இலானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி மான்செஸ்டர் சிட்டி: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
No edit summary
 
வரிசை 10:
| birth_place = ஐராசிமாபொலீஸ்(Iracemápolis), பிரேசில்
| height = {{convert|1.74|m|abbr=on}}
| currentclub = [[சென்னையின் எப் சி|சென்னையின்]]<br> ([[சான்டோஸ் கால்பந்துக் கழகம்|சான்டோஸ்]] <br>அணியிலிருந்து கடன்முறையில்)
| clubnumber = 7
| position = தாக்கும் நடுக்கள வீரர்
வரிசை 67:
 
==கழக தொழில்முறை வாழ்க்கை==
===ஆரம்பகால தொழில்முறை வாழ்க்கை===
சாவோ பாவுலோ மாநிலத்தின் "குவாரனி" எனும் காற்பந்துக் கழகத்தில் தனது இளவயது தொழில்முறை காற்பந்து வாழ்க்கையை இலானோ துவக்கினார். "இன்டர்நேசியோனல்" எனும் அணியில் சிறிது காலம் இருந்த பிறகு, உலகப்புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் "[[பெலே]]"-வின் அணியான [[சான்டோஸ் கால்பந்துக் கழகம்|சான்டோ]]சுக்கு மாற்றலானார். அங்கு ஆடிய காலகட்டத்தில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதோடு, கோல்களடிக்கும் நடுக்கள வீரராக உருவெடுத்தார். 2004-ஆம் ஆண்டில் [[பிரேசிலியரோ]] பட்டம் வென்ற சான்டோஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தார். மூன்றாண்டுகள் சான்டோஸ் அணியில் விளையாடி 34 கோல்கள் அடித்திருந்த நிலையில், [[உக்ரைன்|உக்ரைனி]]ய அணியான "ஷக்தார் டொனெட்ஸ்க்"-குக்கு மாற்றலானார்.
 
===ஷக்தார் டோனெட்ஸ்க்===
தனது முதல் பருவத்தில் அணியில் அதிகம் பங்களிக்காத இலானோ, தனது இரண்டாம் பருவத்தில் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் மிக முக்கிய வீரராக உருமாறினார். மேலும், உக்ரைனிய கால்பந்துக் கூட்டிணைவில் ஆடி [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசில்]] நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் வீரர் எனும் பெருமையும் பெற்றார்.
 
===மான்செஸ்டர் சிட்டி===
₤8 மில்லியன் பரிமாற்றத் தொகைக்கு ஆகத்து 2007-இல் [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]] அணிக்கு மாற்றலானார். 4 ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் இப்பரிமாற்றம் நிகழ்ந்தது. இரண்டு பருவங்கள் மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடிய இலானோ, 64 போட்டிகளில் பங்கெடுத்து 17 கோல்கள் அடித்தார்.
 
===கலாட்டாசாரே===
சூலை 2009-இல் துருக்கி நாட்டு அணியான கலட்டசரேக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் மாற்றலானார். அங்கு 9 எண் சீருடையுடன் ஆடிய இவர், 32 போட்டிகளில் ஆடி 3 கோல்கள் அடித்தார்.
 
===மீண்டும் பிரேசிலில்===
2010-ஆம் ஆண்டில் மீண்டும் பிரேசிலுக்குத் திரும்பிய இலானோ, சான்டோஸ், கிரெமியோ, பிளெமெங்கோ அணிகளுக்காக ஆடினார். 2014-ஆம் ஆண்டில் பிளெமெங்கோ அணியிலிருந்து கிரெமியோ கழகத்துக்குத் திரும்பிய இலானோ, கிரெமியோ கழகத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார்.
 
===சென்னையின் எப் சி===
2014-ஆம் ஆண்டில் மூன்றுமாத ஒப்பந்தத்துடன் [[இந்தியன் பிரீமியர் லீக்]] அணியான [[சென்னையின் எப் சி]]யில் இணைந்தார். தனது முதல் பருவத்தில் எட்டு கோல்களுடன் கூட்டிணைவின் அதிகபட்ச கோல்களடித்த வீரராக விளங்கினார். தனது இரண்டாவது பருவத்தில் [[சென்னையின் எப் சி]], [[இந்தியன் பிரீமியர் லீக்]] கோப்பையை வெல்ல உதவினார்.
 
வரிசை 90:
2007 [[கோபா அமெரிக்கா]], [[2010 உலகக்கோப்பை காற்பந்து|2010 காற்பந்து உலகக்கோப்பை]] மற்றும் 2011 [[கோபா அமெரிக்கா]] போட்டிகளில் ஆடிய பிரேசில் அணியில் இலானோ இடம்பிடித்தார்.
 
===2010 காற்பந்து உலகக்கோப்பை===
2010 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், பிரேசிலின் முதல் இரண்டு போட்டிகளிலும் (வடக்கு கொரியா, ஐவரி கோஸ்ட் அணிகளுக்கெதிராக) கோல்கள் அடித்த இலானோ, இரண்டாவது போட்டியில் காயத்துடன் வெளியேறினார். அதன்பிறகான போட்டிகளில் இலானோ பங்கேற்கவில்லை.
 
===2011 கோபா அமெரிக்கா===
அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2011 கோபா அமெரிக்காவுக்கான பிரேசில் அணியில் இடம்பெற்ற இலானோ, இரண்டு போட்டிகளில் பதில்வீரராக ஆடினார். ஆட்டமுடிவில் சமநிலையில் இருந்த காலிறுதியில் தண்ட-உதையைத் தவறவிட்ட மூன்று வீரர்களுள் ஒருவராகி, பிரேசில் அப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறக் காரணமானார்.
 
"https://tamilar.wiki/w/இலானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது