ஒலியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி |
No edit summary |
||
வரிசை 11:
ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. [[பாய்மம்|பாய்மங்களில்]], அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை [[நெடுக்கலை]], [[குறுக்கலை]] அல்லது [[மேற்பரப்பலை]] ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.
நீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவும் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதுகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி [[செவிப்புலத் தொடக்கம்]] (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது [[பருமன் வரிசை]]கள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் [[உரப்பு]] [[ஒலியழுத்த மட்டம்]] எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் [[டெசிபெல்]] என்னும் அலகில் அளக்கப்படுகின்றது.
இயற்பியலாளரும், ஒலியியற் பொறியாளரும், ஒலியழுத்த மட்டத்தை [[அதிர்வெண்]] சார்பில் குறிப்பிடுவதுண்டு. மனிதருடைய காதுகள் ஒலிகளை இதே அடிப்படையில் புரிந்துகொள்வதும் இதற்கான ஒரு காரணமாகும். ஒலியில் உயர்ந்த [[சுருதி]], தாழ்ந்த சுருதி என நாம் உணர்வது ஒரு செக்கனுக்குக் கூடிய அல்லது குறைவான சுற்று எண்ணிக்கைகளல் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே ஆகும். பொதுவான ஒலியியல் அளவீட்டு முறைகளில், ஒலியியல் சைகைகள் நேர அளவில் மாதிரிகளாகக் குறிக்கப்படுகின்றன. இவை பின்னர் [[எண்மப் பட்டை]]கள் (octave band), [[நேரம் - அதிர்வெண் வரைபு]]கள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு வடிவங்களும், ஒலியைப் பகுப்பாய்வு செய்யவும், ஒலியியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன.
| |||