உலக அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி Chathirathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 14:
உலகில் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் மோதல் ஏற்படவில்லை என்றால் உலக அமைதி ஏற்படும் என்பது ஒரு கொள்கை.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியல் செயலாக்கப்பட்டால் அதன் கட்டாய விளைவாக உலக அமைதி தோன்றும் என்றொரு பார்வை உள்ளது. ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் [[ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்]] "உலகில் குடியரசு ஆட்சிமுறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி" என்று கூறினார்<ref>{{Citation | url = http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2005/10/20051017-1.html | contribution = President Meets with Bulgarian President Georgi Purvanov | title = George W Bush news release | date = 2005-10-17 | publisher = White House archives | place = Washington, DC, USA}}.</ref> மார்க்சிய கருத்தியலாளர் [[லியோன் திரொட்ஸ்கி]] உலகப் புரட்சி நிகழ்ந்தால் அதன் விளைவாகப் பொதுவுடைமை அமைதி ஏற்படும் என்றுரைத்தார்.<ref>{{Citation | url = http://www.marxists.org/archive/trotsky/1914/war/ | first = Leon | last = Trotsky | title = War and the International | year = 1914 | publisher = Marxists}}.</ref>
குடியரசு ஆட்சி நிலவும் நாடுகள் அரிதாகவே ஒன்று மற்றொன்றுக்கு எதிராகப் போர்தொடுக்க முன்வருகின்றன என்பதற்குப் போதிய நடைமுறை ஆதாரம் உள்ளது என்று, குடியாட்சி வழி அமைதிக் கொள்கையினர் வாதாடுகின்றனர்.<ref>{{Citation | url = http://www.mtholyoke.edu/acad/intrel/ray.htm | publisher = M Tholyoke | title = International relations | contribution = Ray | place = USA | accessdate = 2012-03-08 | archive-date = 2008-02-17 | archive-url = https://web.archive.org/web/20080217032515/http://www.mtholyoke.edu/acad/intrel/ray.htm | url-status = dead }}.</ref><ref>{{Citation | url = http://www.nyu.edu/gsas/dept/politics/faculty/smith/dempeace.PDF | format = [[பி.டி.எவ்]] | publisher = New York University | place = USA | last = Smith | title = Politics | contribution = Democracy & peace}}.</ref><ref>{{Citation | url = http://www.sgir.org/conference2004/papers/Mueller%20Wolff%20-%20Dyadic%20Democratic%20Peace%20Strikes%20Back.pdf | format = [[பி.டி.எவ்]] | publisher = SGIR | title = Conference | year = 2004 | first = Müller | last = Woff | contribution = Democratic Peace Strikes Back}}.</ref><ref>{{Citation | url = http://www.foreignaffairs.org/20051101fareviewessay84611/john-m-owen-iv/iraq-and-the-democratic-peace.html | title = Fareview essay | date = 2005-11-01 | first = John M, IV | last = Owen | contribution = Iraq and the democratic peace | accessdate = 2012-03-08 | archive-date = 2005-12-21 | archive-url = https://web.archive.org/web/20051221155722/http://www.foreignaffairs.org/20051101fareviewessay84611/john-m-owen-iv/iraq-and-the-democratic-peace.html | url-status = dead }}.</ref> இக்கொள்கைக்கு விதிவிலக்காக மூன்று "போர்கள்" மட்டுமே உள்ளன. அவைகூட, இரத்தம் சிந்தாத விதத்தில் நடந்தேறின. அப்போர்கள்: 1) ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐசுலாந்து நாட்டிற்கும் இடையே வட அட்லாண்டிக் கடலில் "காட்" மீன் பிடிக்கும் உரிமை பற்றி 1950களிலும் 1970களிலும் எழுந்த பிரச்சினை.<ref>[http://en.wikipedia.org/wiki/Cod_Wars ஐக்கிய இராச்சியம்-ஐசுலாந்து: மீன்பிடித்தல் உரிமைப் பிரச்சினை]</ref> 2) கானடாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே பன்னாட்டுக் கடல்நீரில் மீன் பிடித்தல் பற்றி 1995இல் எழுந்த பிரச்சினை <ref>[http://en.wikipedia.org/wiki/Turbot_War கானடா-எசுப்பானியா: மீன்பிடித்தல் உரிமைப் பிரச்சினை]</ref>. 3) இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்து போரில் ஈடுபட்டது (1940, மே 10).<ref>[http://en.wikipedia.org/wiki/Operation_Fork ஐசுலாந்து போர்]</ref>.
வரிசை 24:
[[தொழிற்புரட்சி|தொழிற்புரட்சிக்குப்]] பிறகு, உலகின் பல நாடுகள் குடியரசு ஆட்சிமுறையைத் தழுவியுள்ளன. குடியரசு ஆட்சிமுறை பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றினால் உலக அமைதி ஏற்படும் என்பது எதிர்பார்ப்பு. ஆயினும், இக்கொள்கைக்கு விதிவிலக்குகள் பல எழக்கூடும்.
ஐன் ராண்ட் (Ayn Rand) என்னும் அறிஞர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கையை" ஆதரிக்கிறார். அக்கொள்கைப்படி, உலகில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்களில் பெரும்பான்மைப் போர்கள் "கட்டுப்பாட்டு பொருளாதார" அமைப்பு நிலவிய சூழ்நிலைகளிலேயே ஏற்பட்டுள்ளன. சுதந்திர பொருளாதார அமைப்பு நிலவிய நாடுகளில் பொதுவாக அமைதி நிலவி வந்துள்ளது. 1815இல் நடந்த நெப்போலியனிய போர்களுக்குப் பிறகு 1914 வரை (முதல் உலகப்போர்) நாடுகள் போரில் ஈடுபடவில்லை. இரு விதிவிலக்குகள் 1870இல் நிகழ்ந்த பிராங்கோ-புருச்சியப் போரும், 1898இல் நிகழ்ந்த எசுப்பானிய-அமெரிக்கப் போரும் ஆகும்.
வரிசை 33:
மேலும், உலக அமைதி என்பது "போரில்லாத நிலைமை" என்பதில் மட்டுமே அடங்கிவிட முடியாது என்பதும் கருதத்தக்கது. வர்க்கங்களுக்கிடையே மோதல் மனப்பான்மை தொடர்ந்து நிலவுவது அமைதியென அழைக்கப்பட முடியாதது. முதலாளித்துவம் உலக அமைதிக்குக் காரணமாக அமைந்தது என்னும் கொள்கை ஏற்புடையதென்றால், அரசுத் தலையீடு குறைவாகும்போது அமைதி நிலவும் என்றோ, ஒழுங்கற்ற நிலை ஏற்படும்போதும் அமைதி பிறக்கும் என்றோ கூட வாதிட முடியும். எனவே, பலர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" நிறைவுதருவதாக இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.
''ரிச்சர்டு கோப்டன்'' (1804-1865) என்னும் பிரித்தானிய அறிஞர், "நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிகோலும்" என்னும் கொள்கையை எடுத்துரைத்தார். [[அரசியல்]] உறவுகள் குறைந்து, பொருளாதார உறவுகள் கட்டுப்பாடற்ற, சுதந்திர முறையில் வளரும்போது உலக அமைதியும் மக்களிடையே புரிதலும் உருவாகும் என்று அவர் கூறினார். அக்கொள்கைப்படி, வாணிகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அரசியல் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். நாட்டு ஆட்சியாளர் தனி மனிதரின் சுதந்திர வணிகச் செயல்பாடுகளைத் தடுக்காமலும், [[சுங்கவரி]] விதித்துக் கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது. எடுத்துக்காட்டாக, ஒரு நாடு [[துப்பாக்கி]] உற்பத்தி செய்கிறது, மற்றொரு நாடு [[வெடிமருந்து]] செய்கிறது என்றால் அந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட முடியாது. ஏனென்றால், துப்பாக்கி இருக்குமிடத்தில் வெடிமருந்து இராது, வெடிமருந்து இருக்கும் இடத்தில் துப்பாக்கி இராது.<ref>{{Citation | url = http://www.facebook.com/group.php?gid=12748324346#!/group.php?gid=12748324346&v=info | title = Facebook | contribution = Group}}.</ref>
வரிசை 40:
கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், [[உற்பத்தி]], ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும். செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அந்நிறுவனங்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும். இவ்வாறு, கட்டுப்பாடற்ற, சுதந்திர வணிகம் உலக அமைதிக்கு வழிவகுக்கும்.
"ஒருவரையொருவர் அழிக்கும் செயல்" என்பது ஒரு இராணுவக் கொள்கை ஆகும். அதன்படி, [[அணு ஆயுதம்|அணு ஆயுதங்களைக்]] கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழிவதை இக்கொள்கை எடுத்துரைக்கிறது.<ref>{{Citation | url = http://www.nuclearfiles.org/menu/key-issues/nuclear-weapons/history/cold-war/strategy/strategy-mutual-assured-destruction.htm | publisher = Nuclear files | title = Strategy | contribution = Mutual Assured Destruction}}.</ref><ref>{{Citation | first = Col. Alan J | last = Parrington | publisher = Air Force | place = USA | url = http://www.airpower.maxwell.af.mil/airchronicles/apj/apj97/win97/parrin.html | contribution = Mutually Assured Destruction Revisited, Strategic Doctrine in Question | title = Airpower Journal | date = Winter 1997 | accessdate = 2012-03-08 | archive-date = 2015-06-20 | archive-url = https://web.archive.org/web/20150620055606/http://www.airpower.maxwell.af.mil/airchronicles/apj/apj97/win97/parrin.html | url-status = dead }}.</ref>
இக்கொள்கைப்படி, அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் அனைவருக்கும் அழிவே என்னும் அடிப்படையானது உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவித பனிப்போர் தொடர்ந்தாலும், போர் நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், "பிற்காலத் தலைமுறைகளைப் போர் என்னும் கேட்டிலிருந்து காக்கும் பொருட்டு" 1945இல் உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய பன்னாட்டு நிறுவனமே [[ஐக்கிய நாடுகள் அவை]] ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ்ந்து உலக மக்களுக்கு மாபெரும் இடர் விளைவித்த அனுபவம் கசப்பான ஒன்றாயிற்று. என்வே, உலக அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை வலியுறுத்தி, பன்னாட்டுச் சட்ட அமைப்புக்கு இணங்கத் தனி நாடுகள் இயங்க வழிவகுக்கவும், பன்னாட்டுப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்க்கவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமாகிய ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது.
வரிசை 54:
என்னும் கூற்று உள்ளது.<ref>[[Preamble to the United Nations Charter]]</ref><ref>[http://www.ohchr.org/EN/UDHR/Documents/UDHR_Translations/tcv.pdf ஐ.நா. மனித உரிமைகள் சாற்றுரை - தமிழில்]</ref>
இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி, வாணிகம் தழைத்து, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழினுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு [[உலகமயமாதல்]] என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உறவு வளர்ச்சிகள் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழி என்னும் கருத்து உள்ளது.
பிளவுபட்ட பகுதிகளாகக் கிடந்த நாடுகள் பல இன்று மைய அரசியல் அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நாடுகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், செருமனி, இந்தியா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தைக்]] காட்டலாம். படிப்படியாக, உலகளாவிய ஒன்றியம் பிறக்கவும் வழி திறந்துள்ளது.
நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை "தலையீடு தவிர்க்கும் கொள்கை" எனப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி, நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது கருத்து.
வரிசை 66:
கடந்த காலத்தில் "தனித்தியங்கும் கொள்கை"யைச் சப்பான் போன்ற நாடுகள் கடைப்பிடித்ததுண்டு. சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Tokugawa_shogunate சப்பானின் தனித்தியங்கும் கொள்கை]</ref>
உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும் <ref>{{Citation | url = http://www.amazon.com/dp/B002AD9UQU | publisher = Amazon | title = 2020worldpeace}}.</ref> அதிகாரம் ஓர் இடத்தில், ஆளில், அமைப்பில் குவிவதற்கு மாறாக, பரவலாக விரியும்; அப்போது வன்முறையும் குறையும் என்பது இக்கருத்துக்கு அடிப்படை. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் இங்குக் கிடையாது. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரமோ, தெய்வீக அதிகாரமோ ஏற்கப்படுவதில்லை. மாறாக, தல அளவில், வலைப்பின்னல் போன்ற உறவுப் பரிமாற்றங்கள்மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் உறவுகள் வலுப்படும். சமய, இன, நாட்டு வேறுபாடுகளை வலியுறுத்தாமல், அனைவரும் பங்கேற்க வாய்ப்பளித்தல் இதன் ஒரு பகுதியாகும்.
வரிசை 73:
இத்தகைய ஒத்துழைப்புத் திட்டங்களாக [[விக்கிப்பீடியா]], "அமைதியின் தேவை" (Need4peace) மற்றும் சமூக வலைத்தளங்களைக் கருதலாம்.
மைக்கல் மூசோ (Michael Mousseau) என்னும் அறிஞர் உலக அமைதி பேணுதல் குறித்து "பொருளாதார நெறிக் கொள்கை" என்றொரு கருத்தியலை முன்வைக்கிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/Michael_Mousseau பொருளாதார நெறிக் கொள்கை]</ref>. பொருளாதார முறைகள் ஒன்றில் "காவலர்-பெறுநர்" (patron-client) வகையதாக இருக்கலாம், அல்லது பொதுச் சந்தை சார்புடையதாக இருக்கலாம். காவலர்-பெறுநர் வகைப் பொருளாதாரம் உட்குழுக்கள் சலுகை பெற்று முன்னேறுவதைக் கருத்தில் கொண்டிருக்கும். அதில் தலைவர் கையில் அதிகாரம் இருக்கும். அவரிடமிருந்து பெறுநர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தங்கள் ஆதரவை அளிப்பார்கள். இவ்வகைப் பொருளாதாரம் நிலவும் சமூகங்களில் சமூக உடன்பாடு (social contract) வலுவோடு இராது.
வரிசை 91:
பொதுவாக, அனைத்து உலக சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும் என்பது சமயங்களின் பொதுவான அணுகுமுறை.
[[பகாய் சமயம்]] 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட மதம் ஆகும். உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பகாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இச்சமயத்தின் முக்கிய கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார்; உலக சமயங்கள் தனித்தனியாக வேறுபட்டு நின்றாலும், அவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றே; மனிதகுலம் பலவாகப் பிளவுண்டு நின்றாலும் அது அடிப்படையில் ஒன்றே.
இவ்வாறு, பகாய் சமயம் உலக அமைதிக்கான அடிப்படைகளைத் தெளிவாகக் கொண்டுள்ளது. உலக அமைதி ஏற்படுவதற்கு உலகளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு பொது அமைப்பு வேண்டும் என்றும் பகாய் கூறுகிறது. உலக அமைதி ஏற்படுவதற்கான வழிகளைப் பகாய் மைய நிறுவனமாகிய "நீதியின் பொது இல்லம்" (Universal House of Justice) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.<ref>{{cite book |last = Smith |first = P. |year = 1999 |title = A Concise Encyclopedia of the Bahá'í Faith |publisher = Oneworld Publications |location = Oxford, UK |isbn = 1-85168-184-1 |pages = 363–364 }}</ref>
மனிதர் தம் உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே உலகில் அமைதி ஏற்பட முடியும் என்பது புத்த சமயக் கருத்து. புத்த சமயத்துக்கு அடிகோலிய [[கவுதம புத்தர்]] "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார்.<ref>{{Cite web |url=http://www.quoteworld.org/quotes/2045 |title=Quote by Siddhārtha Gautama |access-date=2012-03-08 |archive-date=2011-07-23 |archive-url=https://web.archive.org/web/20110723055737/http://www.quoteworld.org/quotes/2045 |url-status=dead }}</ref> மனித உள்ளத்தில் இருக்கின்ற கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளே போர்களும் சண்டைகளும் உருவாகக் காரணமாய் உள்ளன. எதிர்மறை உணர்வுகளைக் களைந்துவிட்டு, அன்பு, இரக்கம் போன்ற ஆக்கமிகு உணர்வுகளை மனிதர் வளர்ப்பதே உலக அமைதிக்கு வழி.
உலக அமைதி பற்றிக் [[கிறித்தவம்]] போதிக்கின்ற கருத்துகள் [[விவிலியம்|விவிலியத்திலும்]] வெவ்வேறு திருச்சபை அமைப்புகளின் போதனைகளிலும் காணக்கிடக்கின்றன. கிறித்தவத்தின் மூன்று முக்கிய பிரிவுகளாக விளங்குகின்ற கத்தோலிக்கம், மரபுவழி சபைகள், புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகிய அனைத்துமே சில பொதுவான கருத்துகளைக் கொண்டுள்ளன. அதாவது, கடவுள் உலக மக்கள்மீது அன்புகொண்டு, அவர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, மீட்பளிக்கும் வண்ணம் தம் ஒரே திருமகனாகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவை]] உலகுக்கு அனுப்பினார். [[இயேசு]] சிலுவையில் அறையுண்டு, உயிர்துறந்து, தம் சிலுவைச் சாவின் வழியாக மனித குலத்தை மீட்டார். எனவே, இவ்வுலகும் இவ்வுலக மக்களும் கடவுளோடு ஆழ்ந்த உறவிலும் ஒன்றிப்பிலும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஒன்றிப்பின் வெளிப்பாடாக, மனிதர்களுக்கிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு, ஒன்றிப்பு, அமைதி நிலவ வேண்டும். மேலும், [[இயேசு]] அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்தினார். குறிப்பாக, பகைவர்களை மன்னித்து, அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள இயேசு போதித்தார் (மத்தேயு 5:43-48). எவ்வாறாயினும், உலக அமைதி நிறைவான விதத்தில் இவ்வுலகில் ஏற்படும் என்று கிறித்தவம் கருதுவதில்லை. மாறாக, விவிலியத்தில் குறிப்பிடப்படுவது போல (காண்க: திருவெளிப்பாடு 21), மனித வரலாற்றின் முடிவில், "புதிய உலகில்" அமைதி நிறைவாக நிலவும்.
வரிசை 108:
குறிப்பாக, [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] "அவனியில் அமைதி" (Peace on Earth) என்னும் தலைப்பில் 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் "நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்" ஒரு சுற்றுமடல் எழுதினார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pacem_in_Terris அவனியில் அமைதி - திருத்தந்தை 23ஆம் யோவான்]</ref>. அம்மடலில், அவர் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்றால் மனித உரிமைகள் எல்லா மட்டத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உரிமைகளுள்ள இடத்தில் கடமைகளும் உண்டு என்பதால், தனிமனிதரும் நாடுகளும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்புடையோராய்ச் செயல்பட வேண்டும். இவ்வாறு, உலக அமைதி என்பது மனித உரிமைகளை மதித்து, ஏற்று, மேம்படுத்துவதில் அடங்கும். அமைதியின் அடித்தளங்களாக இருப்பவை நான்கு: 1) உண்மை; 2) சுதந்திரம்; 3) அன்பு; 4) நீதி.
பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். வேத கால சிந்தனைப்படி, எங்கும் பரவி நிற்கும் பிரமமும் மனிதரின் அகம் உறையும் ஆன்மாவும் ஒன்றே. உயிர்கள் தமக்குள் பிரிந்து நிற்பது போல் தோன்றினாலும், அடிப்படையாக உள்ள ஒன்றிப்பை உணர்வுகடந்த நிலையில் அனுபவிப்பதே விடுதலை ஆகும்.<ref>[http://www.hindudharmaforums.com/showthread.php?t=969&page=3 Dharmic Wisdom Quotes - Page 3 - Hindu Dharma Forums<!-- Bot generated title -->]</ref> பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற சைவமும் வைணவமும் இறைபணியையும் மனிதருக்கு ஆற்ற வேண்டிய சேவையையும் வலியுறுத்தின. அண்மைக் காலத்தில் [[இராமகிருசுண இயக்கம்]] போன்ற அமைப்புகள் பொதுநல சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவ்வாறு, மனிதரிடையே நல்லுறவுகளை உருவாக்கி, உலகில் அமைதி கொணரும் பணி சமயத்தின் ஒரு பெரும் பொறுப்பு என்பது ஏற்கப்படுகிறது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கருத்து வேரூன்றியுள்ளது. குறிப்பாக, மனிதர்கள் சமய வேறுபாடுகளை மறந்து, உலக அமைதிக்காக உழைத்தல் வேண்டும் என்றும், உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அகிம்சையே வழியாக அமைய வேண்டும், போரல்ல என்றும் [[மகாத்மா காந்தி]] வலியுறுத்தினார். அவரது கருத்துகள் இந்து சமய மற்றும் சமண சமயப் பின்னணியிலிருந்து எழுந்தனவென்பது பொதுவான கருத்து. [[இயேசு]] பகைவரையும் அன்புசெய்ய வேண்டும் என்று வழங்கிய போதனையும் தம் வாழ்வில் தாக்கம் கொணர்ந்ததாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.
[[இசுலாம்|இசுலாம் சமயம்]] உலக அமைதியின் தேவையை எடுத்துரைக்கிறது. கடவுள் ஒருவராக உள்ளார். அல்லா என்னும் பெயர் கொண்ட அவர் மனித குலத்தை ஆதாம் ஏவா என்னும் முதல் பெற்றோரிடமிருந்து தோன்றச் செய்தார். இவ்வாறு மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர். தமக்குள் உடன்பிறப்புகளாகத் திகழ்கின்றனர். மனிதர்கள் இந்த உறவினை உணர்ந்து தம் வாழ்க்கை முறையை அமைதியான விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இசுலாம் சமயத்தின் திருநூலாகிய [[திருக்குர்ஆன்]] கூறுகிறது. "சொல்லாலோ செயலாலோ பிறருக்குத் தீங்கு இழைக்காதவனே முசுலிம்" என்பது குர்ஆனின் போதனை.
அண்மைக் காலத்தில் இசுலாம் சமயத்தின் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதியைக் குலைத்தார்கள் என்பதால், இசுலாம் சமயம் தன்னியல்பிலேயே உலக அமைதிக்கு எதிராக உள்ளது என்னும் முடிவுக்கு வருதல் தவறு என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Islamic_world_peace_forum அமைதியை வளர்க்கும் இசுலாம்]</ref><ref>World Peace Order Towards an International State http://www.iecrcna.org/publications/books/World_Peace_Order.pdf</ref>.
[[யூதம்]] எதிர்காலத்தில் "மெசியா" வருவார் என்றும், அவர் சகல யூதர்களையும் இசுரேலிய நிலத்திற்கு கொண்டு வருவார் என்றும், அதனைத் தொடர்ந்து உலகில் நிரந்தர நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவார் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்கள் யூதர்களின் [[ரனாக்|தனாக்கில்]] இருந்தும் யூதப் போதகர்களின் விளக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.<ref>Rambam, [[Mishneh Torah]], Hilkhot Melachim, ch. 11-12</ref> யூதர்களிடம் "உலகைத் திருத்துதல்" என்ற பொருளுடைய ''டிக்குன் ஒலம்'' என்ற கருத்தும் உள்ளது. அதன்படி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தல், சமூக நீதி ஆகியவற்றைச் செய்வதன் ஊடாக உலகை நீதிநெறியில் நடத்தலாமெனக் கருதுகின்றது. இது மெசியாவின் காலத்திற்கு ஆரம்பமாக இருக்குமென நம்பப்படுகின்றது.
உலக அமைதியைப் பேணுவதில் [[சமண மதம்]] சிறப்புப் பங்கு அளிக்கிறது. எல்லா உயிர்களையும் போற்றும் பண்பைச் சமணம் ஊக்குவிக்கின்றது. பிற உயிர்களுக்குத் தீங்கு விளைப்பது பாவம் என்பது சமணக் கொள்கை. எனவே, அகிம்சை இச்சமயத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியின்]] அகிம்சைக் கொள்கைக்கு மூலமாகச் சமணத்தின் தாக்கத்தைக் கருதலாம். மேலும், சமணம் "அனேகவாதம்" என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, எந்தவொரு சிக்கலும் ஒரே தீர்வுக்கு உட்பட்டது என்று கூற முடியாது, மாறாக, பல தீர்வுகள் இருக்கலாம். இதையே "பன்மைவாதம்" என்றும் கூறலாம். இந்த அணுகுமுறை உலக அமைதியைப் பேணுகின்றது. கருத்து வேற்றுமைகள் ஏற்படும்போது, பிறரது பார்வையிலும் உண்மை இருக்கலாம் என்று ஏற்கும் "சகிப்புத் தன்மை" வேண்டும். அது அமைதிக்கு வழியாகும்.<ref>Titze, Kurt, Jainism: A Pictorial Guide to the Religion of Non-Violence, Mohtilal Banarsidass, 1998</ref>
[[சீக்கியம்|சீக்கிய சமயத்தில்]] உலக அமைதி பற்றிய கருத்துகள் குறிப்பாக மனிதரிடையே வேறுபாடுகள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுகின்றன. சீக்கியம் ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிக்கிறது. சமபந்தி நடத்தி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஏழை-செல்வர் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே கடவுளின் மக்கள் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது.<ref>{{Cite web |url=http://www.realsikhism.com/faq/equality.html |title=Sikhism: Frequently Asked Questions About Sikhism<!-- Bot generated title --> |access-date=2012-03-08 |archive-date=2009-04-17 |archive-url=https://web.archive.org/web/20090417213119/http://realsikhism.com/faq/equality.html |url-status=dead }}</ref>
சீக்கியத்தின் அடிப்படைக் கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார். மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புகள் என்பதால் தமக்குள் உடன்பிறப்புகள். நேர்மையான வழியில் செல்வம் ஈட்டுவதே முறை. தான் சேர்ப்பதைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். கடவுள் நினைவில் நிலைத்திருந்து, இயற்கையோடு இசைந்து வாழ்தல் வேண்டும்.
| |||