உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
No edit summary
 
வரிசை 17:
== உயர்த்திகளின் அமைப்பு ==
 
===இழுவை வகை===
 
உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் [[மின்சார மோட்டார்]] ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள [[சக்கரம்]] மெதுவாகச் சுழலும். அப்போது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் [[கனம்]] குறைந்த [[இரும்பு]] [[எடை]] ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது '''எதிர் எடை''' என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும்.
 
===நீரியல் வகை===
 
இவ்வகை உயர்த்திகள் தரைக்கு மேல் அல்லது கீழே உள்ள ஒரு [[உந்துத் தண்டு|உந்துத் தண்டின்]] மேல் அழுத்தம் ஏற்படுத்தி பெட்டியை நகர்த்துகின்றன. நீரியல் வகை உயர்த்திகள் பெரும்பாலும் இழுவை வகை உயர்த்திகளை விட மெதுவாக செயல்படும்.
 
===உயர்த்தி கதவுகள்===
 
உயர்த்தி கதவுகள் உயர்த்தியில் பயணம் செய்வோர் தவறி விழுவதை தடுக்க பயன்படுகின்றன. பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது. சில உயர்த்திகளில் இரு கதவுகளும் ஒன்றன் பின் ஒன்று சரிந்து செல்லும் வகையிலும் அமைக்க பெற்றிருக்கும். ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும்.
வரிசை 34:
[[File:dover elevator button.jpg|thumb|200px|உயர்த்தி கட்டுபாட்டு பலகை]]
 
===உயர்த்தி படிமுறை===
[[உயர்த்தி படிமுறை]] என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
 
வரிசை 42:
உயர்த்தி படிமுறை ஆனது [[இயக்கு தளம்|கணினி இயக்கு தளத்தில்]] [[வன்தட்டு நிலை நினைவகம்|வன்தட்டு நிலை நினைவக]] வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது. அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன.
 
===சேரிட கட்டுப்பாட்டு முறை===
[[வானளாவி]] போன்ற உயர்ந்த கட்டிடங்களில், சேரிட கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தபடுகிறது. இம்முறையில், நாம் எந்த தளத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அதை பதிவு செய்திட வேண்டும். உடனே நாம் எந்த உயர்த்தியில் பயணிக்க வேண்டும் என்பதை கணினி கணக்கிட்டு சொல்லி விடும். அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும். ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது.
 
"https://tamilar.wiki/w/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது