கான்கோர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up, replaced: பிரிட்டிஷ் → பிரித்தானிய (4)
 
"{|{{Infobox Aircraft Begin |name= கான்கோர்டு |image=Concorde.planview.arp.jpg |caption= }}{{Infobox Aircraft Type |type= மீயொலிவேகப் பயணிகள் வானூர்தி |manufacturer= பிரித்தானிய வானூர்தி நிறுவனம் (பிஏசி, தற்போத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 30:
==உருவாக்கம்==
[[File:ConcordePrototype.JPG|thumb|right|ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய போர் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தயாரிப்புக்கு முந்தைய கான்கோர்டு வடிவம்]]
===கருத்துப் படிவம்===
[[படிமம்:02.03.69 1er vol de Concorde (1969) - 53Fi1931 - cropped.jpg|thumb]]
1950-களில் [[பிரான்சு]], [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[சோவியத் ஒன்றியம்]] ஆகிய நாடுகள் [[ஒலி]] மிஞ்சு வேக பயணிகள் வானூர்திகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டன. பிரித்தானியாவின் பிரிஸ்டல் வானூர்தி நிறுவனமும் [[பிரான்சு|பிரான்சின்]] சட் வானூர்தி நிறுவனமும் அவ்வகை வானூர்திகளை வடிவமைத்துக் கொண்டிருந்தன, அவை முறையே வகை-223 , சுப்பர் கேரவெல் எனவும் அழைக்கப்பட்டன. இவ்விரண்டு திட்டப்பணிகளுக்கான பெருமளவு நிதியுதியை அவற்றின் அரசாங்கங்களே செய்தன.<ref name="earlyhist">[http://www.concordesst.com/history/eh1.html#a "Early History."] ''concordesst.com''. Retrieved: 8 September 2007.</ref> பிரித்தானியாவின் வடிவமைப்பு சுமார் 100 பேரைச் சுமந்து செல்லும் முக்கோண வடிவிலான மெல்லிய-இறக்கை கொண்டது.<ref name = 'deltawing'>{{cite journal |url = http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A6825061AH&q=Concorde+Delta&uid=788872723&setcookie=yes |title = The development of the slender delta concept |journal = Aircraft Engineering |author = Maltby, R.L. |volume = 40 |year = 1968 |access-date = 2010-12-14 |archive-date = 2012-04-04 |archive-url = https://web.archive.org/web/20120404173047/http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A6825061AH&q=Concorde+Delta&uid=788872723&setcookie=yes |url-status = dead | = https://web.archive.org/web/20120404173047/http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A6825061AH&q=Concorde+Delta&uid=788872723&setcookie=yes }}</ref> இது [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலின்]] ஒரு கரையிலிருந்து மற்ற கரைக்குப் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டது. [[பிரான்சு]] நடுத்தர-தூரம் செல்லும் வகையில் வடிவமைத்துக் கொண்டிருந்தது.<ref name="earlyhist"/>
வரிசை 36:
1960-களின் தொடக்கத்திலேயே இருவித வடிவமைப்புகளும் உற்பத்திக்குத் தயாராய் இருந்தன. ஆனால், [[உற்பத்தி]]ச் செலவு மிக அதிகமாக இருந்ததால் [[பிரித்தானியா]] சர்வதேச ஒத்துழைப்பைக் கோரியது.<ref name="earlyhist"/> [[பிரான்சு]] மட்டுமே இதில் விருப்பம் காட்டியது. [[பிரித்தானியா]]வுக்கும் [[பிரான்சு]]க்கும் இடையேயான வணிக ஒப்பந்தமாக அல்லாமல் அவற்றுக்கிடையேயான சர்வதேச உடன்பாடாகவே ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் எந்தக் காரணத்தினாலும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேர்ந்தால், விலகும் நாடு மற்ற நாட்டுக்கு பெரும் தொகையைத் தருமாறு ஒப்பந்தம் எழுதப்பட்டது.<ref name="earlyhist"/> இச்சட்டக்கூறு [[பிரித்தானியா]]வின் விருப்பத்துக்கேற்ப சேர்க்கப்பட்டது. ஒப்பந்தம் 28-நவம்பர்-1962 ல் கையெழுத்தானது. இடைப்பட்ட காலத்தில் வானூர்திகள் வடிவமைத்த இரு நிறுவனங்களும் புதிய நிறுவனங்களுடன் சேர்க்கப்பட்டு புதிய பெயரிடப்பட்டன. கான்கோர்டு திட்டம் பிரித்தானிய வானூர்தி நிறுவனத்துக்கும் (British Aircraft Corporation) ஏரோசிப்பேசியால் (Aérospatiale) நிறுவனத்துக்குமிடையே முதலில் ஏற்பட்டதாகும்.<ref name="earlyhist"/> இக்கூட்டமைப்பு முதலில் ஒரு [[நெடுவீச்சு வானூர்தி]]யும், ஒரு [[சிறுவீச்சு வானூர்தி]]யும் தயாரிக்கத் திட்டமிட்டது. [[சிறுவீச்சு வானூர்தி]]யை வாங்க மற்ற நிறுவனங்கள் விருப்பம் காட்டாததால் அதன் தயாரிப்பு கைவிடப்பட்டது. [[நெடுவீச்சு வானூர்தி]]க்கு 100 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது <ref name="earlyhist"/><ref>{{cite news |url= http://www.time.com/time/magazine/article/0,9171,903850,00.html |title= Aerospace: Pan Am's Concorde Retreat |publisher= ''Time'', 12 February 1973 |date= 12 February 1973 |access-date= 12 பிப்ரவரி 2012 |archivedate= 27 அக்டோபர் 2010 |archiveurl= https://web.archive.org/web/20101027163018/http://www.time.com/time/magazine/article/0,9171,903850,00.html |deadurl= dead }}</ref>. இப்வொப்பந்தங்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் அற்றவை எப்போது வேண்டுமானாலும் தண்டத்தொகை செலுத்தாமல் விலகிக்கொள்ளலாம்.
 
===பெயரிடல்===
[[File:Concorde on Bristol.jpg|thumb|கான்கோர்டின் இறுதிப்பயணம், 26 நவம்பர் 2003]]
இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையையும் இணக்கத்தையும் ஒற்றுமையையும் குறிக்கும் வகையில் விமானத்துக்கு "கான்கோர்டு" எனப் பெயரிடப்பட்டது. கான்கோர்டு என்பதன் பொருள் 'இணக்கம்', 'ஒன்றியம்' மற்றும் 'உடன்பாடு' என்பதாகும். பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் concorde (IPA: [kɔ̃kɔʁd]), ஆங்கிலத்தில் அதற்கு நிகரான சொல் concord (IPA: /ˈkɒŋkɔrd/).
 
===சோதனை===
[[File:Startende Concorde.jpg|thumb|right|கிளம்பும் கான்கோர்டு]]
1965-[[பிப்ரவரி]]யில் மூல முன் மாதிரிகள் கட்டுமானம் தொடங்கியது. ஒரு [[வானூர்தி]] (001) [[பிரான்சு|பிரான்சிலும்]] மற்றொரு வானூர்தி (002) [[பிரித்தானியா]]விலும் கட்டப்பட்டன. 2,மார்ச்-1969 ல் கான்கோர்டு-001 சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் வானோடி ஆந்த்ரே துர்காட் ஆவார்.<ref>{{cite web |url = http://news.google.co.uk/newspapers?id=KXoyAAAAIBAJ&sjid=GLkFAAAAIBAJ&pg=6573,360672&dq=concorde&hl=en |title = Pilot Says Concorde Flight "Perfect" |publisher=Montreal Gazette |date = 1 March 1969}}</ref> முதல் மீயொலி வேகப் பயணம் 1-அக்டோபரில் நிகழ்ந்தது.<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F30C1EFC3454127B93C0A9178BD95F4D8685F9 |title = Concorde Tops Speed of Sound for 9 Minutes on a Test Flight |work=New York Times |date = 2 October 1969}}</ref> ஐக்கிய ராச்சியத்தின் கான்கோர்டு விமானம் ஏப்ரல்-9,1969 ல் சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் வானோடி பிரையன் டிரப்சா ஆவார்.<ref>{{cite news |url = http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/2/newsid_2514000/2514535.stm |title = 1969: Concorde flies for the first time |publisher=BBC News |accessdate = 8 July 2007 | date=2 March 1969}}</ref><ref>{{cite news |url = http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/584606362.html?dids=584606362:584606362&FMT=ABS&FMTS=ABS:AI&type=historic&date=Apr+10%2C+1969&author=&pub=Chicago+Tribune&desc=Concorde+002+Makes+1st+Flight&pqatl=google |title = Concorde 002 Makes 1st Flight |work = Chicago Tribune |date = 10 April 1969 |first = Edward |last = Rohrbach |access-date = 15 டிசம்பர் 2010 |archivedate = 25 ஜூலை 2012 |archiveurl = https://web.archive.org/web/20120725063900/http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/584606362.html?dids=584606362:584606362&FMT=ABS&FMTS=ABS:AI&type=historic&date=Apr+10%2C+1969&author=&pub=Chicago+Tribune&desc=Concorde+002+Makes+1st+Flight&pqatl=google |deadurl = dead }}</ref> இவ்வானூர்தி திட்டம் வளர்ச்சியடைந்ததில் கான்கோர்டு-001 செயல்முறை விளக்க மற்றும் விற்பனை முறை பயணத்தை 4-செப்டம்பர்,1971 அன்று மேற்கொண்டது.<ref>{{cite news |url =http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/597531692.html?dids=597531692:597531692&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Sep+05%2C+1971&author=&pub=Chicago+Tribune&desc=Concorde+001+Makes+Its+First+Atlantic+Crossing&pqatl=google |title = Concorde 001 Makes Its First Atlantic Crossing |work=Chicago Tribune |date = 5 September 1971}}</ref><ref>{{cite web |url =http://news.google.co.uk/newspapers?id=VCY0AAAAIBAJ&sjid=2uAIAAAAIBAJ&pg=2521,1962837&dq=concorde&hl=en |title = Anglo-French Concorde Lands in Brazil to begin Week of Demonstration Flights |publisher=Bangor Daily News |date = 7 September 1971}}</ref> அப்பயணமே முதல் [[அட்லாண்டிக் கடல்]] தாண்டிய பயணமாகும். செயல்முறை விளக்கப் பயணத்தை, கான்கோர்டு-002 2,சூன்-1972 ல் மேற்கொண்டது. இதன் பயணம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றது.<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F70D10F73B591A7493C1A9178DD85F468785F9 |title = Concorde Prototype Begins 10-Nation Tour; Britain Shows Optimism For Supersonic Aircraft |work=New York Times |date = 3 June 1972 | first=Michael | last=Stern}}</ref> முதலில் கான்கோர்டு வானூர்திகள் பல [[வானூர்தி]] நிறுவனங்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றபோதும் பல்வேறு காரணங்களால் இதற்கு கிடைத்த உற்பத்தி ஆணைகள் திரும்பப் பெறப்பட்டன. [[1973 எண்ணெய் நெருக்கடி]]யும் [[வானூர்திப் போக்குவரத்து]] நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடிகளும் [[பாரிஸ்|பாரிசு]] வானூர்திக் கண்காட்சியில் கான்கார்டின் போட்டி வானூர்தியான சோவியத்தின் [[டுபோலேவ் டு-144]] (Tupolev Tu-144) தீநேர்வும் [[சுற்றுச்சூழல்]] கவலைகளும் தயாரிப்பு ஆணைகள் திரும்பப் பெறப்படக் காரணமாயின. 1976 வாக்கில் [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]], [[பிரான்சு]], [[சீனா]], [[ஈரான்]] ஆகிய நாடுகளே வாங்கக்கூடிய நாடுகளாக தோன்றின.<ref>{{cite web |url = http://news.google.co.uk/newspapers?id=XJcUAAAAIBAJ&sjid=9a0DAAAAIBAJ&pg=4991,607322&dq=second+generation+concorde&hl=en |title = Concordes limited to 16 |publisher = Virgin Islands Daily News |date = 5 June 1976 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> ஆயினும் இறுதியில் [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டன்]] மற்றும் [[பிரான்சு]] நாடுகளின் வான்போக்குவரத்து நிறுவனங்கள் மட்டுமே இவ்வானூர்தியை வாங்கிப் பயன்படுத்தின. அதில் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவு லாபத்தை வானூர்தி நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பொருட்டு எடுத்துக் கொண்டன.<ref>{{cite web |url = http://www.britishairways.com/concorde/faq.html#6 |title = Payments for Concorde |publisher=British Airways |accessdate = 2 December 2009}}</ref>
வரிசை 50:
 
==வடிவமைப்பு==
===சிறப்பம்சங்கள்===
[[File:ConcordeCockpitSinsheim.jpg|thumb|right|கான்கோர்டு வானோடியறையின் உருவமைப்பு]]
கான்கோர்டு, நான்கு [[ஒலிம்பஸ்]] எந்திரங்களைக் கொண்ட [[முக்கோண இறக்கை]] கொண்ட வானூர்தியாகும். ஒலிம்பஸ் எந்திரங்கள் முதலில் அவ்ரோ வல்கன் குண்டுவீசும் போர்வானூர்திக்காக தயாரிக்கப்பட்டவையாகும். கான்கோர்டு வானூர்தியே முதன் முதலில் வான்கல மின் கட்டுப்பாட்டு முறையில் (fly-by-wire) வடிவமைக்கப்பட்ட பயணிகள் வானூர்தியாகும்<ref name='elecflybywire' />. அது கலப்பு மின் சுற்றுகளை பயன்படுத்தியது. இத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளர் பியர்ரி சாத்ர், அவர் உதவியாளர் சர் ஆர்கிபால்த் ரஸ்ஸல் <ref>{{cite news |first = Peter |last = Masefield |title = Obituary: Sir Archibald Russell |publisher=''The Independent,'' 1 July 1995|location=UK |date = }}</ref>.
=== [[தொழினுட்பம்]] ===
கான்கோர்டு பின்வரும் தொழினுட்பங்களைக் கொண்டிருந்தது:
 
==== உயர் வேகம் ====
 
* இரட்டை முக்கோண வடிவ இறக்கை
வரிசை 64:
* குனியும்-மூக்குப் பகுதி - தரை இறங்கும் போது ஓடுபாதையைத் தெளிவாகக் காணும்பொருட்டு
 
==== எடை-குறைப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் ====
 
* மாக் 2.04 (2,170 கிமீ/மணி) வேகத்தில் சிக்கனத் தொடர் பயணம்<ref>[http://www.concordesst.com/performance.html "Concorde performance."] ''concordesst.com''. Retrieved: 2 December 2009.</ref> - இவ்வேகத்தில் சிக்கனமாக எரிபொருள் உட்கொள்ளும் (மீயொலி வேகத்தில் குறைந்த இழுவை இவ்வேகத்தில் செயல்படும்; எனினும் இதற்கும் அதிகமான வேகத்தில் சுழல்தாரை எந்திரம் மீத்திறனுடன் செயல் புரியும்.)<ref>{{cite web |url = http://ocw.mit.edu/ans7870/16/16.unified/propulsionS04/UnifiedPropulsion8/UnifiedPropulsion8.htm |title = Unified propulsion 8 |publisher=MIT |accessdate =8 December 2010}}</ref>)
வரிசை 77:
* துணைத் திறனகம் இல்லை. கான்கோர்டு பெரும் வானூர்தி நிலையங்களில் மட்டும் இயக்கப்படுமாதலால் அங்கே தரை புறப்படுவிப்பு வாகனங்கள் இருக்கும்<ref>Owen 2001, p. 206.</ref>.
 
===அழுத்த மையத்தின் நகர்வு===
[[File:Concorde fuel trim.svg|thumb|upright|கான்கோர்டில் எரிபொருள் கடத்தப்படும் நிலைகள் (A) கிளம்பும் போது (B) - சீரான பறப்பில் உள்ள போது (C) - மீயொலி வேகத்தில்லிருந்து குறைவான வேகத்திற்கு வரும் போது]]
[[File:2001concordewingduxfordJM.jpg|thumb|G-AXDN, Duxford, close up of pre-production engine nozzles. The nozzle/thrust reverser design was altered for production.]]
எந்தவொரு வானூர்தியும் அதனதன் நெருக்கடி [[மேக் எண்|மாக் எண்ணை]] விட அதிக வேகத்தில் செல்லத் துவங்கும்போது அவ்வானூர்தியின் அழுத்த மையம் பின்னோக்கி நகரும். அவ்வாறு நகர்வதால் விமானத்தின் மூக்கு கீழ்செல்லுமாறு திருப்புவிசை செயல்படும். ஆகவே இந்த நகர்வை பெருமளவு கட்டுப்படுத்தம் வண்ணம் பொறியாளர்கள் இவ்வானூர்தி இறக்கையை வடிவமைத்தனர். இருப்பினும் 2 மீட்டர் அளவுக்கு இந்த நகர்வு இருந்தது. இது இறக்கைகளில் நேர்த்திக் கட்டுப்பாடுகள் அமைப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், வானூர்தி மீயொலி வேகத்தில் பறக்கும் காரணத்தால் அத்தகைய வடிவமைப்பு மிக அதிக இழுவையை உருவாக்கியிருக்கும். ஆகையால், எரிபொருள் இருக்கும் இடத்தை முடுக்கத்தின் போது மாற்றுவதன் மூலம் நிறை மையம் மாற்றப்பட்டது. அவ்வாறு நிறை மையம் மாற்றப்படுவதன் மூலம் நேர்த்திக் கட்டுப்பாடு செய்யப்பட்டது<ref name = 'fueltrim'>{{cite journal |doi = 10.1108/eb035344 |url = http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do?contentType=Article&hdAction=lnkpdf&contentId=1682642 |title = Flight Refuelling Limited and Concorde: The fuel system aboard is largely their work |journal = ''Aircraft Engineering and Aerospace Technology'' |publisher = MCB UP |volume = 48 |issue = 9, September 1976 |issn = 0002-2667 |pages = 20–21 |date = |access-date = 2011-08-02 |archive-date = 2010-02-20 |archive-url = https://web.archive.org/web/20100220022414/http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do?contentType=Article |url-status = dead }}</ref>.
 
===எந்திரம்===
 
பொருளாதார நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த, கான்கோர்டு நெடுந்தொலைவு பறக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. அதற்குகந்த வல்லமை கொண்ட எந்திரம் தேவை. முதலில், மீயொலி வேகத்தில் செல்ல விசிறி-சுழல் தாரை எந்திரம் பயன்படுத்துவது ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் குறுக்கு வெட்டு பரப்பளவு அதிகம் ஆகையால் மிக அதிக அளவு இழுவை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், அதன் பயன்பாடு தவிர்க்கப்பட்டது. [[சுழல் தாரை]] எந்திரங்களே தேவைகளை நிறைவு செய்யும் எனத் தெரிவுசெய்யப்பட்டது <ref>Birtles, Philip. ''Concorde'', pp. 62–63. Vergennes, Vermont: Plymouth Press, 2000. {{ISBN|1-882663-44-6}}.</ref>. இத்திட்டத்திற்காக இரட்டைக் குழல் ரோல்ஸ் ராய்ஸ்/ச்நேக்மா ஒலிம்பஸ் 593 எந்திரம் மேம்படுத்தப்பட்டது. இவ்வெந்திரம் முதலில் [[அவ்ரோ வல்கன்]] குண்டு போடும் வானூர்திக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் பி.ஏ.சி. டி.எஸ்.ஆர்-2 தாக்கு-குண்டுவீசும் வானூர்திக்காக பின்னெரிதலோடு மேம்படுத்தப்பட்டது<ref name="wingweb">[http://www.wingweb.co.uk/engines/Olympus593_MK610.html "Rolls Royce Olympus history."] {{Webarchive|url=https://web.archive.org/web/20080503221132/http://www.wingweb.co.uk/engines/Olympus593_MK610.html |date=2008-05-03 }} ''wingweb.co.uk''. Retrieved: 15 January 2010.</ref>.
வரிசை 94:
கான்கோர்டு எந்திரத்தில் வானூர்தி கிளம்பும்போதும் குறைஒலிவேகத்திலிருந்து மீயொலி வேகத்திற்கு (இடைஒலி பயணப் பகுதி - இதில் மாக்-0.95 லிருந்து மாக்-1.7 வரை) செல்லும்போதும் [[பின்னெரியூட்டி|பின்னெரிதல்]] பயன்படுத்தப்பட்டது. மற்ற எல்லா நேரங்களிலும் பின்னெரிதல் அணைத்துவைக்கப்பட்டிருக்கும்<ref>{{cite journal |url = http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A9110958AH&q=Rolls-Royce%2FSnecma+Olympus+593&uid=788858323&setcookie=yes |title = The Rolls Royce/SNECMA Olympus 593 engine operational experience and the lessons learned |publisher = ''European Symposium on the Future of High Speed Air Transport'' |author = Ganley, G. |coauthors = G. Laviec |year = 1989 |pages = 73–80 |accessdate = 2011-06-30 |journal = |archive-date = 2011-09-21 |archive-url = https://web.archive.org/web/20110921053303/http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A9110958AH&q=Rolls-Royce%2FSnecma+Olympus+593&uid=788858323&setcookie=yes |url-status = dead }}</ref>. தாரை எந்திரங்கள் குறைவான வேகங்களில் செல்லும்போது மிகவும் திறமற்ற முறையில் எரிபொருளைப் பயன்படுத்தும். ஓடுதளத்திற்குச் செல்லும்போது நடையோட்டத்தில் தோராயமாக 2டன் எடையுள்ள எரிபொருளை (கிட்டத்தட்ட கான்கார்டில் நிரப்பவல்ல மொத்த எரிபொருள் எடையில் 2%) எரித்துத் தீர்க்கும்<ref>{{cite news |url = http://news.bbc.co.uk/1/hi/business/5195964.stm |title = Are the skies turning green? |publisher=BBC News |first = Joe |last = Lynam |date = 19 July 2006}}</ref>. தரையிறங்கியபின் நடையோட்டத்தில் எரிபொருள் சேமிப்பிற்காக இரண்டு வெளிப்புற எந்திரங்கள் மட்டுமே இயக்கத்திலிருக்கும்.
 
===சூடேற்ற விளைவுகள்===
 
எந்தவொரு [[மீயொலி]] வேக [[வானூர்தி]]யிலும் அதன் எந்திரத்தைத் தவிர்த்து மிகவும் சூடான பகுதி வானூர்தியின் மூக்கு ஆகும். அதிகம் பழக்கமான, விலை குறைவான மற்றும் எளிதில் பயன்படுத்தப்படக்கூடிய "டியூராலுமின்" [[அலுமினியம்|அலுமினிய]] [[உலோகம்|உலோகக் கலவை]]யை பயன்படுத்த [[வானூர்தி]] வடிவமைப்புப் பொறியாளர்கள் முடிவெடுத்தனர். கணக்கிடப்பட்ட வானூர்தி வாழ்நாள் முழுதும் பயனளிக்க வேண்டுமெனின் டியூராலுமின் 260&nbsp;°F (127&nbsp;°C) அளவு வெப்பநிலையை ஏற்க வேண்டும், அதனால் வான்வேகம் மாக் 2.02 வரையிலேயே கான்கார்டை இயக்க முடிந்தது<ref>{{cite journal |doi= 10.2307/3951418 |title= When the SST Is Too Slow... |publisher= Society for Science & the Public |journal= ''Science News'' |first= Jonathan |last= Eberhart |volume= 91 |issue= 22, 3 June 1967 |date= |pages= 528–529 |jstor= 3951418}}</ref>. பயண நேரத்தில் இரு சுழற்சிகளில் சூடேற்றம் மற்றும் குளிர்வித்தலை கான்கோர்டு அடைந்தது. முதலில் பறக்கும் உயரம் அதிகமாக அதிகமாக குளிர்வித்தலையும் அதன் பின்னர் [[மீயொலி]]வேகப் பயணத்தை எட்டும்போது சூடேற்றத்தையும் அடைந்தது. அதேபோல் கீழிறங்கும்போதும் வேகங்குறையும்போதும் இதே சுழற்சி எதிர்த்திசையில் நடைபெற்றது. இதற்கான சோதனை செய்யும் பொருட்டு [[உலோகவியல்]] மாதிரியோடு கூடிய சோதனைக்கூடம் அமைக்கப்பெற்றது. ஒரு முழு அளவிலான இறக்கை தனிப்பட்ட முறையில் அமைக்கப்பெற்ற ஆய்வு அணியில் தொடர்ச்சியாக சூடேற்றமும் குளிர்வித்தலும் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சுழற்சிகள் இடைவெளியில் அந்த ஆய்வணியிலிருந்து [[உலோகம்|உலோக]] மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் நிலை சோதிக்கப்பட்டது<ref>{{cite journal |doi= 10.1108/eb034143 |url= http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do?contentType=Article&hdAction=lnkpdf&contentId=1681441 |title= The Concorde takes shape : Test programme and construction proceeding according to schedule |publisher= MCB UP |journal= ''Aircraft Engineering and Aerospace Technology'' |page= 38 |year= |volume= 38 |issue= 4, 1966 |issn= 0002-2667 |access-date= 2011-08-03 |archive-date= 2010-02-20 |archive-url= https://web.archive.org/web/20100220022414/http://www.emeraldinsight.com/Insight/viewContentItem.do?contentType=Article |url-status= dead }}</ref><ref>{{cite journal |bibcode= 1972NASSP.309..631N |volume= 309 |title= Fatigue Tests on Big Structure Assemblies of Concorde Aircraft |page= 631 |publisher=NASA |year= 1972 |author=N'guyen, V.P. |coauthor= J.P. Perrais}}</ref>.
"https://tamilar.wiki/w/கான்கோர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது