உபைதுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பதவிகள்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
No edit summary
 
வரிசை 53:
சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தஞ்சாவூருக்குத் திரும்பி தம் உயர்க்கல்வியைத் தொடர்ந்தார். [[1937]]இல் தம் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலாயா திரும்பினார். சிரம்பானில் உள்ள இவருடைய உறவினரின் வணிக நிறுவனத்தில் தொடக்கத்தில் பணியாற்றினார். தோள்பைகள், துணிமணிகளை விற்கும் பணியில் ஈடுபட்டார். சிக்கனமான வாழ்க்கை, எளிமையான நடைமுறை; அவை இரண்டுமே அவருடைய சிறப்பு குணநலன்களாக அமைந்தன.
 
===சிரம்பான் வர்த்தமானி===
 
பின்னர், ''சிரம்பான் வர்த்தமானி'' என்ற தமிழ் வார இதழுக்கும், ''சிரம்பான் நியூஸ்'' எனும் ஆங்கில வார தாளிகைக்கும் ஆசிரியராகப் பனியாற்றினார். தமிழகத்தில் பி.ஏ. பட்டப் படிப்பு வரை படித்திருந்த இவருடைய எழுத்தாற்றல், அந்த ஏடுகளின் மூலம் தெரிய வந்தது. முன்னேற்றப் பாதையை நோக்கி நடைபோட இவருடைய திறமையும் விடா முயற்சியும் கைகொடுத்தன.
வரிசை 59:
[[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[மலாய்]], [[உருது]], [[மலையாளம்]], [[தெலுங்கு]] ஆகிய மொழிகளைப் பேசத் தெரிந்த டான் ஸ்ரீ உபைதுல்லா, அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வந்தார். அருமையான மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
 
===நேதாஜியின் ஆசாத் இந்து இயக்கம்===
 
[[சென்னை]]யில் கல்லூரி மாணவராக இருந்த போதே அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] மாநாடு நடத்திய அனுபவங்கள் அவருக்கு உண்டு. [[மலாயா]] சென்ற போதும் இந்திய நாட்டுப்பற்று அவரை விட்டு நீங்கவில்லை. [[மலாயா]], [[இந்தியா]] ஆகிய இருநாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார்.
வரிசை 65:
[[நேதாஜி]]யின் ஆசாத் இந்து இயக்கத்தில் மிகவும் ஆர்வம் காட்டினார். ஆசாத் இந்து இயக்கம் வெளியிட்ட இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் ஆர்வத்தோடு பணியாற்றினார். [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தில்]] பங்கு பெற்றதற்காகச் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
 
===ஆசாத் ஹிந்த் சர்க்கார்===
 
அரசியல், சமூகப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்ட உபைதுல்லா, [[நேதாஜி]] சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிப் பழகியவர். [[1940]]களின் தொடக்கத்தில், மலாயாவில், ஆசாத் ஹிந்த் சர்க்கார் அமைத்த போதும், இந்திய விடுதலை ராணுவப் படை தொடக்கப்பட்ட போதும், நேதாஜியுடன் நெருக்கமாக இருந்தார். அந்தக் காலகட்டங்களில் மலாயா, இந்தியா சுதந்திரத்திற்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வரிசை 77:
அந்தக் கட்சியின் பல மாநாடுகளில், இவர் அவைத் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். கல்வித் திறனும், அரசியல் செல்வாக்கும் அதிகமாக இருந்ததால், [[1971]] முதல் [[1980]] வரை, அவர் நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் செனட்டராகவும், நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும் இருந்து செயற்கரிய செயல்களை செய்துள்ளார்.
 
===மால் ஹிஜ்ரா விருது===
 
கண்ணியத்திற்கும் சிறப்பிற்கும் உரிய [[மால் ஹிஜ்ரா]] எனும் விருது [[1989]]ஆம் ஆண்டில் பேரரசரால் டான் ஸ்ரீ உபைதுல்லாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் மலேசிய இந்திய முஸ்லிம் இவர்தான். அந்த விருதுடன் 30 ஆயிரம் மலேசிய [[ரிங்கிட்]]டும் இவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே இஸ்லாமிய சமயப் பணிகளுக்காக வழங்கிவிட்டார்.<ref>{{cite article |title=200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் Pages.275-276|last=ப.சந்திரகாந்தம்|first=நூலாசிரியர்|accessdate=5-04-2013|publisher=Uma Publications, Kuala Lumpur}}</ref>
வரிசை 83:
மலேசியாவின் முந்தைய பிரதமர்களான [[துங்கு அப்துல் ரகுமான்]], [[துன் அப்துல் ரசாக்]], [[துன் உசேன் ஓன்]], [[மகாதீர் பின் முகமது]] ஆகியோரின் மதிப்பிற்கு உரியவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் அன்றைய தலைவர்களான, அமைச்சர்கள் [[வீ. தி. சம்பந்தன்]], [[வி. மாணிக்கவாசகம்]] ஆகியோருடன் கட்சி, சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். பல உயர் அரசாங்க விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். [[1967]]இல் [[டத்தோ]] விருது வழங்கப்பட்டது. [[1973]]இல் மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான [[டான் ஸ்ரீ]] விருதும் இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
 
===உபைதி அறக்கட்டளை===
 
சாதி சமய வேறுபாடின்றி, ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு மலேசியாவில் உபைதி அறக்கட்டளையை நிறுவிய டான் ஸ்ரீ உபைதுல்லா அதன் மூலம் பல பொதுப் பணிகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தார். டான் ஸ்ரீ உபைதுல்லா வழங்கிய 15 மில்லியன் [[ரிங்கிட்]] (ஒன்றரை கோடி) நன்கொடையோடு [[1991]]இல் [[உபைதி அறக்கட்டளை]] தொடங்கப்பட்டது.
வரிசை 89:
அந்த அறக்கட்டளையை, அப்போதைய பிரதமர் [[துன்]] [[மகாதீர் பின் முகமது]] தொடக்கி வைத்தார். மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக, பெர்கிம் ({{lang-ms|Perkim}}) எனும் ஓர் அமைப்பை உருவாக்கினார். [[1969]] முதல் பத்து ஆண்டுகளுக்கு, அதன் தலைவராகவும் இருந்தார்.
 
===உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்===
 
மலேசிய மக்களின் நலத்திற்கும், வளத்திற்கும் நீண்ட காலம் அர்ப்பணிப்புகள் செய்து வந்துள்ளார். அவர் பிறந்த ஊரில் உபைதுல்லா அறக்கட்டளையை நிறுவி மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக நடைபெற உதவிகள் செய்துள்ளார். இவர் மலேசியத் தமிழ் நாளிதழ்களில் எழுதி வந்த "நமது நாடு நம் மக்கள்" என்ற தொடர்க் கட்டுரைகள், இவரின் மலேசிய நாட்டு பற்றுக்கு நல்ல சான்றுகளாகும்.
வரிசை 97:
தவிர, [[ஆறாம் உலகத் தமிழ் மாநாடு]] சிறப்பாக நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்த டான் ஸ்ரீ உபைதுல்லா, நல்ல ஒரு தமிழ் ஆர்வலர். இவர் தாய் தமிழை என்றும் மறக்கவில்லை. இவர் நாவன்மை மிக்க நாவலர், ஆற்றல் மிக்க எழுத்தாளர், தமிழ்ப்பண்ணை என்ற அமைப்பின் நிறுவனத்தின் தலைவரும் ஆவார்.
 
===சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா===
 
'''''சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா உபைதுல்லா''''' என்ற அவருடைய பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் கூடிய குடும்பப் பெயரின் சுருக்கமே, '''''எஸ்.ஓ.கே''.''' எனும் சொற்களாகும். இவரிடம் ''எஸ்'' என்பதும் இல்லை, ''ஓ.கே.'' என்பதும் இல்லை என்று சிலர் சிலேடையாகச் சொல்வார்கள். எடுத்த எடுப்பிலேயே பதில் கூறாமல், சிந்தித்து முடிவு கூறும் அவருடைய பக்குவமே அந்தச் சிலேடைக்கு காரணம் ஆகும்.
வரிசை 103:
மலேசியாவின் மூத்தப் பத்திரிக்கையாளரும், மலேசியத் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் பொறுப்பாசிரியராக இருந்தவருமான [[எம். துரைராஜ்]], டான் ஸ்ரீ உபைதுல்லாவைப் பற்றி இப்படிச் சொல்கிறார். {{cquote| ஒவ்வொரு தடவையும், டான் ஸ்ரீ உபைதுல்லாவுடன், 10 நிமிடம் பேசி விட்டுத் திரும்பினாலும், கருத்துள்ள ஒரு புத்தகத்தை படித்துவிட்டுப் புறப்படுவதுபோல் இருக்கும்...}}
 
===நடிகர் திலகம் சிவாஜி கணேசன்===
 
கோலாலம்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றிய இவர், அதைப் புதுப்பித்து விரிவுப்படுத்தினார். மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்திலும் 47 ஆண்டுகள் தலைமைப் பொறுப்புகளை வகித்தார் 'பேங்க் பூமி புத்ரா' எனும் பூமிபுத்ரா வங்கியிலும், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திலும் இயக்குனராகச் சேவையாற்றியுள்ளார்.
வரிசை 109:
மலேசியாவுக்கு வரும் தமிழகக் கலைஞர்களை வரவேற்று உபசரித்து வரவேற்பதில் முன்னிலை வகித்து வந்ததாக, பல தென்னிந்திய நடிகர்கள் புகழாரம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]].
 
===லட்டு பிரியர்===
 
டான் ஸ்ரீ உபைதுல்லா ஒரு லட்டு பிரியர். எங்கேயாவது லட்டைப் பார்த்து விட்டால், ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்க மாட்டார். இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாதுதான்... என்ன செய்வது... என்று சொல்லித் தலையை ஆட்டிக் கொள்வார். அவர் சாதித்தவை அதிகம் என்பதால், சகாப்த மனிதராக மலேசியாவில் இன்றும் போற்றப்படுகிறார். [[2009]]இல், தம்முடைய 93வது வயதில், இந்த தபால்தலை நாயகன் இறைவனடி சேர்ந்தார்.
"https://tamilar.wiki/w/உபைதுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது