இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sumathy1959
No edit summary
 
வரிசை 21:
 
== இராமாயண இதிகாசம் ==
=== ராமர் அவதாரம் ===
 
[[தசரதன்]] என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு [[கோசலை]], [[கைகேயி]], [[சுமித்திரை]] என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி [[கோசலை]] ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் [[இராமன்|இராமராகப்]] பிறந்தார். இரண்டாம் மனைவி [[கைகேயி]] வயிற்றில் [[பரதன்]] பிறந்தான். மூன்றாம் மனைவி [[சுமித்திரை]] வயிற்றில் [[இலக்குவன்]], [[சத்துருக்கன்]] என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.{{cn}}
 
=== விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தல் மற்றும் தாடகை வதம் ===
[[விசுவாமித்திரர்]] என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். [[தாடகை]] முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். முனிவர் பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசம் செய்தார்.
 
இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.
 
=== மிதிலை நகர் செல்லுதலும் திருமணமும் ===
 
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை]]க்குச் செல்லும் வழியில் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாக கிடந்த [[அகலிகை]] மீது இராமரின் திருவடி பட்டதால், சாபம் நீங்கி மீண்டும் உண்மை உருவிற்கு வந்தாள்.
வரிசை 36:
[[சனகன்]] என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் [[சீதை]]யைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான். மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
 
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. [[கைகேயி]]யின் சிறப்பு பணிப்பெண் [[மந்தரை|கூனி]] (மந்தரை) ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறிந்த தசரதன் உயிர் துறந்தான்.
 
வரிசை 44:
இராமர் காட்டில் வாழும் காலத்தில் [[குகன்]], [[பாரத்துவாசர்]], [[அகத்தியர்]], [[சபரி (இராமாயணம்)|சபரி]] போன்ற சான்றேர்களின் தொடர்பு கிடைத்தது.
 
=== சூர்ப்பனையின் மூக்கினை அறுத்தல் ===
[[இலங்கை]]யை ஆண்டு வந்த [[இராவணன்]] தங்கை [[சூர்ப்பனகை]] ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி இராமனைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்து எறிகிறான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகள் அனைத்தையும் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என்னை அங்க ஈனப்படுத்தி விட்டான்' என்று கூறி அழுகிறள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறுகிறான்.
 
=== மாயமான் ===
இராவணன், [[மாரீசன்]] என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய [[சடாயு]] தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான். திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.
 
=== இராமருக்கும் சுக்ரீவனுக்குமான சந்திப்பு ===
[[சுக்ரீவன்]] குரங்குகளுக்கு அரசனாகிய [[வாலி]]யின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர். இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
 
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
 
=== விபீஷணன் இராமரிடம் சரணாகதி செய்தல் ===
இராவணனுக்குக் [[கும்பகர்ணன்|கும்பகருணன்]], [[வீடணன்]] என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். [[இராவணன்]] மறுத்து விட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டுவிட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
 
=== போர் ===
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் [[இந்திரஜித்|இந்திரசித்தும்]] மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர். கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர், இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
 
வரிசை 68:
இராமனைப்பற்றி இரண்டு சங்கப்பாடல்கள் சில செய்திகளைத் தருகின்றன.
 
=== அகநானூறு பாடல் ===
'''மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல் கருத்து:'''
பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.<ref>:வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
வரிசை 76:
:ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70</ref>
 
=== புறநானூறு பாடல் ===
'''சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடிய பாடல்<ref>http://www.tamilvu.org/library/l1280/html/l1280g21.htm</ref> கருத்து:'''
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். புலவரின் சுற்றம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதிலும், காதில் அணியவேண்டுவனவற்றை விரலிலும், இடுப்பில் அணியவேண்டுவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டுவனவற்றை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம். இது எப்படி இருந்தது என்றால் இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவண அரக்கன் கொண்டுசென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்.<ref>:இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
"https://tamilar.wiki/w/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது