பஞ்சாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alangar Manickam
சிNo edit summary
 
"{{Hinduism small}} thumb|வாக்கிய பஞ்சாங்கம் '''பஞ்சாங்கம்''' (''Panchangam'') அல்லது '''ஐந்திறம்''' என்பது இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 16:
என்பனவாகும்.
 
=== வாரம் ===
இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:
# [[ஞாயிற்றுக்கிழமை]]
வரிசை 29:
ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும்.
 
=== திதி ===
திதி என்பது [[சந்திரன்|சந்திரனின்]] பூமியைச் சுற்றியுள்ள [[சுற்றுப் பாதை]]யின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். [[அமாவாசை]]யில் இருந்து வரையான [[வளர்பிறை]]க் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி [[சுக்கில பட்சம்|சுக்கில பட்சத்]] திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி [[கிருஷ்ண பட்சம்|கிருஷ்ண பட்சத்]] திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:
{| class="wikitable sortable" border="1"
வரிசை 63:
|}
 
=== கரணம் ===
ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
 
வரிசை 79:
# கிமிஸ்துக்கினம்
 
=== நட்சத்திரம் ===
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட [[இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்|27 பகுதிகளைக்]] குறிக்கும். [[சந்திரன்]] [[பூமி]]யைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:
{| class="wikitable" border="1"
வரிசை 101:
|}
 
=== யோகம் ===
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி [[யோகம் (பஞ்சாங்கம்)|யோகம்]] எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
 
வரிசை 243:
பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை
 
=== சௌரமான முறை ===
இம்முறை சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை
 
==== சௌர ஆண்டு கணக்கீடு முறை ====
ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஓராண்டு என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.
பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம்
 
==== சாயன ஆண்டு கணக்கீடு முறை ====
சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.
பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு)
 
=== சந்திரமான முறை ===
இம்முறை சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஓராண்டு என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும்.
பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்)
 
=== பிற ஐந்திறன் முறைகள் ===
* திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரிசை 273:
பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
 
=== திருக்கணித ஐந்திறன் (பஞ்சாங்கம்) ===
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனைத் தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.
திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.
திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
 
=== வாக்கிய பஞ்சாங்கம் ===
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
 
"https://tamilar.wiki/w/பஞ்சாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது