மரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மாரத்தான் நோக்கி நகர்த்தல்
Removed redirect to மாரத்தான்
அடையாளம்: Removed redirect
வரிசை 1:
 
#REDIRECT[[மாரத்தான்]]
 
{{Infobox athletics event
|event= மரதன்
|image= Berlin marathon.jpg
|image_size= 250px
|caption= பெர்லின் மராத்தான் போட்டி, 2007
|WRmen= {{flagicon|KEN}} எலியட் கிப்சோக்கி 2:01:39 (2018)
|ORmen= {{flagicon|KEN}} சாமவேல் வான்சிரு 2:06:32 (2008)
|CRmen= {{flagicon|KEN}} அபேல் கிருய் 2:06:54 (2009)
|WRwomen= {{flagicon|KEN}} பிரிஜிட் கோசுகிய் 2:14:04 (2019)
|ORwomen= {{flagicon|ETH}} திக்கி ஜெலானா 2:23:07 (2012)
|CRwomen= {{flagicon|GBR}} பௌலா ராட்கிளிப் 2:20:57 (2005)
}}
 
[[படிமம்:USMC Marathon.jpg|thumb|right|அண்மைய கால மரதன் ஓட்ட வீரர்கள்]]
 
'''மரதன்''' என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 [[கிலோமீட்டர்]] ஆகும்.<ref name=IAAF>{{cite web|url=http://www.bcathletics.org/main/rr_iaaf.htm|title=IAAF Competition Rules for Road Races|year=2009|publisher=International Association of Athletics Federations|access-date=1 November 2010|archive-url=https://web.archive.org/web/20150923182842/http://www.bcathletics.org/main/rr_iaaf.htm|archive-date=23 September 2015|url-status=dead}}</ref> இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மரதன் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மரதன் போட்டிகளும் உடன் நடைபெறும்.
 
== வரலாறு ==
 
[[படிமம்:Greek vase with runners at the panathenaic games 530 bC.jpg|thumb|right|பண்டைய கிரேக்கத்தில் ஓட்ட வீரர்கள்]][[படிமம்:1896 Olympic marathon.jpg|thumb|left|1896 ஒலிம்பிக் போட்டி மரதன் ஓட்ட வீரர்கள்]]
கி.மு. 490ல் நடந்த [[மரதன் போர்|மரதன் போரில்]] பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, [[பிலிப்பிடீசு]] என்ற கிரேக்க வீரன், மரதன் நகரில் இருந்து [[ஏதென்ஸ்|ஏதென்சுக்கு]], இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிச் செத்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. [[எரோடோட்டசு]] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் ஆவார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி. பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" ''On the Glory of Athens'' என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்புப்படி மரதன் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும்.
 
மரதன் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மரதன் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
== தொலைவு ==
தொடக்க காலத்தில், மரதன் போட்டிகளின் ஓட்டத் தொலைவு தீர்மானிக்கப்படவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே தடத்தில் ஓடுகிறார்கள் என்பது தான் முக்கியமாக கருதப்பட்டது. தொடக்க கால ஒலிம்பிக் மரதன் போட்டிகளின் ஓட்டத் தொலைவு, போட்டி நடக்கும் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தது.
 
{| align="right" class="wikitable" style="margin-left:15px;"
! ஆண்டு
! தொலைவு (கி. மீ)
! தொலைவு (மைல்)
|-
| 1896 || 40 || 24.85
|-
| 1900 || 40.26 || 25.02
|-
| 1904 || 40 || 24.85
|-
| 1906 || 41.86 || 26.01
|-
| 1908 || 42.195 || 26.22
|-
| 1912 || 40.2 || 24.98
|-
| 1920 || 42.75 || 26.56
|-
| 1924 முதல் || 42.195 || 26.22
|}
 
தற்போது உறுதியாக கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டில் [[தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்]] என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
 
== இதனையும் காண்க ==
* [[சென்னை மரதன்]]
* [[புனே பன்னாட்டு மரதன்]]
* [[மும்பை மரதன்]]
* [[பாஸ்டன் மரதன்]]
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.arrs.net/YR_Mara.htm Yearly marathon rankings] {{Webarchive|url=https://web.archive.org/web/20140703154910/http://www.arrs.net/YR_Mara.htm |date=2014-07-03 }} (Association of Road Racing Statisticians)
* [http://www.arrs.net/MaraList.htm List of marathons 1940–present] {{Webarchive|url=https://web.archive.org/web/20120518005121/http://www.arrs.net/MaraList.htm |date=2012-05-18 }} (Association of Road Racing Statisticians)
* [http://www.olympicgamesmarathon.com/ A site entirely dedicated to the Olympic marathons]
* [http://www.youtube.com/watch?v=gSHQMB1L8oc Marine Corps Marathon race director discusses why marathons have become so popular (video)]
* [http://ctc.coin.org/marathon.html The History of the Marathon] {{Webarchive|url=https://web.archive.org/web/20100825071605/http://ctc.coin.org/marathon.html |date=2010-08-25 }}
*[https://www.bbc.com/tamil/resources/idt-2f1afe58-2f16-4240-a4f1-13f783f57a7b மரதன் சாம்பியன்களை தூண்டும் உணவு]
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
 
[[பகுப்பு:தடகள விளையாட்டுகள்]]
[[பகுப்பு:மரதன்கள்]]
"https://tamilar.wiki/w/மரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது