எத்திலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
வரிசை 72:
[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]] [[ஐரோப்பா]]விலும் 90% எத்திலீன் எத்திலீன் ஆக்சைடு, எத்திலீன் டைகுளோரைடு, எத்தில்பென்சீன், பாலியெத்திலீன் போன்றவற்றை உற்பத்தி செய்யவே பயன்படுத்தப்படுகிறது <ref name="inchem">{{cite web|url=http://www.inchem.org/documents/sids/sids/74851.pdf|format=PDF|title=OECD SIDS Initial Assessment Profile — Ethylene|publisher=inchem.org|accessdate=2008-05-21|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924051942/http://www.inchem.org/documents/sids/sids/74851.pdf|url-status=dead}}</ref>. எத்திலீன் ஈடுபடும் வினைகளில் பெரும்பாலானவை எலக்ட்ரான்கவர் கூட்டு வினைகளாகும்.
 
=== பலபடியாதல் வினை ===
 
உலக எத்திலீன் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட எத்திலீன் பாலி எத்திலீன் தயாரிக்கவே பயன்படுகின்றது. பாலியெத்திலீன் பாலியெத்தீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நெகிழியாகும். பைகள் தயாரிக்க, பொட்டலம் கட்ட, குப்பைத் தொட்டிகள் தயாரிக்க என பல்வேறு பொருட்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சில்படிமமாதல் முறையில் தயாரிக்கப்படும் நேரியல் ஆல்பா ஒலிபீன்களைப் பயன்படுத்தி அழுக்கு நீக்கிகள், நெகிழியாக்கிகள், செயற்கை உயவுப் பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், பாலி எத்திலீன் தயாரிக்கப் பயன்படும் இணை ஒருமங்கள் ஆகியன தயாரிக்கப்படுகின்றன <ref name="inchem" />.
 
=== ஆக்சிசனேற்றம் ===
 
எத்திலீனை ஆக்சிசனேற்றம் செய்து எத்திலீன் ஆக்சைடு தயாரிக்கிறார்கள். ஈத்தாக்சிலேற்றம் மூலம் பரப்பியங்கிகள், அழுக்கு நீக்கிகள் தயாரிக்க உதவும் முக்கியமான மூலப்பொருளாக எத்திலீன் பயன்படுகிறது, எத்திலீன் ஆக்சைடை நீராற்பகுத்து எத்திலீன் கிளைக்கால் தயாரிக்கப்படுகிறது. இது வாகன் உறைதல் தடுப்பியாகவும், உயர் மூலக்கூறு எடை கிளைக்கால்கள் தயாரிக்கவும், கிளைக்கால் எசுத்தர்கள் மற்றும் பாலியெத்திலீன் டெரிப்தாலேட்டுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
பலேடியத்தின் முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்யும்போது எத்திலீன் அசிட்டல்டிகைடைக் கொடுக்கிறது. இச்செயல்முறை ஒரு முக்கியமான தொழில்துறை செயல்முறையாகக் கருதப்படுகிறது <ref>{{cite book|last=Elschenbroich|first=C.|author2=Salzer, A.|title=Organometallics : A Concise Introduction|edition=2nd|publisher=Wiley-VCH|location=Weinheim|year=2006|isbn=3-527-28165-7|series=}}</ref>.
 
=== ஆலசனேற்றம் மற்றும் ஐதரோ ஆலசனேற்றம் ===
 
எத்திலீன் டைகுளோரைடு, எத்தில் குளோரைடு, எத்திலீன் டைபுரோமைடு போன்ற சேர்மங்கள் எத்திலீனை ஆல்சனேற்றம் மற்றும் ஐதரோ ஆலசனேற்றம் செய்யும்போது இடைநிலை விளைபொருள்களாக உருவாகின்றன. மேலும் எத்திலீனை ஆக்சிகுளோரினேற்றம் செய்யும்போது [[பாலிவினைல் குளோரைடு]], டிரைகுளோரோ எத்திலீன், பெர்குளோரோ எத்திலீன், மெத்தில் குளோரோபார்ம், பாலிவினைலிடின் குளோரைடு, எத்தில் புரோமைடு மற்றும் இணைபலபடிகள் முதலானவற்றை தயாரிக்கமுடியும்<ref name=Keystone/>.
 
=== ஆல்கேலேற்றம் ===
 
எத்திலீனை ஆல்கைலேற்றம் செய்யும்போது இடைநிலைப் பொருளாக எத்தில்பென்சீன் தோன்றுகிறது. இது சிடைரின் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும். சிடைரினைக் கொண்டு பாலிசிடைரின் தயாரிக்கலாம். இதை பொட்டலம் கட்டவும், மின்காப்பாகவும்பயன்படுத்துகிறார்கள். சிடைரின் பியூட்டாடையீன் இரப்பர் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. எத்தில் தொலுயீன், எத்தில் அனிலீன், 1,4- எக்சா டையீன் மற்றும் அலுமினியம் ஆல்கைல்கள் போன்றவற்றை சிறு அளவில் தயாரித்துக் கொள்ளவும் இது பயன்படுகிறது. இவற்றை தயாரிக்கும்போது பாலிசிடைரின், நிறைவுறா பாலியெசுட்டர்கள், டெர் பாலிமர்கள் போன்றவை இடைநிலை பொருள்களாகத் தோன்றுகின்றன<ref name=Keystone>{{Cite book | last=Kniel | first=Ludwig |author2=Winter, Olaf |author3=Stork, Karl | title=Ethylene, keystone to the petrochemical industry | year=1980 | publisher=M. Dekker | location=New York | isbn=0-8247-6914-7 | pages=}}</ref>.
"https://tamilar.wiki/w/எத்திலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது