ஈல்கானரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
"{{Infobox Former Country | native_name = {{lang|fa|ایلخانان}} | conventional_long_name = ஈல்கானரசு | common_name = ஈல்கானரசு | status = {{plainlist| *நாடோடிப் பேரரசு *மங்கோலியப் பேரரசின் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 72:
== வரலாறு ==
குவாரசமியாவின் [[இரண்டாம் அலாவுதீன் முகம்மது|இரண்டாம் முகமது]] மங்கோலியர்களால் அனுப்பப்பட்ட வணிகக் குழுவை கொன்றபோது 1219இல் குவாரசமிய அரசமரபின் மீது [[செங்கிஸ் கான்]] போரை அறிவித்தார். 1219 மற்றும் 1221க்கு இடையில் மங்கோலியர்கள் எளிதாக பேரரசை [[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|வென்றனர்]]. முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள்தொகை மிகுந்த மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். [[செபே]] மற்றும் [[சுபுதை]] தலைமையில் மங்கோலியப் படையானது பாரசீகத்தை சூறையாடியது. அப்பகுதிகளை நாசமாக்கி சென்றது. இந்த படையெடுப்புக்குப் பிறகு [[திரான்சாக்சியானா]] மங்கோலிய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. திரான்சோக்சியானாவின் மேற்கே இருந்த பிரிக்கப்படாத பகுதி செங்கிஸ் கானின் போர்சிசின் குடும்பத்தின் பரம்பரை பகுதியானது.<ref>Jeremiah Curtin ''The Mongols: A history'', p.184</ref>
வரிசை 79:
1236ஆம் ஆண்டு [[குராசான்]] நிர்மாணிக்கப்பட்ட வேண்டும் மற்றும் [[ஹெறாத் நகரம்|ஹெறாத் நகரத்தில்]] மீண்டும் மக்கள் வாழவைக்கப்பட வேண்டுமென ஒகோடி ஆணையிட்டார். மங்கோலிய இராணுவ ஆளுநர்கள் பெரும்பாலும் தற்போதைய அசர்பைஜானின் முகான் சமவெளியில் முகாம் அமைத்தனர். மங்கோலியர்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதை உணர்ந்த [[மோசுல்]] மற்றும் சிசிலிய ஆர்மீனியாவின் ஆட்சியாளர்கள் பெரிய கானிடம் அடிபணிந்தனர். சோர்மகன் திரான்சுகாக்கேசியா பகுதியை மூன்று மாவட்டங்களாக மங்கோலிய இராணுவ முறையை அடிப்படையாகக் கொண்டு பிரித்தார்.<ref>Grigor of Akanc ''The history of the nation of archers'', (tr. R.P.Blake) 303</ref> சார்சியாவில் மக்கள் தற்காலிகமாக 8 [[தியுமன் (அலகு)|தியுமன்களாகப்]] பிரிக்கப்பட்டனர்.<ref>Kalistriat Salia ''History of the Georgian Nation'', p.210</ref> 1244ஆம் ஆண்டு பாரசீகத்தில் இருந்த மாவட்டங்களிலிருந்து வரி வருவாயைப் பெறுவதைக் கூட [[குயுக் கான்]] நிறுத்தினார். மற்ற இடங்களுக்கும் வரிவிலக்கு அளித்தார்.<ref>C. P. Atwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, see:Monqe Khan</ref> ஆளுநர் அர்குன் அண்ணன் கொடுத்த புகாரை அடிப்படையாகக் கொண்டு [[மோங்கே கான்]] ‘’ஓர்டோக்’’ வணிகர்கள்<ref>X. Liu.The Silk Road in World History, Oxford University Press, Oxford, ç2010 p.116</ref><ref>E. Endicott-West. ''Merchant Associations in Yuan China: The "Ortoy,"''Asia Major, Third Series, Vol.2 No.2, Academica Sinica, ç1989</ref> மற்றும் உயர்குடியினர், [[யாம்]] நிலையங்கள் மற்றும் குடிமக்களுக்குத் தொந்தரவு கொடுப்பதை 1251ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் தடைசெய்தார். ஓர்டோக்குகள் என்பவர்கள் மங்கோலிய ஒப்பந்த முஸ்லிம் வணிகர்கள் ஆவர்.<ref>M. Th. Houtsma ''E.J. Brill's first encyclopaedia of Islam, 1913–1936'', Volume 1, p.729</ref> மத்திய கிழக்கில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆணையிட்டார். மங்கோலிய ஆட்சிக்கு உட்பட்ட மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்களது சொத்து அளவிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டார். அர்குனுக்குக் கீழ் பாரசீகமானது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஹெறாத், சம், புசாங், [[கோர் மாகாணம்|கோர்]], கய்சர், பிருசுகுக், கர்சிசுத்தான், பரா, [[சிசுதான்]], காபூல், திரா, மற்றும் ஆப்கானித்தான் ஆகிய பகுதிகளின் மேல் ஆட்சி செய்ய கர்டிட்டுகளுக்கு மோங்கே கான் உரிமை வழங்கினார்.<ref>Ehsan Yar-Shater ''Encyclopædia Iranica'', p.209</ref>
[[படிமம்:HulaguAndDokuzKathun.JPG|thumb|ஈல்கானரசைத் தோற்றுவித்த [[ஹுலாகு கான்|குலாகு]] தன் கிறித்தவ ராணி தோகுஸ் கதுனுடன்|alt=]]
[[படிமம்:IlkhanidHorseArcher.jpg|thumb|13ஆம் நூற்றாண்டின் ஒரு [[மங்கோலியர்|மங்கோலிய]] [[ஏற்ற வில்வித்தை|வில்லாளர்]].|alt=]]
வரிசை 90:
பல நாட்கள் விருந்து மற்றும் வேட்டைக்குப் பிறகு 1265ஆம் ஆண்டு குலாகுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி குலாகு இறந்தார். குலாகுவுக்குப் பிறகு அவரது மகன் அபகா கோடை காலத்தில் ஆட்சிக்கு வந்தார்.{{sfn|Atwood|2004|p=226}}
[[அபகா கான்]] ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கேயின் படையெடுப்பை எதிர் கொண்டார். [[திபிலீசி]]யில் பெர்கே இறந்த நிகழ்வுடன் இப்போர் முடிவுக்கு வந்தது. 1270ஆம் ஆண்டு [[சகதாயி கானரசு|சகதாயி கானரசின்]] கானாகிய கியாசுதீன் பரக் தொடுத்த படையெடுப்பை அபகா முறியடித்தார். இதற்குப் பதிலடியாக அபகாவின் தம்பி தேகுதர் [[புகாரா]] நகரத்தைச் சூறையாடினர். 1277ஆம் ஆண்டு [[மம்லூக்|எகிப்திய அடிமை வம்சத்தினர்]] அனத்தோலியா மீது படையெடுத்தனர். எல்பிசுதான் யுத்தத்தில் மங்கோலியர்களைத் தோற்கடித்தனர். இந்தத் தோல்வியால் கடும் வலியை உணர்ந்த அபகா, உள்ளூர் பிரதிநிதியான முயினதீன் பெர்வானை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். அவருக்குப் பதிலாக மங்கோலிய இளவரசன் கோங்கோர்த்தையை பதவியில் அமர்த்தினார். 1281ஆம் ஆண்டு எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக மோங்கே தெமூரை அபகா அனுப்பினார். ஆனால் அவரும் கோம்சு யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்.{{sfn|Atwood|2004|p=234}}
வரிசை 97:
அர்குனின் ஆட்சியின்போது, அவர் இஸ்லாமிய செல்வாக்கிற்கு எதிராக, எகிப்திய அடிமை வம்சத்தினர் மற்றும் குராசானில் இருந்த முஸ்லிம் மங்கோலிய அமீரான நவ்ருசு ஆகிய இருவருக்கு எதிராகவும் சண்டையிட்டார். தன் படையெடுப்புகளுக்கு பண உதவி செய்ய தன்னுடைய உயரதிகாரிகள் புகா மற்றும் சத்வுத்தவ்லா ஆகிய இருவரையும் செலவீனங்களை மையப்படுத்த அர்குன் அனுமதித்தார். ஆனால் இச்செயலானது மிகுந்த பிரபலமற்றதாக இருந்தது. இதன் காரணமாக அர்குனின் முன்னாள் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பினர். இரண்டு உயரதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 1291ஆம் ஆண்டு அர்குன் கொலை செய்யப்பட்டார்.{{sfn|Atwood|2004|p=234}}
