jesus.asp |title= Why Jews Do not Believe in Jesus |date= March 6, 2004 |publisher= Aish.com |access-date= ஏப்ரல் 11, 2014 |archive-date= மார்ச் 16, 2006 |archive-url= https://web.archive.org/web/20060316040138/http://www.aish.com/jewishissues/jewishsociety/Why_Jews_Dont_Believe_In_Jesus.asp |url-status= dead }}</ref> மலாக்கியா கி.மு. 5ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தார்.<ref>{{cite encyclopedia | title=MALACHI, BOOK OF | encyclopedia=Jewish Encyclopedia | accessdate=July 3, 2013 |url=http://www.jewishencyclopedia.com/articles/10321-malachi-book-of}}</ref> [[மெசியா நம்பிக்கை யூதம்]] என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இயேசுவை மெசியாவாகக் கருதினாலும், இப்பிரிவு யூதப் பிரிவின் அங்கம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite news|last=Haberman|first=Clyde|title=Jerusalem Journal; Jews Who Call Jesus Messiah: Get Out, Says Israel|url=http://www.nytimes.com/1993/02/11/world/jerusalem-journal-jews-who-call-jesus-messiah-get-out-says-israel.html|newspaper=New York Times|date=February 11, 1993}}</ref>
இசுலாமில், இஞ்சில் வேதத்தின்படி இசுரேலிய மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக இயேசு (عيسى, ஈசா ) கருதப்படுகிறார்.<ref>{{cite book|title=The Oxford Dictionary of Islam|year=2003|first=John L. |last=Esposito |page= 158|publisher=Oxford University Press| url=http://books.google.com/books?id=E324pQEEQQcC&pg=PA159#v=onepage&q&f=false |isbn=978-0-19-975726-8}}</ref> முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர்.<ref>{{cite encyclopedia|editor-last=Bockmuehl |editor-first= Markus N. A. |title=Quests for the historical Jesus |first=James C. |last=Paget |year=2001|encyclopedia= Cambridge companion to Jesus|publisher= Cambridge University Press |url=http://books.google.com/books?id=vSehrtQpcYcC&pg=PA183#v=onepage&q&f=false |isbn=978-0-521-79678-1|page=183}}</ref> இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது.<ref>{{cite AV media | title=The Muslim Jesus | publisher=ITV Productions | date=August 19, 2007 | people=Ashraf, Irshad (Director) | medium=Television production}}</ref> திருக்குரான் முகம்மதுவைவிட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது.<ref>{{cite web |url=http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e1196|title= Jesus, Son of Mary|publisher= Oxford Islamic Studies Online |accessdate=July 3, 2013}}</ref><ref>{{cite book|last=Aboul-Enein|first=Youssef H.|title=Militant Islamist Ideology: Understanding the Global Threat|year=2010|publisher=Naval Institute Press|isbn=978-1-61251-015-6|page=20|url=http://books.google.com/books?id=tX3suVDTJz0C&pg=PA20#v=onepage&q&f=false}}</ref> மேலும், இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ அல்லர் எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது.<ref>{{cite book|last=George|first=Timothy|title=Is the Father of Jesus the God of Muhammad?: Understanding the Differences Between Christianity and Islam|year=2002|publisher=Zondervan|isbn=978-0-310-24748-7|pages=150–151|url=http://books.google.com/books?id=A5uVfN5xT3YC&pg=PA150#v=onepage&q&f=false}}</ref> திருக்குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவிக்கவில்லை<ref name=Morgan>{{cite book|last=Morgan|first=Diane|title=Essential Islam: A Comprehensive Guide to Belief and Practice|year=2010|publisher=ABC-CLIO|isbn=978-0-313-36025-1|pages=45–46|url=https://books.google.com/books?id=U94S6N2zECAC&pg=PA45#v=onepage&q&f=false}}</ref> எனவும் இறுதி தீர்ப்பின்போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்ப்பு கூறுகின்றது (குரான் 5:116).<ref>{{cite book|title=Understanding Islam: Basic Principles|year=2000|publisher=Garnet & Ithaca Press|isbn=978-1-85964-134-7|pages=71–73|url=http://books.google.com/books?id=dxFh1vETHYgC&pg=PA71#v=onepage&q&f=false}}</ref> ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.<ref>{{cite book|last=Shedinger|first=Robert F.|title=Was Jesus a Muslim?: Questioning Categories in the Study of Religion|year=2009|publisher=Fortress Press|isbn=978-1-4514-1727-2|page=ix|url=http://books.google.com/?id=bSI9Fe9TCz8C&printsec=frontcover#v=onepage&q&f=false}}</ref>
வரிசை 382:
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
{{refbegin|30em}}
* {{cite book|last1=Theissen|first1=Gerd|authorlink1=Gerd Theissen|last2=Merz|first2=Annette|authorlink2=Annette Merz|year=1998|title=The Historical Jesus : a Comprehensive Guide |isbn=978-1-4514-0863-8|publisher=Fortress Press|ref=harv |url=https://books.google.com/?id=3ZU97DQMH6UC&printsec=frontcover#v=onepage&q&f=false}}
| |||