[[படிமம்:DiezAlbumsStudyingTheKoran.jpg|thumb|[[திருக்குர்ஆன்|குர்ஆனைப்]] படித்துக் கொண்டிருக்கும் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலிய]] ஆட்சியாளர் [[கசன் (மன்னன்)|கசன்]].]]
அர்குனின் தம்பி கய்கடுவின் ஆட்சியின் போது ஈல்கானரசானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பெரும்பாலான மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதேநேரத்தில் மங்கோலிய அவையிலிருந்தவர்கள் தொடர்ந்து [[பௌத்தம்|பௌத்த மதத்தையே]] பின்பற்றினர். கய்கடு தன்னுடைய ஆதரவாளர்களிடம் இருந்து ஆதரவை வாங்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அரசின் நிதிநிலைமை பாழாகியது. இவரது உயர் அதிகாரியான சத்துருத்தீன் சஞ்சானி அரசின் நிதி நிலைமையைச் சீராக்க காகிதப் பணத்தை [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபிலிருந்து]] பின்பற்றினார். இச்செயல் மோசமான விளைவுகளையே கொடுத்தது. கய்கடு ஒரு சிறுவனுடன் தகாத உறவில் இருந்ததாக அவர் மீது ஆதாரமற்ற பழி சுமத்தப்பட்டது. இதன் காரணமாக மங்கோலியப் பெரியவர்கள் அவரிடமிருந்து விலகினர். 1295ஆம் ஆண்டு கய்கடு ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது உறவினர் பய்டு ஆட்சிக்கு வந்தார். ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கே பய்டு ஆட்சி புரிந்தார். பய்டுவை கய்கடுவின் மகனான கசன் ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார்.{{sfn|Atwood|2004|p=234}}
வரிசை 111:
மங்கோலியர்கள் மதம் மாறிய நிகழ்வானது ஒரு மேலோட்டமான நிகழ்வாகவே இருந்தது. இஸ்லாம் மங்கோலியர்கள் மத்தியில் நிறுவப்பட்ட நிகழ்வு உடனே நடந்து விடவில்லை. ஒல்ஜைடுவின் வரலாற்றாளர் கசானியின் பதிவுகளின் படி, அனாபிக்கள் மற்றும் [[ஷாஃபிʽஈ மத்ஹபு|சாபிக்களுக்கு]] இடையேயான ஒரு பிரச்சனையின் மீது பொறுமை இழந்த குத்லுக் ஷா, மங்கோலியர்கள் இஸ்லாமைக் கைவிட்டுவிட்டுச் செங்கிஸ் கானின் வழிகளுக்குத் திரும்ப வேண்டும் எனத் தன் கருத்தைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கசானி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஒல்ஜைடு உண்மையிலேயே ஒரு குறுகிய காலத்திற்கு இஸ்லாமிலிருந்து மதம் மாறி இருந்தார். முஸ்லிம்களாக மங்கோலியர்கள் [[சூபித்துவம்|சூபித்துவத்திற்குத்]] தனி ஆதரவு அளித்தனர். சூபித் துறவிகளான சபியதீன் அர்தபிலி போன்றோர் அடிக்கடி மரியாதையுடனும் ஆதரவுடனும் நடத்தப்பட்டனர்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=ubgBCgAAQBAJ&pg=PA73|title=Medieval Persia 1040–1797|author=David Morgan|page=73|isbn=978-1-317-41567-1|date=2015-06-26|author-link=David Morgan (historian)}}</ref>
[[படிமம்:ஈல்கானரசுக்குப் பிறகு ஈரான்.svg|thumb|அபு சயித்தின் இறப்பிற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1345ல் [[மத்திய கிழக்கு]]. [[சலயிர் சுல்தானகம்]], சோபனிடுகள், முசாபரிடுகள், இஞ்சுயிடுகள், சர்பதர்கள், மற்றும் கர்டிடுகள் ஆகியோர் [[ஈரான்|ஈரானில்]] முதன்மை சக்திகளாக ஈல்கானரசின் இடத்தை எடுத்துக் கொண்டனர்.]]
[[ஒல்ஜைடு]]வின் மகன் [[அபு சயித் பகதூர் கான்]] கடைசி ஈல்கானாக 1316ஆம் ஆண்டு அரியணையேறினார். 1318ஆம் ஆண்டு சகதாயிகள் மற்றும் குராசானிலிருந்த கரவுனாக்கள் ஆகியோர் கலகத்திலும், மற்றும் தங்க நாடோடிக் கூட்டமானது படையெடுப்பிலும் ஈடுபட்டு இவரை எதிர்த்தன. அனத்தோலியாவில் இருந்த இரேன்சின் என்ற அமீரும் கலகத்தில் ஈடுபட்டார். 13 சூலை 1319ஆம் ஆண்டு சஞ்சன் ரூத் யுத்தத்தில் [[தாய்சியுடு]]களின் சுபனால் இரேன்சின் நொறுக்கப்பட்டார். சுபனின் செல்வாக்கின் கீழ் ஈல்கானரசானது சகதாயிகளுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது. சகதாயி கிளர்ச்சி மற்றும் எகிப்திய அடிமை வம்சத்தவர்களை நொறுக்குவதற்குச் சுபன் உதவி செய்தார். 1327ஆம் சுபனுக்குப் பதிலாகப் "பெரிய" அசனை அபு சயித் பதவியில் அமர்த்தினார்.{{sfn|Atwood|2004|p=235}} கானை அரசியல் கொலை செய்ய முயற்சித்ததாக அசன் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1332ஆம் ஆண்டு அசன் அனத்தோலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மங்கோலியரல்லாத அமீர்களான சரபுதீன் மகமுத் ஷா மற்றும் கியாசுதீன் முகமது ஆகியோர் அதற்கு முன் யாரும் பெற்றிராத அளவுக்கு இராணுவ அதிகாரங்களைப் பெற்றனர். இது மங்கோலிய அமீர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. 1330களில் [[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவின்]] தொடக்கமானது ஈல்கானரசைப் பாழ்படுத்தியது. அபு சயித் மற்றும் அவரது மகன்கள் 1335ஆம் ஆண்டு பிளேக்கால் இறந்தனர்.<ref>Continuity and Change in Medieval Persia By Ann K. S. Lambton</ref> [[அரிக் போகே]]யின் வழித்தோன்றலான [[அர்பா கேவுன்]] என்பவரைக் கியாசுதீன் அரியணையில் அமர்த்தினார். தொடர்ச்சியாகக் குறுகிய காலமே பதவியில் இருந்த கான்களின் ஆட்சியானது தொடர்ந்தது. இறுதியாக 1338ஆம் ஆண்டு அசர்பைஜானைச் "சிறிய" அசன் கைப்பற்றும் வரை இது தொடர்ந்தது. 1357ஆம் ஆண்டு தங்க நாடோடிக் கூட்டத்தின் [[ஜானி பெக்]], சுபனிடுகள் வைத்திருந்த தப்ரீசை ஒரு ஆண்டுக்கு வென்றார். இவ்வாறாக ஈல்கானரசின் எஞ்சிய பகுதிகள் ஜானி பெக்கால் முடித்து வைக்கப்பட்டன.{{sfn|Atwood|2004|p=236}}
வரிசை 135:
ஈல்கானரசில் [[இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை]]யின் முதல் பயன்பாடுகள் காணப்பட்டன. பிறகு இதே போன்ற முறை [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசால்]] பயன்படுத்தப்பட்டது. இந்த முறைகள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட கணக்கு முறைகளிலிருந்து சுதந்திரமாக உருவாக்கப்பட்டிருந்தன.<ref>Cigdem Solas, ACCOUNTING SYSTEM PRACTICED IN THE NEAR EAST DURING THE PERIOD 1220–1350, based ON THE BOOK RISALE-I FELEKIYYE, ''The Accounting Historians Journal'', Vol. 21, No. 1 (June 1994), pp. 117-135</ref> 1295 முதல் 1304ஆம் ஆண்டு வரை கசன் கான் ஏற்படுத்திய விவசாய மற்றும் நிதி சீரமைப்புகள் உருவாக்கத்தால் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரத் தேவைகளின் காரணமாக இந்தக் கணக்கு வைப்பு முறையானது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஈல்கான் பட்டமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு ஈரானின் கசுகை நாடோடிகளின் மத்தியில் மீண்டும் தோன்றியது. 1818/19 முதல் ஜான் முகமது கான் இப்பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இப்பட்டமானது தொடர்ந்து வந்த அனைத்து கசுகை தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. கடைசி ஈல்கான் நசீர் கான் ஆவார். மொசதேக்கிற்கு ஆதரவு அளித்ததற்காக 1954ஆம் ஆண்டு இவர் நாடு கடத்தப்பட்டார். 1979ல் [[ஈரானியப் புரட்சி|இஸ்லாமியப் புரட்சியின்]] போது இவர் திரும்பி வந்தபோது தன்னுடைய முந்தைய பதவியை இவரால் திரும்பப் பெற முடியவில்லை. 1984ஆம் ஆண்டு கசுகையின் கடைசி ஈல்கானாக இவர் இறந்தார்.<ref>[http://www.iranicaonline.org/articles/qasqai-tribal-confederacy-i Pierre Oberling, Qashqai tribal confederacy I History, in Encyclopedia Iranica (2003)]</ref><gallery>
படிமம்:Lampas with phoenix silk and gold Iran or Irak 14th century.jpg|ஈல்கானரசு, லம்பாசு துணியில் [[பீனிக்ஸ் (பறவை)|பீனிக்ஸ்]], பட்டு மற்றும் பொன், [[ஈரான்]] அல்லது [[ஈராக்கு]], 14ஆம் நூற்றாண்டு.
வரிசை 147:
== ஈல்கான்கள் ==
* [[குலாகு கான்]] (1256–1265)
வரிசை 161:
ஈல்கானரசுக்குப் பிறகு, அதன் சிதைவின் போது நிறுவப்பட்ட பிராந்திய அரசுகள் தங்களது சொந்த தேர்வர்களை அரச பதவிக்கு உரிமை கோர வைத்தன.
* [[அர்பா கேவுன்]] (1335–1336)
* மூசா (1336–1337) (பகுதாதுவின் அலி பாட்ஷாவின் கைப்பாவை)
வரிசை 175:
* இரண்டாம் கசன் (1356–1357) (நாணயங்கள் மூலம் மட்டும் அறியப்படுகிறார்)
''கிழக்குப் பாரசீகத்திலிருந்த (குராசான்) உரிமை கோரியவர்கள்:''
| |||